சந்திரகுமாரி

சந்திரகுமாரி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 10, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 மார்ச்சு 2019 முதல் முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு சரித்திர குடும்ப தொடர் ஆகும்.

சந்திரகுமாரி
வகை சரித்திரம்
கற்பனை
நாடகம்
எழுத்து மருது சங்கர்
பால முரளி வர்மா
இயக்கம்
திரைக்கதை குமரேசன்
ராஜ் பிரபு
படைப்பாக்கம் ராதிகா
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 144
தயாரிப்பு
தயாரிப்பு ராதிகா
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 10 திசம்பர் 2018 (2018-12-10)
இறுதி ஒளிபரப்பு 1 சூன் 2019 (2019-06-01)
காலவரிசை
முன் வாணி ராணி
பின் தமிழ்ச் செல்வி

இந்த தொடரை சன் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ராதிகாவின் ராடான் மீடியா நிறுவனத்துடன் இணைந்து அதிக பொருள் செலவில் தயாரிக்கிறது. இந்த தொடரில் சரித்திரகால பெண் மற்றும் தற்காலத்து பெண் என 2 வேடங்களில் ராதிகா நடித்தார், இவருக்கு பதிலாக விஜி சந்திரசேகர் சந்திரா என்ற காதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் சேர்ந்து தாமிரபரணி, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். யுவராணி, அரவிந்து ஆகாசு, அருண் குமார், வேணு அரவிந்த், லதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.[1][2]

சரித்திர காலத்து கதையை, அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தின் இயக்குநரான சுரேஸ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் கதையை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார். சிற்பி இசையமைக்கும் இந்த தொடருக்கு, பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்தார்.

நடிகர்கள்

முதன்மை காதாபாத்திரம்

  • விஜி சந்திரசேகர் (79-144) - சந்திரா (தற்காலத்தில்) அண்ணாமலை குடும்பத்தின் மூத்த மருமகள், ஒரு கொலை வழக்கில் காவலில் இருந்தார், அஞ்சலியின் தாய் மற்றும் நீலகண்டனின் மனைவி.
    • ராதிகா (1-78) - அரசி சந்திரகுமாரி (முக்காலத்தில்) மங்கலாபுரி நாட்டு அரசி, புகழ்பெற்ற புராணமான சந்திர குல வம்சத்தின் வம்சாவளியினர், கற்பக லிங்கத்தை பாதுகாப்பவர்.
  • பானு
    • யாழினிதேவி (முக்காலத்தில்) மங்கலாபுரி நாட்டு இளவரசி.
    • அஞ்சலி, சந்திரா மற்றும் நீலகண்டனின் மகள், இவள் தனது தாயை வெறுப்பவள், ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர், சந்திர வம்சத்தை பற்றி ஆராய்கிறாள்.
  • அருண் சாகர் / வேணு அரவிந்த் - நீலகண்டர்
  • அரவிந்து ஆகாசு - ஆகாஷ்

துணை காதாபாத்திரம்

  • நிரோஷா - வள்ளி
  • தேவி பிரியா -ருத்திரா
  • சாக்ஷி சிவா - சிவநேசன்
  • யுவராணி - ரோகினி சிவநேசன்
  • லதா -
  • அருண் குமார் ராஜன் - சத்தியமூர்த்தி
  • நேகா - சரண்யா
  • சம்யுக்த கார்த்திக்
  • மல்லிகா
  • அருண்
  • அர்ஜுன்
  • சுவேதா
  • ஸ்ரீவித்தியா
  • அசோக்
  • கீதா
  • கெளதம்
  • வினோத் - நாகா

முன்னாள் காதாபாத்திரம்

  • உமா ரியாஸ்கான் - தேவிகா
  • அருண் சாகர் - நீலகண்டர்
  • சில்பா
  • சசிந்தர் புஷ்பலிங்கம் - முகுந்தன்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதலில் 10 திசம்பர் 2018 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில்லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.

19 வருடங்கலாக இரவு 9:30 மணிக்கு ராதிகாவின் தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தது, இந்த தொடரின் மதிப்பிட்டு அளவு குறைவு காரணாமாக இந்த தொடர் நேரம் மாற்றப்பட்டது.

ஒளிபரப்பான திகதிநாட்கள்நேரம்அத்தியாயங்கள்
10 திசம்பர் 2018 - 16 மார்ச்சு 2019
திங்கள் - சனி
21:301-78
18 மார்ச்சு 2019 – 1 சூன் 2019 (2019-06-01)
திங்கள் - சனி
18:3079- 114

மதிப்பீடுகள்

கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.

அத்தியாயங்கள் ஒளிபரப்பான திகதி BARC மதிப்பீடுகள் (தமிழ்நாடு + புதுச்சேரி)[3]
தேசிய அளவில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)
1-20 10 திசம்பர் 2018 - 2-ஜனவரி 2019 5.8%
21-40 3 ஜனவரி 2019 - 30 ஜனவரி 2019 5.3%
41-60 31 ஜனவரி 2019 - 22 பிப்ரவரி 2019 6.5%
61-80 23 பிப்ரவரி 2019 - 19 மார்ச்சு 2019 6.8%
81-100 20 மார்ச்சு 2019 - 11 ஏப்ரல் 2019 3.2%
101-120 12 ஏப்ரல் 2019 - 4 மே 2019 3.6%
121-144 6 மே 2019 - 1 ஜூன் 2019 3.5%

மொழி மாற்றம்

இந்த தொடர் மலையாளம் மொழியில் சந்திரகுமாரி என்ற அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 24, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு சூர்யா தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகின்றது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உதயா தொலைக்காட்சி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

நாடுLanguageஅலைவரிசைதலைப்புஒளிபரப்புபகுதிகள்
இந்தியாதெலுங்குஜெமினி தொலைக்காட்சிచంద్రకుమారి24 டிசம்பர் 2018 - 8 மார்ச் 201955
மலையாளம்சூர்யா தொலைக்காட்சிചന്ദ്രകുമാരി24 டிசம்பர் 2018 - 8 மார்ச் 2019117
கன்னடம்உதயா தொலைக்காட்சிಚಂದ್ರಕುಮಾರಿ7 சனவரி 2019 - 8 மார்ச் 201944

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை மாலை 6:30 மணி தொடர்கள்
Previous program சந்திரகுமாரி
(18 மார்ச்சு 2019 - 1 சூன் 2019)
Next program
விநாயகர்
(9 அக்டோபர் 2017 – 16 மார்ச்சு 2019)
தமிழ்ச்செல்வி
(3 சூன் 2019 - ஒளிபரப்பில்)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9:30 மணி தொடர்கள்
Previous program சந்திரகுமாரி
(10 திசம்பர் 2018 – 18 மார்ச்சு 2019)
Next program
வாணி ராணி
(2013-2018)
லட்சுமி ஸ்டோர்ஸ்
(18 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.