ஜெனிலியா

ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

ஜெனிலியா

இயற் பெயர் ஜெனிலியா டிசூசா
பிறப்பு ஆகத்து 5, 1987 (1987-08-05)
மும்பை, இந்தியா
வேறு பெயர் ஜீனு, ஹரிணி
நடிப்புக் காலம் 2003—தற்போது வரை
குறிப்பிடத்தக்க படங்கள் ஹரிணி பாய்ஸ்
ஹாசினி பொம்மரில்லு
அதிதி (Jaane tu ya jaane na)

விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

  • 2006: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); பொம்மரில்லு
  • 2007: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); தீ

நந்தி விருதுகள்

திரை வாழ்க்கை

ஆண்டுதிரைப்படம்வேடம்மொழிகுறிப்புகள்
2003பாய்ஸ்ஹரிணிதமிழ்இதே பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
சத்யம்அன்கிதாதெலுங்கு
துஜே மேரி கசம்அஞ்சுஇந்தி
2004மஸ்திபிந்தியாஇந்தி
சம்பாசந்தியாதெலுங்குதமிழில் சம்பா என மொழிமாற்றம்
2005நா அல்லுடுககனாதெலுங்குதமிழில் மதுரை மாப்பிள்ளை என மொழிமாற்றம்
சச்சின்சாலினிதமிழ்
சுபாஷ் சந்திர போஸ்அனிதாதெலுங்கு
சை]இந்துதெலுங்குதமிழில் கழுகு
மலையாளத்தில் Challenge என மொழிமாற்றம்
2006ஹேப்பிமதுமதிதெலுங்குமலையாளத்தில் ஹேப்பி என மொழிமாற்றம்
ராம்லக்சுமிதெலுங்கு
பொம்மரில்லுஹாசினிதெலுங்கு
சென்னைக் காதல்நர்மதாதமிழ்
2007தீபூஜாதெலுங்கு
2008மிஸ்டர். மேதாவிசுவேதாதெலுங்கு
சத்யா இன் லவ்வேதாகன்னடம்
சந்தோஷ் சுப்பிரமணியம்ஹாசினிதமிழ்பொம்மரில்லுவின் மீளுருவாக்கம்
மேரி பாப் பஹலி ஆப்ஷீகா கபூர்இந்தி
ரெடிபூஜாதெலுங்கு
ஜானே தூ யா ஜானே நாஅதிதி (மியாவ்)இந்தி
2009சசிரேகா பிரயாணம்சசிரேகாதெலுங்கு
லைப் பார்ட்னர்சஞ்சனாஇந்தி
காதாசித்ரா சிங்தெலுங்குநந்தி சிறப்பு ஜூரி விருது
2010சான்ஸ் பே டான்ஸ்தின சர்மாஇந்தி
2010உத்தம புத்திரன்பூஜாதமிழ்
2010ஆரஞ்சுஜானுதெலுங்கு
2011உறுமிஅரக்கள் ஆயிஷாமலையாளம்AsiaVision Film Award for Best Actress
2011போர்ஸ்மாயாஇந்தி
2011வேலாயுதம்பாரதிதமிழ்
2011இட்'ஸ் மை லைப்நடாலி சோப்ரா (கீனு)இந்திPost-production
2011ஹூக் யா குரூக்சோனியா ராய்இந்திShelved
2012நா இஷ்தாம்தெலுங்கு
2012தேரே நால் லவ் ஹோ கயா Miniஇந்தி
2012ராக் தி ஷாடி இந்தி

மறுபிரவேசம்

தன் கணவருடன் இருக்கும் படம்

தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.[1]

மேற்கோள்கள்

  1. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12392&id1=3#sthash.T5rmFS6e.dpuf தினகரன் பார்த்தநாள் 05.02.2014

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.