சந்தோஷ் சுப்பிரமணியம்

சந்தோஷ் சுப்பிரமணியம் 2008 ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை தந்தைக்கும் மகனுக்கு இருக்கும் உறவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெனிலியா, கீதா முதலியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆக்கம்.

சந்தோஷ் சுப்பிரமணியம்
இயக்கம்ராஜா
தயாரிப்புகலாபதி S. அகோரம்
கதைஅப்புரி ரவி
பாஸ்கர்
ராஜா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஜெயம் ரவி
ஜெனிலியா
பிரகாஷ் ராஜ்
கீரத்
சந்தானம்
கௌசல்யா
கீதா
படத்தொகுப்புமோகன்
வெளியீடுApril 11, 2008[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

சந்தோஷ் சுப்பிரமணியம் (ஜெயம் ரவி) ஹரினியும் (ஜெனிலியா) காதலிக்கின்றனர் சந்தோஷின் தந்தை சுப்பிரமணியம் (பிரகாஷ்ராஜ்) மிகவும் கண்டிப்பானவர் மற்றும் அன்பானவர். தன் மகனை தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார். தந்தையின் கெடுபிடிகள் மனம் வருத்தினாலும், அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். சந்தோஷ் தன் திருமணத்தை தனது விருப்படி செய்துகொள்ளவேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை சந்தோசுக்கு மணமுடிக்கப் பார்க்கிறார் சுப்பிரமணியம். தன் தந்தையிடம் தன் காதலைச் சொல்லும் சந்தோஷ் தன் காதலியை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் சிலநாட்கள் வீட்டில் தங்கவைத்தால் அவளை அனைவருக்கும் பிடிக்கும் என்கிறார்.

இதையடுத்து ஹரினி, சந்தோஷ் வீட்டில் தங்கி அவர்களுடன் பழக வருகிறார். அவரது வெகுளித்தனத்தால் சந்தோசுக்கு பல சிக்கல்கள் நேர்கின்றன. மேலும் ஹரினியால் சந்தோஷ் வீட்டில் சுதந்திரமாகவும், இயல்பாகவும் இருந்து தாக்குப் பிடிக்க முடியாமல், தன் வீட்டிற்கே திரும்பி விடுகிறார். இதன்பிறகு ஹரினியும் சந்தோசும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்

  1. "'Santosh Subramaniam' releases today". Entertainment MSN.com. பார்த்த நாள் 2008-05-26.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.