பந்தாவ்கர் தேசியப் பூங்கா
பந்தாவ்கர் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Bandhavgarh National Park, தேவநாகரி : बांधवगढ राष्ट्रीय उद्दान) இந்தியாவின் புகழ் பெற்ற தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இது மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் உமாரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்காவானது 105 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்டது. பந்தாவ்கர் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு சகோதரர்களின் கோட்டை (Brother's Fort) என்று பொருள். இந்துக் கடவுள் ராமரும் அவரது சகோதரரான லஷ்மணனும் இங்கிருந்து இலங்கையைப் பார்ப்பதாக ஐதீகம்.
பந்தாவ்கர் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() பந்தாவ்கர் தேசியப் பூங்காவிலுள்ள புலிகளுள் ஒன்று. | |
![]() ![]() | |
அமைவிடம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
கிட்டிய நகரம் | உமாரியா |
ஆள்கூறுகள் | 23°41′58″N 80°57′43″E |
பரப்பளவு | 446 சதுர கிலோமீட்டர்கள் |
நிறுவப்பட்டது | 1968 |
நிருவாக அமைப்பு | மத்தியப் பிரதேச வனத்துறை |
அதிகாரபூர்வ வலைத்தளம் |
இந்தப் பூங்கா முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் (biodiversity) நடைபெறும் இடமாகும். இப்பூங்காவில் அதிக அளவில் புலிகள் உள்ளன. மேலும் சிறுத்தைகள், மற்றும் மான்களும் அதிக அளவில் உள்ளன. இது ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.