பேரியம் பர்மாங்கனேட்டு

பேரியம் பர்மாங்கனேட்டு (Barium permanganate) என்பது BaMn2O8 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதியியல் சேர்மமாகும்[1].

பேரியம் பர்மாங்கனேட்டு
இனங்காட்டிகள்
7787-36-2 Y
EC number 232-110-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24587
பண்புகள்
BaMn2O8
வாய்ப்பாட்டு எடை 375.198 கி/மோல்
தோற்றம் அடர் கருநீல முதல் பழுப்பு வரையான படிகங்கள்
மணம் மணமற்றது
அடர்த்தி 3.77 g/cm3
உருகுநிலை
62.5 கி/100 மி.லி (29 °செல்சியசு)
கரைதிறன் ஆல்ககாலில் சிதைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய் சதுரம்
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் பர்மாங்கனேட்டு
இசுடிரான்சியம் பர்மாங்கனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு

ஒரே நேரத்தில் நிகழும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் காரணமாக மென்மையான அமிலக் கரைசலில் பேரியம் மாங்கனேட்டு விகிதச்சமமற்று பிரிவதால் பேரியம் பர்மாங்கனேட்டு தோன்றுகிறது[2]. வலிமையான ஆக்சிசனேற்றிகளைக் கொண்டு பேரியம் மாங்கனேட்டை ஆக்சிசனேற்றம் செய்தும் பேரியம் பர்மாங்கனேட்டை தயாரிக்கலாம். பேரியம் மாங்கனேட்டின் நீர்த்த கரைசலில்ல் செயல்முறை மெதுவாக நிகழ்வதன் காரணம் மாங்கனேட்டின் குறைவான கரையும் தன்மையைச் சார்ந்திருக்கிறது[2].

வினைகள்

பேரியம் பர்மாங்கனேட்டு கரைசலுடன் நீர்த்த கந்தக அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் பர்மாங்கனிக் அமிலம் தயாரிக்க முடியும். கரைசலில் கரையாத உடன் விளை பொருளான பேரியம் சல்பேட்டு வடிகட்டல் முறையில் பிரிக்கப்படுகிறது[2].

BaMn2O8 + H2SO4 → 2 HMnO4 + BaSO4

வினையில் சேர்க்கப்படும் கந்தக அமிலம் கண்டிப்பாக நீர்த்த அமிலமாக இருக்க வேண்டும். அடர்த்தியான கந்தக அமிலத்துடன் பர்மாங்கனேட்டு வினை புரிந்தால் நீரிலியான மாங்கனீசு எப்டாக்சைடு உருவாகிவிடும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.