தனி ஒருவன்

தனி ஒருவன் என்பது 2015 ஆகத்து 28 அன்று எம். ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடியுடன் திகில் கலந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.[1] இப்படத்திற்கு கிப்கொப் தமிழா இசையமைத்துள்ளார்.[3] இத்திரைப்படம், இயக்குநர் மோகன் ராஜா இயக்கிய முதலாவது நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன்னர் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மீளுருவாக்க திரைப்படங்களாகும்.

தனி ஒருவன்
இயக்கம்எம். ராஜா
தயாரிப்புகல்பாத்தி எஸ். அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
கதைஎம். ராஜா
சுபா
இசைகிப்கொப் தமிழா [1]
நடிப்புஜெயம் ரவி
அரவிந்த் சாமி
நயன்தாரா
வம்சி கிருஷ்ணா
ஒளிப்பதிவுராம்ஜி[2]
படத்தொகுப்புகோபிகிருஷ்ணா. வி
கலையகம்ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்
விநியோகம்ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்[3]
வெளியீடு28 ஆகஸ்ட் 2015
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதை

வெளியிடு

சன் பிக்சர்சு இப்படத்தை வினியோகிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. செயம் ரவியின் தொடர் தோல்விப்படங்களாலும் இப்படத்தை பற்றிய எதிர்மறையான செய்திகளாலும் படத்தை விநியோக்கபதில் இருந்து விலகிக்கொண்டது.; இப்படத்தின் தொலைக்காட்சி (சாட்டிலைட்) உரிமையை சன் டிவி பெற்றது [4]

வணிகம்

தனி ஒருவன் 10நாட்களில் உலகம்முழுவதிலுமிருந்து ₹51.08 கோடியை வசூல் செய்தது.[5] முதல் வாரத்தில்₹1.28 கோடியை வசுலித்த முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இரண்டாவது வார முடிவில் இப்படம் சென்னையில் ₹1.06 கோடியை வசுலித்திருந்தது . பதினெட்டு நாட்கள் முடிவில் மொத்தமாக இப்படம் ₹74.86 கோடியை வசுலித்திருந்தது.[6]

நடிப்பு

  • மித்திரன் ஐபிஎஸ் காவல் அதிகாரியாக செயம் ரவி
  • தடவியல் காவர் ஐபிஎசுவாக மகிமாவாக நயன்தாரா
  • சித்தார்த் அபிமன்பு @ பழனி செங்கல்வராயனாக அரவிந்த் சாமி
  • சிறுவயது சித்தார்த் அபிமன்பு @ பழனி செங்கல்வராயனாக ரே பவுல்
  • விக்கியாக வம்சி கிருஷ்ணா
  • சக்தியாக கணேசு வெங்கட்ராமன்
  • சுராஜாக கரிசு உத்தமன்
  • சனார்தன் "சனா"வாக ராகுல் மாதவ்
  • கார்த்திசனாக சிறிசரன்
  • செங்கல்வராயனாக தம்பி ராமையா
  • மகிமாவின் தந்தையாக செயப்பிரகாசு
  • முதல்வர்@பூல் மணியாக நாசர்
  • அசோக் பாண்டியனாக நாகிநீடு
  • பெருமாள் சாமியாக மதுசூதன் ராவ்
  • சார்லசு செல்லதுரையாக சாய்சு குருப்
  • சில்பாவாக முக்தா கோட்சே
  • மணிமேகலையாக அபிநயா
  • இராமனாக சூனியர் பாலையா
  • ராம்நாத் செட்டி
  • அனில் முரளி
  • கிருசுகாந்து
  • காவல்துறை ஆணையாளராக அசய் ரத்தினம்
  • அமுலுவாக சாசனா சிங்
  • குமாராக சரத்
  • திருமதி இராமனாக சிறிரஞ்சனி
  • சிறு வயது கடத்தல்காரனாக மேகா காந்தி

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.