பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் (கன்னடம்: ಪ್ರಕಾಶ್ ರೈ பிறப்பு: மார்ச்சு 26, 1965), இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்[1]. அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்

இயற் பெயர் பிரகாஷ் ராய்
பிறப்பு 26 மார்ச்சு 1965 (1965-03-26)
மங்களூர், கர்நாடகா, இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்,
இயக்குநர்,
தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1991 - இன்றுவரை
துணைவர் லலிதா குமாரி
(1994 - 2009 மணமுறிவு)
போனி வர்மா
(2010 - தற்போதும்)
குறிப்பிடத்தக்க படங்கள் காஞ்சிவரம், கில்லி, ஆசை

திரைப்படங்கள்

தெலுங்கு

தமிழ்

இந்தி

மக்களவை வேட்பாளர்

2019 மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கட்சி சாரா வேட்பாளராக போட்டியிட்டு 28,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். பாசகவின் பி. சி. மோகன் 602,853 வாக்குகளையும் காங்கிரசின் ரிசுவான் அர்சத் 531,885 வாக்குகளையும் பெற்றனர்.

மேற்கோள்கள்

  1. "Southern films score big at National Awards". த இந்து (செப்டம்பர் 7 2009). பார்த்த நாள் 2009-09-07.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.