அயோடின் ஒற்றைபுளோரைடு

அயோடின் ஒற்றைபுளோரைடு (Iodine monofluoride) என்பது அயோடின் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஆலசன்களிடை சேர்மமாகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு IF ஆகும். சாக்கலேடு பழுப்பு நிறத்திலுள்ள இச்சேர்மம் 0 பாகை செல்சியசு வெப்பநிலையில்[1] விகிதச்சமமின்றி தனிமநிலை அயோடினாகவும் அயோடின் பென்டாபுளோரைடாகவும் சிதைவடைகிறது.

அயோடின் ஒற்றைபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடின் மோனோபுளோரைடு
வேறு பெயர்கள்
அயோடின் புளோரைடு
இனங்காட்டிகள்
13873-84-2 Y
ChemSpider 123150 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139637
பண்புகள்
IF
வாய்ப்பாட்டு எடை 145.903 கி/மோல்
தோற்றம் நிலைப்புத்தன்மையற்ற பழுப்பு திண்மம்
உருகுநிலை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அயோடின் ஒற்றைகுளோரைடு
அயோடின் ஒற்றைபுரோமைடு
அசுட்டட்டைன் ஓரயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குளோரின் ஒருபுளோரைடு
புரோமின் ஒற்றைபுளோரைடு
அசுட்டட்டைன் ஒற்றைபுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

5 IF → 2 I2 + IF5

எனினும் இச்சேர்மத்தின் மூலக்கூற்றுப் பண்புகளை நிறமாலையியல் ஆய்வுகள் மூலமாக உறுதிபடுத்த முடியும். அயோடின் புளோரின் மூலக்கூறுகளுக்கு இடையிலான இடைவெளி 190.9 பைக்கோமீட்டர் மற்றும் I−F பிணைப்பின் பிரிகை ஆற்றல் 277 கிலோயூல் மோல்-1 ஆகும். 298 கெல்வின் வெப்பநிலையில் அயோடின் ஒற்றைபுளோரைடின் உருவாதல் வெப்பத்தின் செந்தர என்தால்பி மாற்றத்தின் அளவு ΔHf° = −95.4 கியூ மோல்−1, மற்றும் கிப்சின் பயனுறு ஆற்றல் அளவு ΔGf° = −117.6 கியூ மோல்−1.என மதிப்பிடப்பட்டுள்ளது.

I2 + F2 → 2 IF

முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் இரண்டு தனிமங்களும் -45 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து அயோடின் ஒற்றைப் புளோரைடை உருவாக்க முடியும். ஆனால் இது நிலைப்புத்தன்மை அற்ற நிலையில் உள்ளது.

I2 + IF3 → 3 IF

அயோடினும் அயோடின் டிரைபுளோரைடும் -78 பாகை செல்சியசு வெப்பநிலையில் முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் வினைபுரிந்தாலும் அயோடின் ஒற்றைப் புளோரைடு உருவாகிறது. அயோடின், வெள்ளி(I) புளோரைடுடன் வினைபுரிந்தாலும் அயோடின் ஒற்றைப் புளோரைடு உருவாகிறது.

I2 + AgF → IF + AgI

வினைகள்

தூய்மையான நைட்ரசன் மூவயோடைடு உருவாக்கத்தில் அயோடின் ஒற்றைப் புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.

BN + 3 IF → NI3 + BF3

மேற்கோள்கள்

  1. Mary Eagleson (1994), Concise Encyclopedia of Chemistry. Walter de Gruyter. 1201 pages. ISBN 3-11-011451-8, ISBN 978-3-11-011451-5.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.