பிரிமிடின்

பிரிமிடின் (Pyrimidine) ஒரு நறுமணமுள்ள பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: C4H4N2. இது, பிரிடின் மற்றும் பென்சீனைப் போன்று ஆறுருப்பு வளையத்தினைக் கொண்டது: இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் மூன்றாம் நிலைகளில் கொண்டுள்ளது[2]. பிரிமிடின், டைஅசைனின் இரண்டு வேறு வடிவங்களுடன் மாற்றியனாக உள்ளது: முதலாவது பிரிடசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் இரண்டாம் நிலைகளில் கொண்டுள்ளது; இரண்டாவது பிரசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் நான்காம் நிலைகளில் கொண்டுள்ளது.

பிரிமிடின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரிமிடின்
வேறு பெயர்கள்
1,3-டைஅசைன், மெட்டா-டைஅசைன்
இனங்காட்டிகள்
289-95-2 Y
ChEBI CHEBI:16898 Y
ChEMBL ChEMBL15562 Y
ChemSpider 8903 Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00396 Y
ம.பா.த pyrimidine
பப்கெம் 9260
பண்புகள்
C4H4N2
வாய்ப்பாட்டு எடை 80.088 கி மோல்-1
அடர்த்தி 1.016 கி செமீ-3
காடித்தன்மை எண் (pKa) 1.10[1] (புரோட்டான்சேர்க்கப்பட்ட பிரிமிடின்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

உட்கரு அமில மூலங்கள் (நியூக்ளியோடைடுகள்)

உட்கரு அமிலங்களிலுள்ள மூன்று உட்கரு அடித்தளங்களான சைடோசின் (C), தைமின் (T), யுராசில் (U) ஆகியன பிரிமிடினின் கிளைப்பொருள்களாகும்:

டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமிலம் (டி.என்.ஏ.) மற்றும் ரைபோநியூக்ளிக் அமிலங்களில் (ஆர்.என்.ஏ) உள்ள உட்கரு அடித்தளங்கள் எதிர்நிரப்பு பியூரின்களுடன் ஹைட்ரசன் பிணைப்புகளை உருவாக்குகின்றன. டி.என்.ஏ.-வில் பியூரின்களான அடெனின் (A) மற்றும் குவானின் (G), பிரிமிடின்களான தைமின் (T) மற்றும் சைடோசினுடன் (C) முறையே பிணைகின்றன.

ஆர்.என்.ஏ.-வில் அடெனினின் (A) எதிர்நிரப்பு, தைமினுக்குப் (T) பதிலாக யுராசில் (U) ஆகும். எனவே, கீழ்வரும் பிணைகள் உருவாகின்றன: அடெனின்:யுராசில் மற்றும் குவானின்:சைடோசின்.

மிக அரிதாக, தைமின் ஆர்.என்.ஏ.- விலும், யுராசில் டி.என்.ஏ.-விலும் காணப்படுகிறது. உட்கரு அமிலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று பெரிய பிரிமிடின் அடித்தளங்களைத் தவிர, சில சிறிய பிரிமிடின் அடித்தளங்களும் காணப்படுகின்றன. இச்சிறு பிரிமிடின்கள், பெரிய பிரிமிடின்களின் மீத்தைலாக்கப்பட்ட வடிவங்களாகும். இவை ஒழுங்காற்று பணிகளில் ஈடுபடுவதாக கருதப்படுகின்றது[3].

மேற்கோள்கள்

  1. Brown, H.C., et al., in Baude, E.A. and Nachod, F.C., Determination of Organic Structures by Physical Methods, Academic Press, New York, 1955.
  2. Gilchrist, Thomas Lonsdale; Gilchrist, T. L. (1997). Heterocyclic chemistry. New York: Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-582-27843-0.
  3. Nelson David L. and Michael M. Cox. Principles of Biochemstry, ed. 5. W.H. Freeman and Company (2008) p. 272–274.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.