ஏற்கப்படாத நாடுகள்

இந்த ஏற்கப்படாத நாடுகள் பட்டியலில் உலகளவில் முழுமையான அரசியல் ஏற்பு இல்லாத, தங்கள் அரசாண்மை நிலையை வழமையான பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் பன்னாட்டு அரசுகளின் ஏற்பினை வேண்டும், தற்போதுள்ள நிலப்பகுதிகள் குறிப்பிடப் படுகின்றன.

  பன்னாட்டு ஏற்பு இல்லாத நாடுகள்
  சிறுபான்மை ஏற்பு
  பெரும்பான்மை ஏற்பு
  அரசுநிலை சர்ச்சைக்குள்ளான நிலப்பகுதிகள்; அரசு தலைமையை சில நாடுகளே ஏற்றவை

இவை இரண்டு வகைப்படுகின்றன.முதலாவதாக, தங்கள் நிலப்பகுதியின் மீது முழு அல்லது போதிய கட்டுப்பாடு கொண்டிருக்கும் நடப்பில் உண்மையான, முழு விடுதலை விரும்பும் அரசு அமைப்புகள்.இரண்டாவதாக, தாங்கள் உரிமை கோரும் நிலப்பகுதியின் மீது முழு அல்லது போதிய கட்டுப்பாடு இல்லாத, ஆனால் சட்டப்படி உண்மையான அரசமைப்பாக, ஓர் ஏற்புடைய அன்னிய நாடாவது ஏற்றுக்கொண்ட அரசு அமைப்புகள்.இந்த பட்டியலில் உள்ள சில நாடுகள், சைப்பிரசு மற்றும் கொரிய குடியரசு போன்றவை, பெரும்பான்மையான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் அவையில் அங்கம் வகித்தாலும் மிகச்சில நாடுகள் அவற்றை ஏற்கவில்லை என்பதால் குறிப்பிடப்பட்டுள்ளன.

முந்தைய காலகட்டங்களில் இவ்வாறு ஏற்பில்லாத நாடுகள் பட்டியலுக்குக் காண்க:வரலாற்றில் ஏற்கப் படாத நாடுகள் பட்டியல்.வெளியிலிருந்து ஆளும் ஏற்கப் படாத நாடுகளின் பட்டியலுக்குக் காண்க: வெளியிலிருந்து ஆளும் அரசமைப்புகள் பட்டியல்

ஐக்கிய நாடுகள் அவையில் 192 அங்கத்தினர்கள் நாடுகள் உள்ளன.புனித தவிசு பன்னாட்டு அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படினும் ஐ.நா அவை அங்கத்தினராக இல்லை;இருப்பினும் அங்கு பார்வையாளர் தகுதி வழங்கப்பட்டுள்ளது.[1]

இன்றைய ஏற்புடைமை நிலை கொண்டு அரசியல் புவியமைப்புகள்

எந்த அரசாலும் ஏற்கப்படாத நாடுகள்

பெயர் எப்போதிருந்து சர்ச்சை ஏற்பு மேற்கோள்கள்
 நகோர்னோ கரபாக் குடியரசு 1991 நகோர்னோ கரபாக்கின் அசர்பைஜானிடமிருந்தான சுதந்திர அறிவிப்பை சட்டரீதியானதென எந்த நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. [2]
 சோமாலிலாந்து 1991 சோமாலிலாந்தின் சோமாலியாவிடமிருந்தான சுதந்திர அறிவிப்பை சட்டரீதியானதென எந்த நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. [3]

ஐ.நா அங்கத்தினர் அல்லாதவர் மட்டும் ஏற்பு

பெயர் எப்போதிருந்து சர்ச்சை ஏற்பு மேற்கோள்கள்
 திரான்சுனிஸ்திரியா 1990 டிரான்சுனிசுட்ரியாவினை சுதந்திர நாடாக அப்காசியாவும் தென் ஒசேத்தியாவும் ஏற்றிருக்கின்றன. அனைத்து ஐநா உறுப்பு நாடுகளும் இதனை மல்தோவாவின் பகுதியெனக் கருதுகின்றன. [4]

ஐ.நா அங்கத்தினர் இல்லை ஆனால் ஓரு ஐ.நா அங்கத்தினராவது ஏற்பு

பெயர் எப்போதிருந்து சர்ச்சை ஏற்பு மேற்கோள்கள்
 அப்காசியா 1992 அப்காசியாவின் சுதந்திர பிரகடனம் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் உருசியா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகிய நாடுகளாலும் ஐ.நா.வில் அங்கம் வகிக்காத டிரான்சுனிசுட்ரியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[5] இதர ஐ.நா. உறுப்பு நாடுகள் இதனை ஜோர்ஜியாவின் பகுதியெனக் கருதுகின்றன. [6][7][8]
 சீனக் குடியரசு (தாய்வான்) 1949 சீனா என்பது தற்போது சீனக் குடியரசினதும் (தாய்வான்), சீன மக்கள் குடியரசினதும் (சீ.ம.கு) கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் ஒன்றிணைந்த ஒரு இறையாண்மையுள்ள நாடு என்ற கொள்கை "ஒரு சீனா கொள்கை" என்று அழைக்கப்படுகிறது. சீனக்குடியரசும் சீன மக்கள் குடியரசும் "ஒரு சீனா" கொள்கைக்கு வெவ்வேறான வியாக்கியானங்களை கொண்டிருக்கின்றன. 1971 ஆம் ஆண்டு வரை சீனக்குடியரசே சீனாவை ஐநாவில் பிரதிநிதிப்படுதியது. எனினும், அதன் பிற்பாடு ஐ.நா. பொதுச்சபையின் 2758ம் இலக்க தீர்மானதிற்கமைய ஐ.நா. உறுப்புரிமை சீன மக்கள் குடியரசிற்கு கைமாறியது. இதைத்தொடர்ந்து பெரும்பான்மையான ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் சீன மக்கள் குடியரசை அங்கீகரித்தன. எனினும் சீனக்குடியரசு தற்போது 22 ஐ.நா. உறுப்புரிமை நாடுகளாலும் புனித தவிசாலும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் சில சீனக்குடியரசை சட்டபூர்வமான சீன அரசாங்கமாக கருதுகின்றன. ஏனைய ஐ.நா. உறுப்பு நாடுகள் சீனக்குடியரசை ஒரு நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. சில நாடுகள் சீனக்குடியரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியை சீன மக்கள் குடியரசின் அங்கமாகக் கருதுகின்றன. இன்னும் சில நாடுகள் இப்பகுதி தொடர்பாக எப்பக்கமும் சாராதிருக்க கவனமான இராஜதந்திரவார்த்தை பிரயோகங்களை பாவிக்கின்றன. [9]
 கொசோவோ 2008 கொசோவோ 2008ம் ஆண்டில் தனது விடுதலைப் பிரகடனத்தை செய்தது. 11 அக்டோபர் 2011 வரையான தகவலின்படி, 85 ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஐநா அங்கத்துவமற்ற நாடான சீனக் குடியரசும் (தாய்வான்) கொசோவோவின் சுதந்திர பிரகடனத்தை அங்கீகரித்திருக்கின்றன. பாதுகாப்புச் சபையின் 1244ம் இலக்க தீர்மானத்திற்கமைய 1999ம் ஆண்டு தொடக்கம் கொசோவோவானது ஐக்கிய நாடுகள் இடைக்கால நிருவாக அமைப்பினால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு இவ்வமைப்புக்கு கிடைக்கிறது. கொசோவோ உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றில் அங்கம் வகிக்கிறது. [10].[11]
 வடக்கு சைப்பிரசு வடக்கு சைப்பிரசு 1983 ஆம் ஆண்டு விடுதலைப் பிரகடனம் செய்தது. தற்போது இது ஐநா உறுப்பு நாடான துருக்கியினால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு சைப்பிரசு இசுலாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்தை கொண்டிருக்கிறது. வட சைப்பிரசின் விடுதலைப் பிரகடனத்தை ஐநா பாதுகாப்புச் சபையின் 541ம் இலக்க தீர்மானம் சட்டபூர்வமற்றதென தெரிவிக்கிறது[12]. [13].
பாலஸ்தீன நாடு 1988 அல்ஜீரியத் தலைநகர் அல்ஜீயர்சில் 1988ம் ஆண்டு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தினால் பாலஸ்தீனிய நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. அச்சமயத்தில் பாலஸ்தீனத்தின் எந்தவொரு நிலப்பரப்பும் பா.வி.இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை[14]. 93 ஐ.நா. அங்கத்துவ நாடுகள்[15], புனித தவிசு, அரபு நாடுகளின் கூட்டமைப்பு, இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு பாலஸ்தீன நாட்டினை அங்கீகரித்திருக்கின்றன. இசுரேல் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்காததோடு பாலஸ்தீனர்களால் உரிமை கொண்டாடப்படும் நிலப்பரப்பை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஒஸ்லோ மற்றும் இசுரேலிய-பாலஸ்தினிய இடைக்கால ஒப்பந்தத்தின் விளைவாக இசுரேலிய அரசு காசா, மேற்குக் கரையின் ஒரு பகுதியை நிருவகிப்பதற்கான சில அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பாலஸ்தீன அதிகார சபையிடம் கையளித்திருக்கிறது. ஐ.நா. சபை பாலஸ்தீனத்தை உறுப்பினரல்லாத ஆனால் பார்வையாளர் அந்தஸ்துள்ள ஒரு தேசமாக அங்கீகரித்திருக்கிறது. [16]
 சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு (SADR) 1976 சாராவி அரபு சனநாயகக் குடியரசும் மொரோக்கோவும் மேற்கு சகாராவின் இறையாண்மைக்கு உரிமை கோருகின்றன. சாராவி அரபு சனநாயகக் குடியரசு 1976ம் ஆண்டு விடுதலைப் பிரகடனம் செய்தது. இதை 84 ஐநா அங்கத்துவ நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. அத்தோடு இது ஆபிரிக்க ஒன்றியத்திலும் அங்கம் வகிக்கிறது. எனினும், பல நாடுகள் தங்களது அங்கீகாரத்தை விலக்கிக்கொண்டுள்ளன அல்லது சுயநிர்ணயத்தை முடிவுசெய்யும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு வரைக்கும் நிறுத்தி வைத்துள்ளன. தற்போது 57 நாடுகளே சாராவி அரபு சனநாயகக் குடியரசுடனான தூதரக உறவைப் பேணி வருகின்றன.[17][18] மேற்கு சகாராவை மொரோக்கோவின் ஒரு பகுதியை எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ளாவிடினும் மொரோக்கோவின் தன்னாட்சி திட்டத்தை சில நாடுகள் ஆதரிக்கின்றன. ஐ.நா. பொதுச்சபையின் 34/37ம் தீர்மானம் மேற்கு சகாரா மக்களின் சுயநிர்ணயம் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை ஏற்றுக்கொள்வதோடு பொலிசாரியோ முன்னணியை மேற்கு சகாரா மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறது. தற்போது மேற்கு சகாரா ஐ.நா.வின் தன்னாட்சியில்லாத நிலப்பிராந்தியங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. [19]
 தெற்கு ஒசேத்தியா 1991 தென் ஒசேத்தியா 1991ம் ஆண்டு சுதந்திரப்பிரகடனம் செய்தது. தற்போது இது 5 ஐ.நா. அங்கத்துவ நாடுகளாலும் (உருசியா, நிக்கராகுவா, வெனிசுவேலா,துவாலு, நௌரு) மூன்று ஐ.நா. அங்கத்துவமில்லாத நாடுகளாலும் (நகோர்னோ கரபாக்,டிரான்சுனிசுட்ரியா, அப்காசியா)அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[5][20] [7][8][21]

ஐ.நா அங்கத்தினர், ஆனால் ஏதாவது ஒரு நாடாவது ஏற்காமை

பெயர் எப்போதிருந்து சர்ச்சை ஏற்பு மேற்கோள்கள்
 ஆர்மீனியா 1991 ஆர்மேனியா 1991 ஆண்டிலிருந்து ஒரு சுதந்திர நாடாகும். தற்போது இது ஐ.நா. அங்கத்துவ நாடான பாக்கிஸ்தானினால் மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை. [22][23]
 சீனா 1949 1949ம் ஆண்டு சுதந்திர பிரகடனம் செய்த சீன மக்கள் குடியரசினை (சீ.ம.கு) ஐ.நா. அங்கத்தவர் அல்லாத நாடான சீனக் குடியரசு (சீ.கு;தாய்வான்) அங்கீகரிக்கவில்லை. சீ.கு. ஐ அங்கீகரித்த 22 ஐ.நா. அங்கத்துவ நாடுகளுடனும் புனித தவிசுடனும் சீ.ம.கு இராஜதந்திர உறவைப் பேணுவதில்லை. சில நாடுகள் சீ.ம.கு. ஐ ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளாததோடு அதன் கட்டுப்பாடிலுள்ள பகுதிகளை சீ.கு.யின் அங்கமாக கருதுகின்றன. மற்றும் சில நாடுகள் இரண்டு நாடுகளையும் ஏற்றுக்கொள்கின்றன.[24][25][26][27][28]ஐ.நா. பாதுகாப்பு சபையின் 2758ம் இலக்க தீர்மானத்தின்படி சீன மக்கள் குடியரசே சீனாவின் ஐ.நா.விற்கான சட்டபூர்வமான பிரதிநிதி. [29]
 சைப்பிரசு 1974 சைப்ரசு 1960ம் ஆண்டு முதல் ஒரு சுதந்திர நாடாகும். எனினும் ஒரு தீவின் உரிமை சம்பந்தமான பிரச்சினையினால் இது ஐ.நா. உறுப்பு நாடான துருக்கியினாலும் ஐ.நா. அங்கத்தவரில்லாத வடக்கு சைப்ரசினாலும் அங்கீகரிக்கப்படவில்லை. இவ்விரண்டு நாடுகளும் சைப்ரசினை "தென் சைப்ரசின் கிரேக்க பகுதி"என்று அழைக்கின்றன. [30][31][32]
 இசுரேல் 1948 அரபு-இசுரேல் முரண்பாட்டின் எதிரொலியாக இஸ்ரேல் 33 ஐ.நா. அங்கத்துவ நாடுகளாலும் சாராவி அரபு சனநாயகக் குடியரசாலும் அங்கீகரிக்கப்படவில்லை [33]. எனினும் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பினால் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [34][35]
 வட கொரியா 1948 1948ம் ஆண்டு முதல் சுதந்திர நாடாக விளங்கும் வட கொரியா (கொரிய சனநாயக மக்கள் குடியரசு) ஐ.நா. அங்கத்துவ நாடுகளான யப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படவில்லை. [36].
 தென் கொரியா 1948 1948ம் ஆண்டு முதல் சுதந்திர நாடாக விளங்கும் தென் கொரியாவை (கொரிய குடியரசு) ஐ.நா. அங்கத்துவ நாடான வட கொரியா அங்கீகரிக்கவில்லை. [37][38]

மேற்கோள்கள்

  1. Non-member State
  2. BBC Country Profiles: Regions and territories: Nagorno-Karabakh, accessed 14 September 2009
  3. BBC Country Profiles: Regions and territories: Somaliland, accessed 14 September 2009
  4. "Abkhazia: Ten Years On". BBC 2 (2001). பார்த்த நாள் 2008-06-16.
  5. South Ossetia opens embassy in Abkhazia The Tiraspol Times
  6. Clogg, Rachel (2001). "Abkhazia: Ten Years On". Conciliation Resources. பார்த்த நாள் 2008-02-26.
  7. Russia recognises Georgian rebels - BBC, 2008-08-26
  8. "Venezuela's Chavez draws closer to Moscow". Reuters. 2009-09-10. http://www.reuters.com/article/worldNews/idUSTRE5895PF20090910. பார்த்த நாள்: 2009-10-20.
  9. Lewis, Joe (2002-08-04). "Taiwan Independence". Digital Freedom Network. பார்த்த நாள் 2008-02-28.
  10. http://www.unmikonline.org/press/reports/N9917289.pdf
  11. "Kosovo MPs proclaim independence". BBC News (2008-02-17). பார்த்த நாள் 2008-02-28.
  12. http://www.un.int/cyprus/scr541.htm
  13. Hadar, Leon (2005-11-16). "In Praise of 'Virtual States'". AntiWar. பார்த்த நாள் 2008-02-28.
  14. Staff writers (20 February 2008). "Palestinians 'may declare state'". BBC News (British Broadcasting Corporation). http://news.bbc.co.uk/2/hi/7254434.stm. பார்த்த நாள்: 2011-01-22.:"Saeb Erekat, disagreed arguing that the Palestine Liberation Organisation had already declared independence in 1988. "Now we need real independence, not a declaration. We need real independence by ending the occupation. We are not Kosovo. We are under Israeli occupation and for independence we need to acquire independence"
  15. http://web.archive.org/web/20060404211437/http://www.pna.gov.ps/Government/gov/recognition_of_the_State_of_Palestine.asp
  16. "3.10 - How many countries recognize Palestine as a state?". Institute for Middle East Understanding (2007). பார்த்த நாள் 2008-02-28.
  17. "Here the states which recognize the SADR. It is a non official list, with dates of recognition and cancelation:". ARSO. பார்த்த நாள் 2011-02-07.
  18. "About Western Sahara". Australia Western Sahara Association (November 2006). பார்த்த நாள் 2010-01-04.
  19. Sahrawi Arab Democratic Republic (1976-02-27). "Sahrawi Arab Democratic Republic". Western Sahara Online. பார்த்த நாள் 2008-02-28.
  20. (உருசிய மொழியில்) "Республика Науру признала независимость Южной Осетии" 16 December 2009 Retrieved 2011-02-03 "Republic of Nauru recognizes the independence of South Ossetia" English language translation from Microsoft Translator
  21. Stojanovic, Srdjan (2003-09-23). "OCHA Situation Report". Center for International Disaster Information. பார்த்த நாள் 2008-02-28.
  22. Pakistan Worldview - Report 21 - Visit to Azerbaijan Senate of Pakistan — Senate foreign relations committee, 2008
  23. Nilufer Bakhtiyar: "For Azerbaijan Pakistan does not recognise Armenia as a country" 13 September 2006 [14:03] - Today.Az
  24. Lee, Meifang "Minister announces resumption of diplomatic ties with Nauru" Taiwan Today 2005-05-20 Retrieved 2011-04-29
  25. "Kiribati president upbeat on conference, Taiwan" Radio Australia 21 June 2010 Retrieved 2011-04-29
  26. Crocombe, Ron Asia in the Pacific Islands: Replacing the West University of the South Pacific. Institute of Pacific Studies 2007 p. 258 Online version available at Google Books
  27. "Looking East: China-Africa Engagements Liberia Case Study" African Center for Economic Transformation, Monrovia December 2009
  28. Chiu, Hungdah "The International Legal Status of the Republic of China (Revised Version)" Occasional Papers/Reprints Series in Contemporary Asian Studies Number 5 - 1992 (112), School of Law, University of Maryland ISBN 0-925153-23-0
  29. "Constitution of the People's Republic of China". International Human Rights Treaties and Documents Database. பார்த்த நாள் 2008-02-28.
  30. CIA World Factbook (2008-02-28). "Cyprus". Central Intelligence Agency. பார்த்த நாள் 2008-02-28.
  31. "Cyprus exists without Turkey's recognition: president". XINHUA (2005-10-01). பார்த்த நாள் 2008-03-07.
  32. http://www.europarl.europa.eu/activities/committees/studies/download.do?file=20800#search=%20Turkey
  33. http://www.cfr.org/publication/14841/khartoum_resolution.html?breadcrumb=%2Fpublication%2Fpublication_list%3Ftype%3Dessential_document%26page%3D69
  34. Government of Israel (1948-05-14). "Declaration of Israel's Independence 1948". Yale University. பார்த்த நாள் 2008-02-28.
  35. http://www.mythsandfacts.org/ReplyOnlineEdition/chapter-1.html
  36. "Treaty on Basic Relations between Japan and the Republic of Korea". பார்த்த நாள் 2008-10-27.
  37. US Library of Congress (2000-10-07). "World War II and Korea". Country Studies. பார்த்த நாள் 2008-02-28.
  38. Sterngold, James (1994-09-03). "China, Backing North Korea, Quits Armistice Commission". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9F01EFD71538F930A3575AC0A962958260. பார்த்த நாள்: 2008-02-29.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.