இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்
இந்தியாவின் தேசியப் பூங்காக்கள் IUCN பிரிவு II-ஐச் சார்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா 1936ல் ஹெய்லி தேசியப் பூங்கா என்ற பெயரில் நிறுவப்பட்டது, தற்பொழுது ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா என்றறியப்படுகிறது. 1970ல் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தது. 1972ல் இந்தியா குறைந்துவரும் வனவிலங்குகளின் இனங்களையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தினையும், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தினையும்(ப்ரொஜக்ட் புலிகள்) இயற்றியது.

1980ல், மத்திய அரசாங்கம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தினை மேலும் பலப்படுத்தியது. ஏப்ரல் 2012ல், 112 தேசியப் பூங்காக்கள் உள்ளது. [1]
அனைத்து தேசியப் பூங்காக்களூம் 39,919 km2 (15,413 sq mi) இடத்தினை சூழ்ந்திருக்கிறது, இது இந்தியாவின் மொத்த இடப்பரப்பளவில் 1.21% ஆகும்.