சன் தொலைக்காட்சி

சன் டிவி அல்லது சன் தொலைக்காட்சி என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 700 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும்.

சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 14 ஏப்ரல் 1993

11 டிசம்பர் 2011 (HD)

வலையமைப்பு சன் குழுமம்
உரிமையாளர் சன் குழுமம்
பட வடிவம் MPEG-4
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முன்பாக இருந்தப்பெயர் Deli TV India (1992–2004)
வலைத்தளம் சன் குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) 1504

1503 (HD)

அஸ்ட்ரோ (மலேசியா) 211
மின் இணைப்பான்
ரோகர்ஸ் கேபிள் (கனடா) சேனல் 865
Mozaic Qtel (கத்தார்) சேனல் 269
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) சேனல் 133

வரலாறு

சன் குழுமத்தின் முதல் தொலைக்காட்சியாக 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சன் டிவி தொடங்கப்பட்டது.[1][2][3][4] 2006 ஏப்ரல் 24, இல் மும்பை பங்குச் சந்தையால் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பட்டியலில் சன் டிவி $133 மில்லியன் டாலர்கள் வருவாய் உயர்ந்தது என அறிவிக்கப்பட்டது.[5] தமிழர்களால் அதிகமாக பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் டிவிக்கு முதல் இடம், அதே தருணம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் டிவி முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்பம் சார்த்தே கதை அமைந்திருக்கும். 1993 இல் இருந்து இன்று வரை 300 மேல் பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.