அரவிந்த்சாமி

அர்விந்த்சாமி (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

அரவிந்த் சாமி
இயற் பெயர் அர்விந்த்சாமி
பிறப்பு 30 சூன் 1967 (1967-06-30)
திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு[1]
தொழில் நடிகர், தொழிலதிபர்
நடிப்புக் காலம் 1991 - 2005
2015 - தற்போது வரை
துணைவர் காயத்திரி

இளமை வாழ்வு

அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.

திரைப்பட வாழ்வு

அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

தனி வாழ்வு

அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.

அர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [2]

திரைப்படங்கள்

ஆண்டுபெயர்வேடம்இயக்குனர்நடிகர்கள்மொழி
1991தளபதிஅர்ஜூன்மணிரத்னம்ரசினிகாந்து, மம்முட்டி, ஷோபனாதமிழ்
1992ரோஜாரிசிக்குமார்மணிரத்னம்மதுபாலாதமிழ்
1993மறுபடியும்கெளரி சங்கர்பாலு மகேந்திராரோகிணி, நிழல்கள் ரவி, ரேவதிதமிழ்
1993டாடிசங்கீத சிவன்கௌதமி, சுரேஷ் கோபிமலையாளம்
1993பாசமலர்கள்சுரேஷ் மேனன்ரேவதி, அஜித் குமார்,தமிழ்
1995பம்பாய்சேகர்மணிரத்னம்மனிஷா கொய்ராலாதமிழ்
1995மௌனம்உமா மகேஷ்வர ராவ்நக்மா, சாரு ஹாசன்தெலுங்கு
1995இந்திராதியாகுசுஹாசினிஅனு ஹாசன், நாசர்தமிழ்
1996தேவராகம்விஷ்னுபரதன்ஸ்ரீதேவிமலையாளம்
1997சாத் ரங் கே சப்னேமஹிபல்பிரியதர்சன்ஜூஹி சாவ்லாஇந்தி
1997மின்சார கனவுதாமஸ்ராஜிவ் மேனன்கஜோல், பிரபுதேவாதமிழ்
1997புதையல்Kotiசெல்வாமம்முட்டி, சாக்ஷி சிவானந்த்தமிழ்
1999என் சுவாசக் காற்றேஅருண்கே எஸஸ ரவிஇசா கோபிகர்தமிழ்
2000அலைபாயுதேஐஏஎஸ் அதிகாரியாகமணிரத்னம்மாதவன், சாலினி, குஷ்பூதமிழ்
2002ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயாமோஹித் குமார்ராஜிவ் குமார்மனிஷா கொய்ராலாஇந்தி
2005சாசனம்முத்தையாமகேந்திரன்கௌதமிதமிழ்
2012கடல்பாதர்மணிரத்னம்அர்ஜூன், கௌதம் கார்த்திக், துளசி நாயர்தமிழ்
2015தனி ஒருவன்பழநி (சித்தார்த் அபிமன்யு)மோகன் ராஜாஜெயம் ரவி, நயன்தாராதமிழ்
2017போகன்ஆதித்யாஇலட்சுமன்ஜெயம் ரவி, ஹன்சிகா மோட்வானிதமிழ்

மேற்கோள்கள்

  1. http://www.imdb.com/name/nm0841552/bio
  2. http://movies.indiainfo.com/southern-spice/tamil/arvind-150206.html

வெளியிணைப்புகள்

|}

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.