கமரூன்

கமரூன் (Cameroon, /kæməˈrn/ (listen); French: Cameroun), அதிகாரபூர்வமாக கமரூன் குடியரசு நடு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக மேற்கு மற்றும் வடக்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் பயாபிரா பெருங்குடா, கினி வளைகுடா, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூன் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தில் உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், இது புவியியல்-ரீதியாகவும் வரலாற்று-ரீதியாகவும் பேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. தெற்கு கமரூன்கள் மேற்காப்பிரிக்க வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. கமரூன் சிலவேளைகளில் மேற்காப்பிரிக்க நாடாகவும் பார்க்கப்படுகிறது.

கமரூன் குடியரசு
Republic of Cameroon

République du Cameroun  (பிரெஞ்சு மொழி)
கொடி சின்னம்
குறிக்கோள்: 
"Paix – Travail – Patrie" (பிரெஞ்சு மொழி)
"Peace – Work – Fatherland"
நாட்டுப்பண்: 
ஓ கமரூன், எங்கள் முன்னோர்களின் தொட்டில்
உலக வரைபடத்தில் கமரூனின் அமைவிடம்
Location of கமரூன்
தலைநகரம்யாவுண்டே[1]
பெரிய நகர் டௌவாலா[1]
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
பிரெஞ்சு
பிராந்திய மொழிகள் செருமன்[2], கலப்பு ஆங்கிலம், புலா, எவோண்டோ, கம்பிராங்கிளாயிசு
இனக் குழு
  • 31% கமரூன் மேட்டுநிலத்தவர்
  • 19% பான்டு
  • 11% கிர்தி
  • 10% புலா
  • 8% வடமேற்கு பான்டு
  • 7% கிஅக்கு நிகிரித்து
  • 13% ஏனைய ஆப்பிரிக்கர்
  • <1% ஆப்பிரிக்கரல்லாதோர்
மக்கள் கமரூனியர்
அரசாங்கம் ஒருமுக செல்வாக்கான-கட்சி சனாதிபதிக் குடியரசு (எதேச்சாதிகார சர்வாதிகாரம்)[3][4]
   அரசுத்தலைவர் பவுல் பியா
   தலைமை அமைச்சர் யோசப் இங்கூட்டே
சட்டமன்றம் நாடாளுமன்றம்
   மேலவை மேலவை
   கீழவை தேசியப் பேரவை
விடுதலை பிரான்சிடம் இருந்து
   அறிவிப்பு 1 சனவரி 1960 
   முன்னாள் பிரித்தானியக் கமரூன்களுடன் ஒன்றியம் 1 அக்டோபர் 1961 
பரப்பு
   மொத்தம் 475 கிமீ2 (53-வது)
183 சதுர மைல்
   நீர் (%) 0.57
மக்கள் தொகை
   2016 கணக்கெடுப்பு 23,439,189[5] (56-வது)
   2005 கணக்கெடுப்பு 17,463,836[6]
   அடர்த்தி 39.7/km2 (167-வது)
102/sq mi
மொ.உ.உ (கொஆச) 2018 கணக்கெடுப்பு
   மொத்தம் $95.068 பில்லியன்[7] (93வது)
   தலைவிகிதம் $3,820[7] (152-வது)
மொ.உ.உ (பெயரளவு) 2018 கணக்கெடுப்பு
   மொத்தம் $38.445 பில்லியன்[7] (98-வது)
   தலைவிகிதம் $1,544[7] (152-வது)
ஜினி (2014)46.6[8]
உயர்
மமேசு (2017) 0.556[9]
மத்திமம் · 151-வது
நாணயம் நடு-ஆப்பிரிக்க பிராங்கு (XAF)
நேர வலயம் மேற்காப்பிரிக்க நேரம் (ஒ.அ.நே+1)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +237
இணையக் குறி .cm

கமரூனின் ஆட்சி மொழிகள் பிரெஞ்சும், ஆங்கிலமும் ஆகும். இதன் புவியியல், கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாக இந்நாடு பொதுவாக "சிற்றுருவில் ஆப்பிரிக்கா" என அழைக்கப்படுகிறது. இங்கு கடற்கரை, பாலைவனம், மலை, பொழில், புன்னிலம் எனப் பல இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இதன் அதியுயர் புள்ளி கமரூன் மலை 4,100 மீட்டர் உயரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தௌவாலா பெரிய நகரமாகும். யாவுண்டே இதன் தலைநகரம் ஆகும். மக்கோசா, பிக்கூத்சி போன்ற பூர்வீக இசை வடிவங்களுக்காகவும், தேசிய காற்பந்து அணியின் வெற்றிகளுக்காகவும், கமரூன் சிறப்புப் பெற்றது.

மேற்கோள்கள்

  1. "Cameroon". World Factbook. CIA. பார்த்த நாள் 2 November 2016.
  2. "Wenn Deutsch gleich Zukunft heißt", Dw.com, 29 Nov. 2010
  3. "Totalitarian Dictatorship and Autocracy In Cameroon Undermines Separation of Powers" (in en-gb). Cameroon Concord (February 16, 2017). http://cameroon-concord.com/totalitarian-dictatorship-and-autocracy-in-cameroon-undermines-separation-of-powers. பார்த்த நாள்: 17 October 2018.
  4. "Freedom in the World 2018 - Cameroon" (en) (2018-01-04). பார்த்த நாள் 17 October 2018.
  5. "World Population Prospects: The 2017 Revision". United Nations Department of Economic and Social Affairs, Population Division.
  6. "Rapport de présentation des résultats définitifs" (PDF) (French). Institut national de la statistique. பார்த்த நாள் 21 July 2012.
  7. "World Economic Outlook Database, October 2018". அனைத்துலக நாணய நிதியம்.
  8. "GINI index (World Bank estimate)". உலக வங்கி.
  9. "2018 Human Development Report". United Nations Development Programme (2018). பார்த்த நாள் 14 September 2018.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.