உயிரிலிவழிப்பிறப்பு

உயிரிலிவழிப்பிறப்பு அல்லது உயிர் வழித் தோற்றம் (Abiogenesis) [1][2][3][note 1] என்பது இயற்கையான ஒரு செயல்முறையாகும். உயிரானது, உயிரற்ற பொருட்களிலிருந்து தான் தோன்றுகிறது, அப்பொருட்கள் எளிய கரிம கூட்டுப்பொருட்களாகும்.[1][2][4][5] உயிரற்ற பொருட்களிலிருந்து உயிரினங்கள் உருவாதல் என்பது ஒரு எளிய நிகழ்வு அல்ல, இது படிப்படியாக நடக்கக்கூடிய, சிக்கலான, உயிரினங்களைத் தோற்றுவிக்கக் கூடிய நிகழ்வாகும்.[6][7][8][9] மூலக்கூறு உயிரியல், தொல்லுயிாியல், விண்வெளி உயிரியல், உயிர் வேதியியல், ஆகிய பாடங்களைப் படிப்பதன் மூலம் உயிரிலிவழிப்பிறப்பினைப் பற்றி அறிந்து கொள்ளலாம். [10] மேலும் வேதிவினையின் மூலம் எவ்வாறு உயிரினங்கள் தோன்றின என்பது பற்றிய நோக்கங்களையும் அறிந்து கொள்ளலாம். உயிரிலிவழிப்பிறப்பு பற்றிய படிப்பதை, தற்போதுள்ள அணுகுமுறைகள் புவியியல், வேதியியல் மற்றும் உயிரியலியல் துறைகளின் [11][12] மூலம் செய்து பார்க்கப்பட்டு எவ்வாறு உயிர் உருவாக்கப்பட்டன என்பது பற்றியும், அப்போதுள்ள காலத்தில் தற்போதுள்ள புவி எவ்வாறு வேறுபடுகின்றது என்பது பற்றியும் அறியப்பட்டது. இந்நிகழ்வை வேதியியலில் உள்ள கார்பன் மற்றும் நீர் மூலக்கூறுகளின் அடிப்படையில் நான்கு முக்கிய வேதிப்பொருட்களான கொழுப்பு (கொழுப்பிலான செல் சுவர்), மாவுச்சத்து (சர்க்கரை, செல்லுலோஸ்), அமினோ அமிலம் (புரத வளர்சிதை மாற்றம்) மற்றும் நியூக்கிளிக் அமிலம் (டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ தானே பிரிதல்) ஆகியவற்றைக் கொண்டது. எந்த உயிரிலிவழிப்பிறப்பு பற்றிய கொள்கையாக இருந்தாலும் கண்டிப்பாக மேற்கூறிய மூலக்கூறுகளைப் பற்றி விவாதிக்காமல் இருக்க முடியாது.[13] நிறைய அணுகுமுறைகள் உயிரிலிவழிப்பிறப்பு பற்றிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது, அதில் எவ்வாறு மூலக்கூறுகள் தானே பிரிகின்றன அல்லது அதனுடைய பாகமானது எவ்வாறு ஏற்கனவே உள்ள பொருட்களிலிருந்து தோன்றியது என்பதைப் பற்றியும் விவாதிக்கின்றது. பொதுவாக தற்போதய புவியானது ஆர்.என்.ஏ யுகத்திலிருந்து இறங்கி வந்ததாகக் கருதப்படுகிறது. இருந்த போதிலும், ஆர்.என்.ஏ வை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை என்றும் ஆனால் அதுவே முதல் உயிரியாக இருக்காது, அது ஏற்கனவே உள்ள உயிரியிலிருந்து வந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

முல்லர்-யூரே சோதனை

பழைய முல்லர்-யூரே போன்ற சோதனைகளின் ஆராய்ச்சிகளானது அமினோ அமிலத்தைப் பற்றி விளக்குவதாகவே உள்ளது. உயிரினங்களில் காணப்படுகின்ற வேதிப்பொருளான புரதம், கனிம பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகின்ற செயல், சில கட்டுப்பாட்டின் அடிப்படையில் தானே பிரிதல் நிகழ்த்தப்பட்டதாக உத்தேசக்கருத்தாக பழைய புவி உருவானதைப்பற்றி கூறப்படுகிறது.[14] மேற்கூறிய வேதிவினைகளானது வெளிப்புறத்திலிருந்து வேறு சில சக்திகளின் துாண்டுதலால் நிகழக்கூடியதாக சொல்லப்படுகிறது அவை ஒளி மற்றும் கதிர்வீச்சாகும்.

மூலக்கூறு கொள்கை

வேறு அணுகுமுறைகள் ("வளர்சிதை மாற்றம்-முதல்" கருதுகோள்) தானே பிரிதலின் மூலம் பழைய புவியானது உருவாவதில் வேதிஊக்கிகள் வேதிவினைகளில் செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. [15][16] சிக்கலான காிம மூலக்கூறுகள் சூரிய மண்டலத்திலும் மற்றும் அண்டத்துக்கு அப்பாற்பட்ட விண்மீன்களுக்கிடையேயுள்ள வான்வெளியிலும் காணப்படுகின்றது. மேலும் இந்த மூலக்கூறுகள் தான் உயிரினங்கள் புவியில் தோன்ற காரணமான முதல் பொருளாக கூறப்படுகிறது. உலகம் தோன்றி 10 முதல் 17 மில்லியன் ஆண்டுகள் ஆனபோது தான் உயிரினங்களே தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.[17][18] உயிர்வேதியலானது குறைந்த காலத்தில் ஏற்பட்ட பெரு வெடிப்பின் தோன்றியதாக கருதப்படுகிறது.[19]

பேன்ஸ்பெர்மியா கொள்கை

பேன்ஸ்பெர்மியா கருதுகோள்ளானது நுண்ணுயிரிகள் பழைய புவியில் வான்வெளியிலிருந்த துாசுகளிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.[20] [21] குறுஎரிமீன் சிறுகோள் மற்றும் சிறிய சூரிய மண்டல உறுப்புகள் ஆகியவை இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. பேன்ஸ்பெர்மியா கருதுகோள்ளானது உயிரினத்தோற்றமானது புவிக்கு வெளியில் தான் தோன்றியிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் எங்கிருந்து தோன்றியது என்று கூறவில்லை.[22][23] [24][25]

மேற்கோள்கள்

  1. Oparin 1953, p. vi
  2. Peretó, Juli (2005). "Controversies on the origin of life" (PDF). International Microbiology (Barcelona: Spanish Society for Microbiology) 8 (1): 23–31. பன்னாட்டுத் தர தொடர் எண்:1139-6709. பப்மெட்:15906258. Archived from the original on 24 August 2015. https://web.archive.org/web/20150824074726/http://www.im.microbios.org/0801/0801023.pdf. பார்த்த நாள்: 2015-06-01.
  3. Scharf, Caleb (18 December 2015). "A Strategy for Origins of Life Research". Astrobiology 15 (12): 1031–1042. doi:10.1089/ast.2015.1113. பப்மெட்:26684503. பப்மெட் சென்ட்ரல்:4683543. Bibcode: 2015AsBio..15.1031S. http://online.liebertpub.com/doi/pdfplus/10.1089/ast.2015.1113. பார்த்த நாள்: 28 November 2016.
  4. Warmflash, David; Warmflash, Benjamin (November 2005). "Did Life Come from Another World?". Scientific American (Stuttgart: Georg von Holtzbrinck Publishing Group) 293 (5): 64–71. doi:10.1038/scientificamerican1105-64. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8733. Bibcode: 2005SciAm.293e..64W.
  5. Yarus 2010, p. 47
  6. Howell, Elizabeth (8 December 2014). "How Did Life Become Complex, And Could It Happen Beyond Earth?". Astrobiology Magazine. பார்த்த நாள் 14 February 2018.
  7. Davis, John (29 October 2013). "Paleontologist presents origin of life theory". Texas Tech University. பார்த்த நாள் 14 February 2018.
  8. Staff (2018). "Abiogenesis - A Brief History". All About Science. பார்த்த நாள் 14 February 2018.
  9. Tirard, Stephane (20 April 2015). "Abiogenesis - Definition". Encyclopedia of Astrobiology. Springer. doi:10.1007/978-3-642-27833-4_2-4. பார்த்த நாள் 14 February 2018.
  10. Voet & Voet 2004, p. 29
  11. Dyson 1999
  12. Davies, Paul (1998). The Fifth Miracle, Search for the origin and meaning of life. Penguin.
  13. Ward, Peter; Kirschvink, Joe (2015). A New History of Life: the radical discoveries about the origins and evolution of life on earth. Bloomsbury Press. பக். 39–40.
  14. Keller, Markus A.; Turchyn, Alexandra V.; Ralser, Markus (25 March 2014). "Non‐enzymatic glycolysis and pentose phosphate pathway‐like reactions in a plausible Archean ocean". Molecular Systems Biology (Heidelberg, Germany: EMBO Press on behalf of the European Molecular Biology Organization) 10 (725): 725. doi:10.1002/msb.20145228. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-4292. பப்மெட்:24771084.
  15. King, Anthony (14 April 2015). "Chemicals formed on meteorites may have started life on Earth". Chemistry World (London: Royal Society of Chemistry). Archived from the original on 17 April 2015. http://www.rsc.org/chemistryworld/2015/04/meteorites-may-have-delivered-chemicals-started-life-earth. பார்த்த நாள்: 2015-04-17.
  16. Saladino, Raffaele; Carota, Eleonora; Botta, Giorgia et al. (13 April 2015). "Meteorite-catalyzed syntheses of nucleosides and of other prebiotic compounds from formamide under proton irradiation". Proc. Natl. Acad. Sci. U.S.A. (Washington, D.C.: National Academy of Sciences) 112 (21): E2746–E2755. doi:10.1073/pnas.1422225112. பன்னாட்டுத் தர தொடர் எண்:1091-6490. பப்மெட்:25870268. Bibcode: 2015PNAS..112E2746S.
  17. Abraham (Avi) Loeb (October 2014). "The habitable epoch of the early Universe". International Journal of Astrobiology (Cambridge, UK: Cambridge University Press) 13 (4): 337–339. doi:10.1017/S1473550414000196. பன்னாட்டுத் தர தொடர் எண்:1473-5504. Bibcode: 2014IJAsB..13..337L.
  18. Claudia Dreifus (2 December 2014). "Much-Discussed Views That Go Way Back". The New York Times (New York): p. D2. Archived from the original on 3 December 2014. https://www.nytimes.com/2014/12/02/science/avi-loeb-ponders-the-early-universe-nature-and-life.html. பார்த்த நாள்: 2014-12-03.
  19. Rampelotto, Pabulo Henrique(26 April 2010). "Panspermia: A Promising Field Of Research"(PDF). {{{booktitle}}}, Houston, TX:Lunar and Planetary Institute. 2014-12-03 அன்று அணுகப்பட்டது.. Conference held at League City, TX
  20. Berera, Arjun (6 November 2017). "Space dust collisions as a planetary escape mechanism". Astrobiology 17 (12): 1274–1282. doi:10.1089/ast.2017.1662. பப்மெட்:29148823. Bibcode: 2017AsBio..17.1274B.
  21. Chan, Queenie H. S. et al. (10 January 2018). "Organic matter in extraterrestrial water-bearing salt crystals". Science Advances 4 (1, eaao3521): eaao3521. doi:10.1126/sciadv.aao3521. Bibcode: 2018SciA....4O3521C. http://advances.sciencemag.org/content/4/1/eaao3521. பார்த்த நாள்: 11 January 2018.
  22. Graham, Robert W. (February 1990). "Extraterrestrial Life in the Universe" (PDF). நாசா. மூல முகவரியிலிருந்து 3 September 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-06-02.
  23. Altermann 2009, p. xvii
  24. Stearns, Beverly Peterson; Stearns, S. C.; Stearns, Stephen C. (2000). Watching, from the Edge of Extinction. Yale University Press. பக். preface x. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-08469-6. Archived from the original on 17 July 2017. https://web.archive.org/web/20170717071353/https://books.google.com/books?id=0BHeC-tXIB4C&q=99%20percent#v=onepage&q=99%20percent&f=false. பார்த்த நாள்: 30 May 2017.
  25. Novacek, Michael J. (8 November 2014). "Prehistory’s Brilliant Future". New York Times. Archived from the original on 29 December 2014. https://www.nytimes.com/2014/11/09/opinion/sunday/prehistorys-brilliant-future.html. பார்த்த நாள்: 25 December 2014.
  1. Also occasionally called biopoiesis.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.