இசுட்ரோன்சியம் பெராக்சைடு

இசுட்ரோன்சியம் பெராக்சைடு (Strontium peroxide) என்பது SrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்ம்ம வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது.

இசுட்ரோன்சியம் பெராக்சைடு
இனங்காட்டிகள்
1314-18-7 Y
EC number 215-224-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14807
பண்புகள்
SrO2
வாய்ப்பாட்டு எடை 119.619 கி/மோல்
தோற்றம் வெண் தூள்
மணம் மணமற்றது
அடர்த்தி 4.56 கி/செ.மீ3 (நீரிலி) 1.91 கி/செ.மீ3 (எண்முகம்)
உருகுநிலை
சிறிதாவு கரையும்
கரைதிறன் ஆல்ககால், அமோனியம் குளோரைடு ஆகியனவற்றில் நன்கு கரையும்
அசிட்டோனில்கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு நான்முகம் [1]
புறவெளித் தொகுதி D174h, I4/mmm, tI6
ஒருங்கிணைவு
வடிவியல்
6
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

பயன்கள்

இசுட்ரோன்சியம் பெராக்சைடு சேர்மம் ஒரு ஆக்சிசனேற்றி மற்றும் வெளுப்பானாகும். மேலும் இதைச் சில விகித அளவுகளில் உபயோகப்படுத்தி வானவெடித் தொழிலில் பயன்படுத்துகிறார்கள். வானவெடிகளில் ஒளிர்வு மிக்கச் சிவப்பு வண்ணமாக இது பயனாகிறது. நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்தாகவும் போர்க்கருவிகளை கண்டறியும் சுவடுகாட்டியாகவும் இதைப் பயன்படுத்த முடியும்.

தயாரிப்பு

சூடாக்கப்பட்ட இசுட்ரோன்சியம் ஆக்சைடின் மீது ஆக்சிசனை செலுத்துவதால் இசுட்ரோன்சியம் பெராக்சைடு தயாரிக்க முடியும். பேரியம் பெராக்சைடு தயாரித்தலில் இருந்ததை விட வெப்பம் இங்கு குறைவாக இருந்தபோதிலும் பேரியம் பெராக்சைடு தயாரிப்பது போலவே இசுட்ரோன்சியம் பெராக்சைடும் , இசுட்ரோன்சியம் ஆக்சைடு மற்றும் ஆக்சிசனாகச் சிதைவடைகிறது. குறைவான வெப்பநிலைகளில் இசுட்ரோன்சியம் பெராக்சைடு தயாரிப்பது கடினம். ஏனெனில், அணுநிலை அளவில் பெராக்சினேற்றத்தை இந்த வெப்பக் குறைவு தடை செய்கிறது[2]

மேற்கோள்கள்

  1. Massalimov, I. A.; Kireeva, M. S.; Sangalov, Yu. A. (2002). Inorganic Materials 38 (4): 363. doi:10.1023/A:1015105922260.
  2. Accommodation of Excess Oxygen in Group II Monoxides - S.C. Middleburgh, R.W. Grimes, K.P.D. Lagerlof http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1551-2916.2012.05452.x/abstract

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.