பொட்டாசியம் ஐதராக்சைடு

பொட்டாசியம் ஐதராக்சைடு (Potassium hydroxide) என்பது மூலக்கூறு வாய்ப்பாடு KOH ஐக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது எரி பொட்டாசு (caustic potash) எனவும் அழைக்கப்படுகிறது.

பொட்டாசியம் ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
Caustic potash, Lye, Potash lye, Potassia, Potassium hydrate, KOH
இனங்காட்டிகள்
1310-58-3 Y
ChEBI CHEBI:32035 Y
ChemSpider 14113 Y
EC number 215-181-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14797
வே.ந.வி.ப எண் TT2100000
UNII WZH3C48M4T Y
UN number 1813
பண்புகள்
KOH
வாய்ப்பாட்டு எடை 56.11 g mol−1
தோற்றம் white solid, நீர் உறிஞ்சும் திறன்
மணம் மணமற்றது
அடர்த்தி 2.044 g/cm3 (20 °C)[1]
2.12 g/cm3 (25 °C)[2]
உருகுநிலை
கொதிநிலை 1,327 °C (2,421 °F; 1,600 K)
85 g/100 g (-23.2 °C)
97 g/100 mL (0 °C)
121 g/100 mL (25 °C)
138.3 g/100 mL (50 °C)
162.9 g/100 mL (100 °C)[1][3]
கரைதிறன் ஆல்ககால், கிளிசரால் இல் கரையாது
ஈதர், நீர்ம அம்மோனியா இல் கரைகிறது.
மெத்தனால்-இல் கரைதிறன் 55 g/100 g (28 °C)[2]
ஐசோபுரொப்பனால்-இல் கரைதிறன் ~14 g / 100 g (28 °C)
காரத்தன்மை எண் (pKb) 0.7[4](KOH(aq) = K+ + OH)
காந்த ஏற்புத்திறன் (χ)
22.0·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.409 (20 °C)
கட்டமைப்பு
படிக அமைப்பு rhombohedral
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-425.8 kJ/mol[2][5]
நியம மோலார்
எந்திரோப்பி So298
79.32 J/mol·K[2][5]
வெப்பக் கொண்மை, C 65.87 J/mol·K[2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0357
GHS pictograms [6]
GHS signal word Danger
H302, H314[6]
P280, P305+351+338, P310[6]
ஈயூ வகைப்பாடு C Xn
R-சொற்றொடர்கள் R22, R35
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S36/37/39, S45
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
273 mg/kg (oral, rat)[7]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[8]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
C 2 mg/m3[8]
உடனடி அபாயம்
N.D.[8]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் ஐதரோசல்பைடு
பொட்டாசியம் அமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் ஐதராக்சைடு
சோடியம் ஐதராக்சைடு
ருபிடியம் ஐதராக்சைடு
சீசியம் ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

சோடியம் ஐதராக்சைடு (NaOH), போன்றே KOH நிறமற்ற திண்மம், வலிமையான காரம். பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அமிலங்களுடன் வினைபுரியும் தன்மை மற்றும் அரிக்கும் தன்மை இவைகளினால் வெடிக்கும் இயல்புடையது.2005 ஆம் ஆண்டில் 700,000 முதல் 800,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.KOH ஐ விட சுமார் 100 மடங்கு NaOH வருடாந்திர உற்பத்தி செய்யப்படுகிறது.[9]

பண்புகள் மற்றும் கட்டமைப்பு

மாசு கலந்த பொட்டாசியம், சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரியும் போது தூய பொட்டாசியம் ஐதராக்சைடு கிடைக்கிறது. இது வழக்கமாக கசியும் துகள்களாக விற்கப்படுகிறது. KOH நீர் உறிஞ்சும் திறன் உடையது. KOH பொதுவாக பல்வேறு அளவுகளில் நீரினைக் கொண்டுள்ளது. நீரில் KOH கரையும் போது வெப்பத்தை வெளியிடுகிறது. செறிவு அடர்ந்த நீர்மக் கரைசல்கள் சிலநேரங்களில் பொட்டாசியம் சுண்ணாம்பு என்று அழைக்கப்படுகிறது. உயர் வெப்பநிலைகளில் கூட திட KOH எளிதாக நீரை வெளியேற்றுவது இல்லை.[10]

சுமார் 0.5 முதல் 2.0% செறிவு கொண்ட பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசல் தோலில் படும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் 2% மேல் செறிவு அதிகமாகும் போது அரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.[11]

கட்டமைப்பு

உயர் வெப்பநிலையில், திட KOH, சோடியம் குளோரைடு படிக அமைப்பில் படிகப்படுத்தப்படுகிறது. OH குழுவானது வேகமாகவோ அல்லது சீரற்ற முறையில் ஒழுங்கற்றதாகவோ இருக்கும், எனவே OH
தொகுதியின் வட்டவடிவ நேர்அயனியின் ஆரம் 1.53 Å (Cl
மற்றும் F
இடையேயான அளவு). அறை வெப்பநிலையில், OH
தொகுதிகள் வரிசையாகவும் மற்றும் K+
மையங்கள் வரிசையற்றும் உள்ளன். K+
உடன் OH
தொலைவு 2.69 முதல் 3.15 Å வரை உள்ளது. KOH ஆனது தொடர்ச்சியான படிக ஐதரேட்டுகளை உருவாக்குகிறது, அதாவது மோனோஐதரேட்டு KOH·H
2
O
, டைஐதரேட்டு KOH·2H
2
O
, மற்றும் டெட்ராஐதரேட்டு KOH·4H
2
O
.[12]

கரைதிறன் மற்றும் உறிஞ்சும் பண்புகள்

அறை வெப்பநிலையில் சுமார் 121 கிராம் KOH 100 மில்லிலீட்டர் நீரில் கரைக்கப்படுகிறது, ஆனால் 100 கிராம் NaOH 00 மில்லி நீரில் கரைக்கப்படுகிறது. (மோலார் அடிப்படையில், KOH NaOH ஐ விட சற்று குறைவான கரையும் தன்மை உடையது.) குறைவான மூலக்கூறு எடை உடைய ஆல்ககால், குறிப்பாக மெத்தனால், எத்தனால், மற்றும் புரோப்பனால் சிறந்த கரைப்பான்களாக உள்ளன.

நீரை அதிகளவு கவரும் தன்மையினால் ஆய்வகங்களில் நீர்உறிஞ்சும் பொருளாகவும், உலர் கார கரைப்பானக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அமீன்கள் மற்றும் பிரிடின்களை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

வெப்ப நிலைத்தன்மை

NaOH போன்றே, KOH அதிக வெப்ப நிலைத்தன்மை உடையது. வாயுத் தொகுதிகள் டைமெரிக் அமைப்புடையது. அதன் உயர் நிலைப்புத்தன்மை மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான உருகுநிலை காரணமாக, உருக்கக்கூடிய துகள்கள் அல்லது தண்டுகளாக உள்ளது. கையாளுவதற்கு வசதியாக குறைவான மேற்பரப்பை கொண்டுள்ளது.

வினைகள்

காரத்துடன் வினை

KOH என்பது மிகவும் காரத்தன்மை உடையது. நீர் மற்றும் பிற கரைப்பானுடன் அடர்ந்த காரக் கரைசலை உருவாக்குகிறது. அமிலங்களில் இருந்து புரோட்டான்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. பகுப்பாய்வு வேதியியலில், பருமனறி பகுப்பாய்வில் KOH கரைசல்கள் அமிலங்களை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

கருக்கவர்காரணி வினைகள்

NaOH போன்றே KOH உம், கரிம மற்றும் கனிம சேர்மங்களில் OH
, கருக்கவர் எதிரயனியாக இருந்து துருவ பிணைப்புகளைத் தாக்குகின்றன. நீர்த்த KOH, எசுத்தர் உடன் சவர்க்காரம் ஆக்கும் வினை இதற்கு உதாரணமாகும்.

KOH + RCO2R' → RCO2K + R'OH

R என்பது நீண்ட சங்கிலியாக இருக்கும்போது, கிடைக்கும் விளைபொருள் "பொட்டாசியம் சோப்பு" என அழைக்கப்படுகிறது. கொழுப்புகள் நிறைந்த KOH தோல் மீது படும்பொழுது சவர்க்காரம் மற்றும் கிளிசரால் ஆக மாற்றப்படுகின்றன.

உருகிய KOH ஆலைடுகள் மற்றும் பிற வெளியேறு தொகுதிகளை இடமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையானது அரோமாட்டிக் பொருட்களில் இருந்து பீனால்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.[13]

கனிம சேர்மங்களுடன் வினை

KOH ஆக்சைடுகளைத் தாக்குகின்றன. SiO2, KOH உடன் வினைபுரிந்து கரையும் பொட்டாசியம் சிலிகேட்டைத் தருகிறது. KOH, கார்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து பைகார்பனேட்டைத் தருகிறது.

KOH + CO2 → KHCO3

தயாரிப்பு

செறிந்த கால்சியம் ஐதராக்சைடு (நீற்றிய சுண்ணாம்பு) கரைசலுடன் பொட்டாசியம் கார்பனேட்டை (பொட்டாசு) சேர்க்கும்பொழுது கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது. கரைசலில் பொட்டாசியம் ஐதராக்சைடு தங்குகிறது:

Ca(OH)2 + K2CO3 → CaCO3 + 2 KOH

வீழ்படிவான கால்சியம் கார்பனேட்டு வடிக்கட்டப்படுகிறது. மேலும் கரைசல் கொதிக்க வைக்கப்பட்ட பின் கரைசலில் இருந்து பொட்டாசியம் ஐதராக்சைடு ("கால்சியமாக்கப்பட்ட அல்லது எரி பொட்டாசு") கிடைக்கிறது. இம்முறை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பொட்டாசியம் ஐதராக்சைடு உற்பத்தி செய்யும் மிக முக்கியமான முறையாக இருந்தது. இது பெரும்பாலும் பொட்டாசியம் குளோரைடு கரைசலின் மின்னாற்பகுத்தல் போன்ற தற்போதைய முறையால் மாற்றப்பட்டது.[9] இந்த முறை சோடியம் ஐதராக்சைடு (குளோரல்க்கலி செயல்முறை பார்க்க) தயாரிப்பு முறையை போன்றே உள்ளது.

2 KCl + 2 H2O → 2 KOH + Cl2 + H2

நேர்மின்முனையில் ஐதரசன் வாயு உடன் விளைபொருளாக வெளிவருகிறது. எதிர்மின்முனையில் குளோரைடு அயனி ஆக்சிசனேற்றம் அடைந்து குளோரின் வாயு உடன் விளைபொருளாக வெளிவருகிறது. இந்த மின்னாற்பகுப்பு முறையில் நேர் மற்றும் எதிர் மின்முனைகளை தனித்தனியே வைக்க வேண்டும்.[14]

பயன்பாடுகள்

KOH மற்றும் NaOH ஆகியவை பல பயன்பாடுகளுக்கு ஒன்றிற்கு பதிலாக மற்றொன்றாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் NaOH அதன் குறைந்த செலவு காரணமாக பெருமளவு விரும்பப்படுகிறது.

பொட்டாசியம் சேர்மங்கள் தயாரித்தல்

பல பொட்டாசியம் உப்புக்கள் KOH சம்பந்தப்பட்ட நடுநிலையான வினைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.ஆக்சைடுகள் அல்லது அமிலங்களுடன் KOH சேர்க்கும்பொழுது பொட்டாசியம் கார்பனேட், சயனைடு, பெர்மாங்கனேட், பாஸ்பேட், மற்றும் சிலிகேட் என பல பொட்டாசியம் உப்புகள் கிடைக்கின்றன்.[9] பொட்டாசியம் பாஸ்பேட்டின் அதிகளவு கரைதிறன் தன்மையினால் உரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பயோடீசல் உற்பத்தி

சோடியம் ஐதராக்சைடு பயன்படுத்துவதை விட அதிக செலவு என்றாலும், தாவர எண்ணெயில் உள்ள டிரைகிளிசரைடுகளில் இருந்து டிரான்ஸ்ஸ்டெர்ஃபிகேஷன் மூலம் பயோடீசல் உற்பத்தியில் KOH நன்றாக வேலை செய்கிறது. பொட்டாசியம் ஐதராக்சைடு-செயலாக்கப்பட்ட பயோடீசல் இருந்து பெறப்பட்ட கிளிசரின், கால்நடைகளுக்கு ஒரு மலிவான உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.[15]

மென்மையான சோப்பு தயாரித்தல்

கொழுப்புகளுடன் KOH ஐ சேர்த்து சோப்பாக்குதல் வினை மூலம் தயாரிக்கப்படும் பொட்டாசியம் சோப்புகள், சோடியம் ஐதராக்சைடு மூலம் பெறப்பட்ட சோப்புகளை விட மென்மையானதாக உள்ளது. ஏனெனில் இவற்றின் மென்மை மற்றும் அதிக கரைதிறனே காரணமாகும். பொட்டாசியம் சோப்புகள் நீர்மமாக்கலுக்கு குறைந்த அளவே நீர் தேவைப்படுவதால், நீர்ம சோடியம் சோப்புகளை விட அதிகளவு இவை துாய்மையாக்கியாக உள்ளன.[16]

மின்பகுளியாக செயல்படுதல்

Potassium carbonate, formed from the hydroxide solution leaking from an alkaline battery

நிக்கல்-காட்மியம், நிக்கல்-ஐதரசன், மற்றும் மாங்கனீசு டை ஆக்சைடு-துத்தநாகம் முதலியன உள்ள மின்கலன்களில் நீர்ம பொட்டாசியம் ஐதராக்சைடு மின்பகுளியாக செயல்படுகிறது. பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசல் அதிக கடத்துதிறன் உடையதால் சோடியம் ஐதாராக்சைைட விட அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.[17]. டொயோட்டா ப்ரியஸில் உள்ள நிக்கல் உலோக ஐதரைடு மின்கலனில் பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடு கலவையே பயன்படுத்தப்படுகிறது. நிக்கல் - இரும்பு மின்கலனிலும் பொட்டாசியம் ஐதராக்சைடு மின்பகுளியாக செயல்படுகிறது.[18]

பெட்ரோலியம் சுத்திகரிப்பு

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு சுத்திகரிப்பில் பல கரிம அமிலங்கள் மற்றும கந்தக சேர்மங்களை வெளியேற்ற பொட்டாசியம் ஐதராக்சைடு பயன்படுகிறது.[19][20]

மேற்கோள்கள்

  1. Lide, D. R., தொகுப்பாசிரியர் (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ). Boca Raton (FL): CRC Press. பக். 4-80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0486-5.
  2. http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=325
  3. Seidell, Atherton; Linke, William F. (1952). Solubilities of Inorganic and Organic Compounds. Van Nostrand. https://books.google.com/books?id=k2e5AAAAIAAJ. பார்த்த நாள்: 2014-05-29.
  4. Popov, K. et al. (2002). "7Li, 23Na, 39K and 133Cs NMR comparative equilibrium study of alkali metal cation hydroxide complexes in aqueous solutions. First numerical value for CsOH formation". Inorganic Chemistry Communications 5 (3): 223-225. https://www.infona.pl/resource/bwmeta1.element.elsevier-40fb73c1-ba37-32e0-914e-b264c7c0539b. பார்த்த நாள்: 2017-02-19.
  5. Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பக். A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X.
  6. Sigma-Aldrich Co., Potassium hydroxide. Retrieved on 2014-05-18.
  7. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/1310-58-3
  8. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0523". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  9. H. Schultz, G. Bauer, E. Schachl, F. Hagedorn, P. Schmittinger "Potassium Compounds" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a22_039
  10. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
  11. Potassium hydroxide, SIDS Initial Assessment Report For SIAM 13. Bern, Switzerland, 6-9 November 2001. By Dr. Thaly LAKHANISKY. Date of last Update: February 2002
  12. Wells, A.F. (1984), Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. ISBN 0-19-855370-6.
  13. W. W. Hartman, "p-Cresol", Org. Synth.; Coll. Vol., 1: 175 Missing or empty |title= (help)
  14. Römpp Chemie-Lexikon, 9th Ed. (in german)
  15. James K. Drackley நச்சு மெத்தனால் நீக்கப்பட்டது. Glycerin as a potential feed ingredient for dairy cattle
  16. K. Schumann, K. Siekmann "Soaps" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a24_247
  17. D. Berndt, D. Spahrbier, "Batteries" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_343
  18. "Toyota Prius Hybrid 2010 Model Emergency Response Guide". Toyota Motor Corporation (2009). மூல முகவரியிலிருந்து 2011-10-29 அன்று பரணிடப்பட்டது.
  19. "Treatment processes in petroleum refining". eoearth.org (2012). பார்த்த நாள் April 26, 2012.
  20. "SpentCaustic.com Introduction To The Treatment of Spent Caustic". spentcaustic.com (2010). பார்த்த நாள் April 26, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.