பொட்டாசியம் சிட்ரேட்டு

பொட்டாசியம் சிட்ரேட்டு (Potassium citrate) என்பது C6H5K3O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிட்ரிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பான இச்சேர்மம் முப்பொட்டாசியம் சிட்ரேட்டு எனவும் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்துடன் நீர் உறிஞ்சும் திறன் கொண்ட படிகத் தூளாக பொட்டாசியம் சிட்ரேட்டு காணப்படுகிறது. எடையில் 38.3% பொட்டாசியத்தைக் கொண்டிருக்கும் இச்சேர்மம் மணமற்றதாகவும் உவர்ப்புச் சுவையுடனும் காணப்படுகிறது. ஒரு நீரேற்று வடிவ பொட்டாசியம் சிட்ரேட்டு நீருறிஞ்சும் தன்மை மிகுந்த சேர்மமாகவும் நீர்த்துப் போகக் கூடிய தன்மையுடனும் காணப்படுகிறது.

பொட்டாசியம் சிட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபொட்டாசியம் சிட்ரேட்டு
இனங்காட்டிகள்
866-84-2 Y
ChEMBL ChEMBL1200458 N
ChemSpider 12775 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13344
பண்புகள்
C6H5K3O7
வாய்ப்பாட்டு எடை 306.395 கி/மோல்
தோற்றம் வெண்மை நிறத்தூள்
நீருறிஞ்சும்
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.98 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 230 °C (446 °F; 503 K)[1]
கரையும்
கரைதிறன் கிளிசரினில் கரைகிறது.
எத்தனாலில் கரைவதில்லை (95%)
காடித்தன்மை எண் (pKa) 8.5
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
170 மி.கி/கி.கி (IV, நாய்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

உணவுச் சேர்ப்புப் பொருளாக பொட்டாசியம் சிட்ரேட்டு சேர்க்கப்படும் போது இது அமிலத் தன்மையை முறைப்படுத்துகிறது. மேலும் இதற்கான ஐரோப்பிய ஒன்றியம் எண் E332 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூரிக் அமிலம் அல்லது சிசுடின் காரணமாக உருவாகும் சிறுநீரக கற்களைக் கட்டுப்படுத்தி ஒரு மருந்தாகவும் இச்சேர்மம் செயல்படுகிறது.

தயாரிப்பு

பொட்டாசியம் பை கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் கார்பனேட்டுடன் சிட்ரிக் அமிலக் கரைசலை நுரைத்துப் பொங்கும் வரை சேர்த்துப் பின்னர், கரைசலை வடிகட்டி அதை சிறுமணிகளாகும் வரை ஆவியாக்கி பொட்டாசியம் சிட்ரேட்டு தயாரிக்கலாம்.

பயன்கள்

வாய்மூலம் கொடுக்கப்படும் போது பொட்டாசியம் சிட்ரேட் வேகமாக உட்கொள்ளப்படுகிறது. அவ்வாறே சிறுநீரில் வெளியேறுகிறது.[2] இதுவொரு கார உப்பு என்பதால் வலியைக் குறைப்பதிலும் சிறுநீர் அமிலத்தன்மையால் ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் குறைக்கிறது.[3] இப்பயன்பாட்டிற்காக நாய்கள் மற்றும் பூனைகளுக்கு கொடுக்கப்படுகிறது என்றாலும் முதன்மையாக எரிச்சலூட்டாத சிறுநீர் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர் பாதை தொற்று நோயை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.