வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)
வாணி ராணி என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நெடுந்தொடர். இது நடிகை ராதிகாவின் ராடன் மீடியாவின் தயாரிப்பில் ஜனவரி 21, 2013 முதல் திசம்பர் 8, 2018 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது. இதே நிறுவனத்தின் தயாரிப்பான ’செல்லமே’ தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பானது, தற்பொழுது இந்த தொடருக்கு பதிலாக என்ற சந்திரகுமாரி சரித்திட தொடர் ஒளிப்பரப்பாகின்றது.
வாணி ராணி | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
தயாரிப்பு | ராதிகா சரத்குமார் |
எழுத்து | ராதிகா சரத்குமார் |
இயக்கம் | ஓ. என். ரத்தினம் |
படைப்பாக்கம் | ராதிகா சரத்குமார் |
நடிப்பு | ராதிகா சரத்குமார் வேணு அர்விந்த் பப்லு பிருத்விராஜ் நீலிமா ராணி அருண் குமார் விக்கி கிரிஷ் |
முகப்பிசைஞர் | சத்யா |
முகப்பிசை | "ஒரு பறவை" -சக்திஸ்ரீ கோபாலன் |
இசைஞர் | சத்யா & தரன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இயல்கள் | 1,743 |
தயாரிப்பு | |
செயலாக்கம் | எஸ். சங்கர் & சண்முகம் பிரசாத் |
தயாரிப்பு | ராதிகா சரத்குமார் |
தொகுப்பு | கே. கணேஷ் & வி. டி. விஜயன் |
நிகழ்விடங்கள் | இந்தியா |
ஓட்டம் | தோராயமாக 15-20 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
ராடான் மீடியாவொர்க்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
பட வடிவம் | ஹெச்டி (HD) |
முதல் ஒளிபரப்பு | 21 சனவரி 2013 |
இறுதி ஒளிபரப்பு | 8 திசம்பர் 2018 |
காலவரிசை | |
முன் | செல்லமே |
பின் | சந்திரகுமாரி |
சித்தி, அண்ணாமலை, அரசி தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்த ராதிகா, நான்காவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார், இவருடன் சேர்ந்து வேணு அர்விந்த், பப்லு பிருத்விராஜ், நீலிமா ராணி, அருண் குமார், விக்கி கிரிஷ், மானச் சவளி, நவ்யா, நேஹா, சாந்தி வில்லியம்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] [2][3]
இந்த தொடர் 2014 முதல் சன் குடும்பம் விருதுளில் பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பகுதிகளில் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமை இந்தொடரையே சேரும்.
கதைச் சுருக்கம்
அக்கா தங்கையான வாணி ராணி அண்ணன் தம்பிகளான சாமிநாதன் பூமிநாதனை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணியோ படிப்பு ஏறாத பெண்ணாக அதே சமயம் குடும்ப நிர்வாகத்தில் கெட்டிக்காரியாகவும், அப்பாவியாகவும் இருக்கிறார்.
கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், இருவருக்கும் புகுந்த வீட்டில் ஒரு சிக்கல் வருகிறது. அந்தச் சிக்கலால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாகி அதன் மூலம் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரே வீட்டில், ஒரே குடும்பமாகவே வாழும், இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் வாணி ராணி மெகா தொடரின் கதை.
நடிகர்கள்
- ராதிகா - வாணி/ராணி
- வேணு அரவிந்த் - பூமிநாதன்
- பப்லு பிருத்விராஜ் - சுவாமிநாதன்
ராணி குடும்பம்
- மானச் சவளி - சரவணன் பூமிநாதன் (மகன்)
- நிகிலா ராவ் → நிரஞ்சனி அகர்வால் - செல்வி ராஜேஷ் (மகள்)
- நேஹா - தேன்மொழி பூமிநாதன் (மகள்)
- சுருதி சண்முக பிரியா - பவித்ரா சரவணன் (மருமகள்)
வாணி குடும்பம்
- அருண் குமார் ராஜன் - சூர்யா நாராயணன் (மகன்)
- விக்கி கிரிஷ் - கெளதம் கிருஷ்ணன் (மகன்)
- நீலிமா ராணி - டிம்பில் சூர்யா நாராயணன் (மருமகள்)
- நவ்யா - பூஜா கெளதம் கிருஷ்ணன் (மருமகள்)
- சாந்தி வில்லியம்ஸ் - அங்கயர் கன்னி (பூமிநாதன், ஜோதியின் தாய் மற்றும் சுவாமிநாதனின் மாற்றான் தாய்)
ஜோதி குடும்பம்
- ரவிக்குமார் - மாணிக்கம்
- சிவாஜி மனோகர் - மனோகர் மாணிக்கம்
- காயத்ரி → ஜோதி ரெட்டி → ருபா ஸ்ரீ → பிரேமி வெங்கட் - ஜோதி மனோகர்
துணை காதாபாத்திரம்
- மமீலா ஷைலாஜா பிரியா - அகிலாண்டேஸ்வரி
- ராஜேந்திரன் - பொன்னம்பலம்
- ஸ்ரீ லேகா - அலமேலு பொன்னம்பலம்
- ஜோக்கர் துளசி - பாயிண்ட்
- ராமேஸ்வரம் - சதாசிவம்
- தரணி - மைதிலி
- முரளி கிரிஷ் - ஆட்டோ ஆறுமுகம்
மொழிமாற்றம் & மறுதயாரிப்பு
- இந்த தொடர் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் மொழி மற்றம் செய்யப்பட்டு சில பகுதிகளுடன் நிறுத்தப்பட்டது.
- இந்த தொடர் ஹிந்தி மொழியில் வாணி ராணி என்ற பெயரில் மறு தயாரிப்பு செய்யப்பட்டு & தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
- பெங்காலி மொழியில் சீமரேகா என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது, இந்த தொடரின் கதை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் சனவரி 21, 2013ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) ஒளிபரப்பாகிறது.
- இந்த தொடரின் பகுதிகள் ராடன் மீடியா என்ற யூடியூப் அலைவரிசை மூலம் எப்பொழுது பார்க்கமுடியும்.
- சன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.
- இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காசி சேவையான வசந்தம் தொலைக்காட்சியில் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு சிங்களம் உபதலைப்புடன் ஒளிபரப்பாகிறது.
இவற்றை பார்க்க
ஆதாரங்கள்
- Krishnamoorthy, Mohan (2018-12-07). "Radhika Tweet : ரசிகர்களை கதற விட்ட ராதிகா" (en-US).
- "சன்டிவியில் வாணி ராணி 1000" (in ta). tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/television/radhika-s-vani-rani-tv-serial-1000th-episode-041014.html.
- "Vani Rani completes 1700 episodes" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vani-rani-completes-1700-episodes/articleshow/57493465.cms.
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | வாணி ராணி | Next program |
செல்லமே | சந்திரகுமாரி |