அண்டக் கதிர்

வானியற்பியலில், அண்டக்கதிர் (Cosmic rays; காஸ்மிக் கதிர்கள்) என்பது குறிப்பாகச் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற அணுத் துகள் ஆகும்.[1] இது மின்னூட்டப்பட்ட (charged) நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின்போதுதான் பாசிட்ரானும் பல்வேறு மேசான்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் காணப்படுகின்றன. அண்டவெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாகக் கருதப்படுவதாலும் இப்பெயர் பெற்றன.

துகள் ஆற்றலுடன் (E) அண்டக்கதிர் பாயம்(F)

அண்டக்கதிர்கள், பூமியின் காற்றுமண்டலத்தைத் துளைத்துப் பாதிப்புண்டாக்கவும், நிலப்பரப்பிற்குமே கூடச் செல்லும் அளவிற்கும் சில இரண்டாம் நிலை துகள்களின் தூறலைப் பொழியக்கூடியதாகும். இது முதன்மையான உயர்-ஆற்றல் புரோத்தன்களும், அணுக்கருக்களும் கொண்ட ஒரு விளங்காத தோற்றுவிப்பைக் கொண்டதாக இருக்கிறது. பெர்மி விண்வெளித் தொலைநோக்கியின் மூலம் 2013ல் கிடைக்கப்பெற்ற தகவலானது, முதன்மை அண்டக்கதிர்களின் ஒரு இன்றியமையாத பகுதி, மீவிண்மீன்களின் வெடிப்புச்சிதறல்களின் தோற்றுவிப்பாகக் கருதக்கூறியுள்ளது.[2] ஆயினும், இது மட்டுமே அண்டக்கதிர்களின் ஒரே தோற்றுவிப்பு என கருதயியலாது. செயலுறு அண்டக்கருக்களும் கூட இதன் தோற்றுவிப்பாக இருக்கலாம்.

அண்டக்கதிர்கள் விண்ணில் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறன. இத்துகள்ளில் சில பூமிக்குவரும்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது அவை பூமியின் காற்று மண்டலத்திற்குள் புகுகின்றன. பூமிக்கு வரும் கதிர்களில் இடையே குறைவான அலை நீளத்தையும் அதிகமான அதிர்வெண்களையும் உடையவையாகும். இந்த அணுத்துகள்கள் 'முதல்வகை காஸ்மிக் கதிர்கள்' என்று அழைக்க படுகின்றன. இந்த முதல் வகை அணுத்துகள்கள் காற்று மண்டலத்திற்கு வந்தவுடன் அங்குள்ள உயிர்க் காற்று (ஆக்ஸிஜன்) நீர்க் காற்று (ஹைட்ரஜன்) அணுக்களுடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் புதிய துகள்களை உண்டாக்குகின்றன. மோதல்களினால் உண்டாகிய புதிய துகள்களுக்கு, இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் என்று பெயர். இந்த இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் மேலும் அணுக்களுடன் மோதிமேலும் புதிய துகள்களை உண்டாக்குகின்றன.இவ்வாறு பூமியில் கதிரிய்க்க மழை பொழிகின்றது. பூமியைக் தாக்குகிறது[3].

மேற்கோள்கள்

  1. Sharma (2008). Atomic And Nuclear Physics. Pearson Education India. பக். 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1924-4.
  2. Ackermann, M.; Ajello, M.; Allafort, A.; Baldini, L.; Ballet, J.; Barbiellini, G.; Baring, M. G.; Bastieri, D. et al. (2013-02-15). "Detection of the Characteristic Pion-Decay Signature in Supernova Remnants". Science (American Association for the Advancement of Science) 339 (6424): 807–811. doi:10.1126/science.1231160. Bibcode: 2013Sci...339..807A. http://www.sciencemag.org/content/339/6121/807.full. பார்த்த நாள்: 2013-02-14.
  3. அறிவியல் இரகசியங்கள், ப. செங்குட்டுவன், 2000
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.