பொட்டாசியம் புளோரைடு

பொட்டாசியம் புளோரைடு (Potassium fluoride) என்பது KF என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு பயன்பாடுகளுக்காகவும் , வேதியியலுக்காகவும் புளோரைடு அயனிகளை வழங்கக்கூடிய மூலச் சேர்மங்களில் ஐதரசன் புளோரைடுக்கு அடுத்ததாக நிற்பது பொட்டாசியம் புளோரைடு ஆகும். கார ஆலைடான இச்சேர்மம் இயற்கையில் அரிய கனிமமாக விளங்கும் கார்பபைட் வடிவில் கிடைக்கிறது. பொட்டாசியம் புளோரைடு கரைசல்கள் கரையக்கூடிய புளோரோ சிலிக்கேட்டுகளை உருவாக்கும் என்பதால் அவை கண்ணாடியை அரிக்கும் தன்மை கொண்டுள்ளன. ஐதரசன் புளோரைடு பொட்டாசியம் புளோரைடை விட வினைத்திறன் மிக்கது ஆகும்.

பொட்டாசியம் புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் புளோரைடு
இனங்காட்டிகள்
7789-23-3 (anhydrous) Y
13455-21-1 (dihydrate) N
ChEMBL ChEMBL1644027 N
ChemSpider 23006 Y
EC number 232-151-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 522689
வே.ந.வி.ப எண் TT0700000
UNII 9082WG1G3F Y
பண்புகள்
KF
வாய்ப்பாட்டு எடை 58.0967 கி/மோல் (நீரிலி)
94.1273 கி/மோல் (இருநீரேற்று)
தோற்றம் நிறமற்றது
அடர்த்தி 2.48 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,502 °C (2,736 °F; 1,775 K)
நீரிலி:
92 கி/100 மி.லி (18 °செ)
102 கி/100 மி.லி (25 °செ)
இரு நீரேற்று
349.3 கி/100 மி.லி (18 °செ)
கரைதிறன் HF இல் கரையும்
ஆல்ககாலில் கரையாது.
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு நச்சு (T)
R-சொற்றொடர்கள் R23/24/25
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
245 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் குளோரைடு
பொட்டாசியம் புரோமைடு
பொட்டாசியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் புளோரைடு
சோடியம் புளோரைடு
ருபீடியம் புளோரைடு
சீசியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பு

பொட்டாசியம் கார்பனேட்டை அதிக அளவு ஐதரோ புளோரிக் அமிலத்தில் கரைத்தால் பொட்டாசியம் இருபுளோரைடு கரைசல் கிடைக்கிறது. இக்கரைசலை ஆவியாக்கினால் பொட்டாசியம் இருபுளோரைடு படிகங்கள் தோன்றுகின்றன. இப்படிகங்களை சூடாக்குவதால் பொட்டாசியம் புளோரைடு உருவாகிறது.

K2CO3 + 4HF → 2KHF2 + CO2↑ + H2O
KHF2 → KF + HF↑

இவ்வுப்பைத் தயாரிக்க கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது. ஐதரசன் புளோரைடு தயாரிப்பது போல வெப்பம் தாங்கும் நெகிழிகள் அல்லது பிளாட்டினம் கலன்கள் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொட்டாசியம் புளோரைடு கண்ணாடி பீங்கான் முதலியவற்றை அரிக்கும் தன்மை கொண்டது ஆகும்.

பயன்கள்

கரிம வேதியியலில், குளோரோகார்பன்களை புளோரோகார்பன்களாக மாற்றும் வினைகளில் பொட்டாசியம் புளோரைடு பயன்படுகிறது. இவ்வினை பிங்கெல்சிடெய்ன் வினை[2] எனப்படுகிறது. இவ்வகை வினைகளில் பொதுவாக இருமெத்தில் பார்மமைடு, எத்திலீன் கிளைக்கால் மற்றும் இருமெத்தில் சல்பாக்சைடு போன்ற முனைவுக் கரைப்பான்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்[3].

முன்பாதுகாப்பு

புளோரைடு அயனிகளை வழங்கும் மற்ற மூலங்கள் போலவே பொட்டாசியம் புளோரைடும் நச்சுத் தன்மை வாய்ந்ததாகும். மனிதர்களுக்கான இதனுடைய கொல்லும் அளவு குறைவாக இருந்தாலும் இது நச்சுப்பொருளாகவே கருதப்படுகிறது. இதை உட்கொள்வதும் சுவாசிப்பதும் மிகுந்த தீங்கு விளைவிக்கும் செயல்களாகும். தோலின்மீது பட நேர்ந்தால் கடுமையான தீப்புண்களை உருவாக்கும்.

மேற்கோள்கள்

  1. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/7789-23-3
  2. Vogel, A. I.; Leicester, J.; Macey, W. A. T., "n-Hexyl Fluoride", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv4p0525; Coll. Vol. 4: 525
  3. Han, Q.; Li, H-Y. "Potassium Fluoride" in Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001 John Wiley & Sons,New York. எஆசு:10.1002/047084289X.rp214
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.