கே தொலைக்காட்சி
கே தொலைக்காட்சி அல்லது கே டி.வி. (KTV) சன் குழுமத்தின் மற்றுமொரு 24 மணி நேர தொலைக்காட்சியாகும். இந்தத் தொலைக்காட்சியில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் ஆங்கில மொழிமாற்று திரைப்படங்கள் ஒளிப்பரப்பாகும்.
கே தொலைக்காட்சி | |
---|---|
![]() | |
கே.டி.வி. | |
ஒளிபரப்பு தொடக்கம் | அக்டோபர் 22, 2001 |
வலையமைப்பு | சன் குழுமம் |
உரிமையாளர் | சன் குழுமம் |
பட வடிவம் | 576i SD 1080i HD |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
துணை அலைவரிசை(கள்) | சன் தொலைக்காட்சி, சன் மியூசிக்கு, சன் செய்திகள், சன் லைப், ஆதித்யா, சுட்டி டி.வி |
வலைத்தளம் | KTV |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாட்டா ஸ்கை (இந்தியா) | அலைவரிசை 704 (SD) |
டிஷ் டிவி (இந்தியா) | Channel 911 (SD) |
வீடியோகான் டி2எச் (இந்தியா) |
அலைவரிசை 801 (SD) Channel 803 (HD) |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 501 (SD) |
ரிலையன்சு டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 810 (SD) |
சன் டைரக்ட் (இந்தியா) |
அலைவரிசை 102 (SD) Channel 961 (HD) |
மின் இணைப்பான் | |
Hathway (மும்பை, இந்தியா) |
அலைவரிசை 565 (SD) |
ஏசியாநெட் டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 223 (SD) |
தொடக்கம்
இந்தத் தொலைக்காட்சி 22 அக்டோபர் 2001இல் தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனால் தொடங்கப்பட்டது இந்த கே டி.வி.[1]
பெயர்
கே டி.வி எனும் பெயரில் கே என்பது கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
கே டி.வி.யின் உயர் வரையறைத் தொலைக்காட்சி
கே டி.வியின் உயர் வரையறை அலைவரிசையின் (HD Channel) ஒளிபரப்பு 11 டிசம்பர் 2011 முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள்
தினமும் காலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மார்னிங்க் ஷோ" என்ற பெயரிலும் மதியம் 1.00மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மேட்னீ ஷோ" என்ற பெயரிலும் 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "இவினிங்க் ஷோ" என்ற பெயரிலும் ஒளிப்பரப்பாகுகிறது.வெள்ளிக்கிழமை இரவில் ஒளிப்பரப்பாகும் படம் வெள்ளி சுப்பர்ஹிட் இரவுக் காட்சி என நிகழ்ச்சிகள் பல பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. [2]
கே டி.வி. படங்கள்
கே டி.வி.யை உருவாக்கியப்பொழுது சன் குழுமத்திடம் 5000-இற்கும் மேற்பட்ட படங்கள் ஒளிபரப்புக்கு இருந்தன.
மேற்கோள்கள்
- "Sun Network will feed the movie hungry KTV". indiantelevision.com. பார்த்த நாள் 4 April 2014.
- http://www.sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=3&channelname=KTV
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV Network
- Sun Group