மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்

மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் (Encyclopedia of Genes and Genomes, சுருக்கமாக KEGG) என்பது மரபணுத்தொகைகள், உயிரிய வழித்தடங்கள், நோய்கள், மருந்துகள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள தரவுத்தளங்களின் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு மரபணுத்தொகையியல், மெட்டேனோமைக்சு, வளர்சிதைமாற்றக்கல்வி மற்றும் பிற -ஓமிக்சு கல்விக்கான தரவு பகுப்பாய்வு உட்பட உயிர் தகவலியல் ஆய்வு மற்றும் கல்வி, தொகுப்பியக்க உயிரியலில் ஒப்புருவாக்கம், மற்றும் மருந்தியல் வளர்ச்சியில் நகர்வு ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

KEGG
உள்ளடக்கம்
விவரம்மரபணுத்தொகையை அடையாளங்காணும் உயிர் தகவலியல் தரவுத்தளம்
கண்டறிந்த தரவு வகைகள்hundal
உயிரின(ம்)/(ங்கள்)அனைத்தும்
தொடர்பு
ஆராய்ச்சி மையம்கியோட்டோ பல்கலைக்கழகம்
ஆய்வகம்Kanehisa Laboratories
முதன்மை குறிப்புரை10592173
வெளியிட்ட நாள்1995
அணுக்கம்
வலைத்தளம்www.kegg.jp
இணையச் சேவை உரலிKEGG API
கருவிகள்
WebKEGG Mapper
ஏனையவை

KEGG தரவுத்தளத் திட்டம் சப்பானின் அன்றைய மனித மரபணுத்தொகைத் திட்டத்தின் கீழ் கியோத்தோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வுக் கழகப் பேராசிரியர் மினோரு கனேகிசா என்பவரால் 1995 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

  1. "KEGG: Kyoto Encyclopedia of Genes and Genomes". Nucleic Acids Res 28 (1): 27–30. 2000. doi:10.1093/nar/28.1.27. பப்மெட்:10592173.
  2. Kanehisa M (1997). "A database for post-genome analysis". Trends Genet 13 (9): 375–6. doi:10.1016/S0168-9525(97)01223-7. பப்மெட்:9287494.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.