இருசோடியம் சிட்ரேட்டு

இருசோடியம் சிட்ரேட்டு (Disodium citrate) என்பது Na2C6H6O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மிகச்சரியாகச் சொல்வதென்றால் இச்சேர்மத்தை இருசோடியம் ஐதரசன் சிட்ரேட்டு என்பார்கள். சிட்ரிக் அமிலத்தினுடைய அமில உப்பான இச்சேர்மம் உணவுப் பொருட்களில் ஆக்சிசனேற்ற தடுப்பானாகவும், பிற ஆக்சிசனேற்ற தடுப்பான்களின் விளைவுகளை மேம்படுத்தவும் பயன்படுகிறது.[1] இவை தவிர அமிலத்தன்மையை ஒழுங்குபடுத்தும் அமிலத்தன்மை ஒழுங்குபடுத்தியாகவும் பித்த அமில தெளிவாக்கியாகவும் பயன்படுகிறது. ஊன்பசை, பழப்பாகு, இனிப்புகள், பனிப்பாகு, கார்பனேற்ற பானங்கள், பால்பொடி, மது மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலடைக்கட்டி முதலான குறிப்பிடத்தகுந்த பொருட்களைத் தயாரிக்க இச்சேர்மம் உதவுகிறது.

இருசோடியம் சிட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைசோடியம் ஐதரசன் 2-ஐதராக்சிபுரொப்பேன்-1,2,3-டிரைகார்பாக்சிலேட்டு
இனங்காட்டிகள்
144-33-2 Y
ChemSpider 10701794 Y
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C6H6Na2O7
வாய்ப்பாட்டு எடை 236.09 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

சிறுநீர் பாதை நோய் தொற்றுக் கோளாறுகளை போக்க நோயாளிகளுக்கு இருசோடியம் சிட்ரேட் உதவுகிறது.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.