தாமிரபரணி (திரைப்படம்)

தாமிரபரணி 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை ஹரி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஷால், பானு, பிரபு, நதியா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 27ம் திகதி வெளியிடப்பட்டது.

தாமிரபரணி
இயக்கம்ஹரி
தயாரிப்புபி.பாரதி ரெட்டி
கதைஹரி
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஷால்
பானு
பிரபு
நதியா
நாசர்
விஜயகுமார்
நிழல்கள் ரவி
ரோகினி
மனோரமா
கஞ்சா கருப்பு
விநியோகம்விஜயா புரடக்சன்
வெளியீடு2007
ஓட்டம்159 mins
மொழிதமிழ்

கதை

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

கோபமும் வீரமும் கொண்ட இளைஞனாக வரும் விஷாலை சுற்றி கதை தொடங்குகின்றது. தனது மாமா பிரபுவின் மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும உள்ள விஷால் மாமாவை எதிர்த்து யாரேனும் பேசினால் அவர்களிடம் சண்டைக்கு போகின்ற குணமுடையவர். அதே ஊரின் பெரிய மனிதரான விஜயகுமாரின் மகள் நதியா, நதியாவின் அண்ணன் நாசர். இவர்கள் குடும்பத்திற்கும் பிரபுவின் குடும்பத்திற்கும் ஆகாத நிலையில் நதியாவையும் நாசரையும் மாமா பிரபுவிற்காக பலமுறை எதிர்க்கிறார் விஷால்.

இந்நிலையில் நதியாவின் மகளான பானு விஷாலைச் காதலிப்பதாக கூறுகின்றார். இதனை நம்பாத விஷால் எங்கே பானு தன்னை வம்பில் சிக்கவைத்துவிடுவாரோ என்று நினைத்து அவரை விட்டு ஒதுங்குகின்றார். ஒரு கட்டத்தில் பானு விஷாலுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துவிட அதனை தொடர்ந்து இரு குடும்பத்திற்கும் பிரச்சனை வலுக்கின்றது. இந்நிலையில் பானு தன் மாமா பிரபுவின் மகள் என்பதும் தான் விரோதியாக நினைக்கும் நதியா மாமாவின் மனைவி என்பதும் விஷாலிற்குத் தெரியவருகிறது. பிரபு தன் மனைவி நதியாவைப் பிரிந்ததே தனக்காகவும் தன் தாய் ரோகினிக்காகவும் தான் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட விஷால் தன்னால் களங்கப்பட்ட பானுவை எப்படியாவது திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்ததா? இரு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதி கதையாகும்.

நடிகர்கள்

நடிகர்கள்பாத்திரம்
விஷால்parani
பானுபானுமதி
பிரபுசரவணப்பெருமாள்
நதியாசகுந்தலா தேவி
நாசர்வெல்லதுரை
விஜயகுமார்நாசரின் அப்பா
நிழல்கள் ரவிநாசரின் அண்ணன்
ரோகிணிபிரபுவின் தங்கை
மனோரமாபிரபுவின் அம்மா

பாடல்கள்

  • கருப்பான கையாலே - ரஞ்சித், ரோசிணி, கோரஸ்
  • கட்டப்பொம்மன் ஊரெனக்கு - விஜய ஜேசுதாஸ், கோரஸ்
  • வார்த்தை ஒன்னு - கே கே
  • தாலியே தேவையில்லை - ஹரிஹரன், பவதாரினி
  • திருச்செந்தூரு முருகா - நவின், கோரஸ்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.