இலித்தியம் குளோரேட்டு
இலித்தியம் குளோரேட்டு (Lithium chlorate) என்பது LiClO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். மற்ற குளோரேட்டுகள் போலவே இலித்தியம் குளோரேட்டும் ஆக்சிசனேற்றியாகவும் நிலைப்புத்தன்மை இல்லாமலும் காணப்படுகிறது. வினைத்திறன் மிகுந்த உலோக வேதிப் பொருட்கள் அல்லது கந்தகம் மற்றும் கரிமப் பொருட்களுடன் சேர்க்கும்போது இது வெடிக்கும் பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குளோரிக் அமிலம், இலித்தியம் உப்பு | |
இனங்காட்டிகள் | |
13453-71-9 ![]() | |
ChemSpider | 55520 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23682463 |
SMILES
| |
பண்புகள் | |
LiClO3 | |
வாய்ப்பாட்டு எடை | 90.39 கி/மோல் |
உருகுநிலை | |
241கி/100மி.லி (0 °C) 777கி/100மி.லி (60 °செ) | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் குளோரைடு இலித்தியம் ஐப்போகுளோரைடு இலித்தியம் பெர்குளொரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் குளொரேட்டு பொட்டாசியம் குளோரேட்டு சீசியம் குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
செறிவு மிகுந்த சூடான இலித்தியம் ஐதராக்சைடுடன் குளோரினைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் இலித்தியம் குளோரேட்டைத் தயாரிக்கலாம்.
3 Cl2 + 6 LiOH → 5 LiCl + LiClO3 + 3 H2O
தண்ணீரில் மிக நன்றாகக் கரையக்கூடிய சேர்மமாக இலித்தியம் குளோரேட்டு உள்ளது. மேலும் இது ஆறு எலக்ட்ரான்களை வெளியேற்றும் வகை ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.. அமிலம், மின்வினையூக்கிகள், ஏற்றவொடுக்க இடைப்பொருட்கள் ஆகியன இதன் மின்வேதியல் ஒடுக்கத்தை எளிமையாக்குகின்றன. இத்தைகைய தனிப்பண்புகளால் இலித்தியம் குளோரேட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சிசனேற்றியாக உயராற்றல் அடர்த்தியோட்ட மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. மின்கலன் ஆதாரம் = <http://www.google.com/patents/US20140170511