சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு

சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic, SADR) (அரபு மொழி: الجمهورية العربية الصحراوية الديمقراطية, எசுப்பானியம்: República Árabe Saharaui Democrática) மேற்கு சகாரா முழுமைக்கும் இறையாண்மை கோருகின்ற பகுதியும் அங்கீகரிக்கப்பட்ட அரசாகும். இந்த அரசை பெப்ரவரி 27, 1976இல் போலிசரியோ முன்னணி பிர் லெலூவில் நிறுவியது. தற்போது தான் கோரும் நிலப்பகுதியில் 20% முதல் 25% வரை கட்டுப்படுத்துகின்றது. இதன் தலைநகரம் தீபாரீத்தீ ஆகும். இந்த அரசின் கீழுள்ள ஆட்புலத்தை விடுவிக்கப்பட்ட பகுதிகள் அல்லது கட்டற்ற ஆள்புலம் என அழைக்கின்றது. ஏனைய பகுதிகளை மொரோக்கோ கட்டுப்படுத்துவதுடன் அரசாண்டு வருகின்றது. இப்பகுதிகளை மொரோக்கோ தென் மாநிலங்கள் என அழைக்கின்றது. சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு மொரோக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எனவும் மொரோக்கோ சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் கீழுள்ள பகுதிகளை இடைநிலை வலயம் என்றும் குறிப்பிடுகின்றன. ஐக்கிய நாடுகள் அவை, மேற்கு சகாரா முழுமையையும் எசுப்பானியாவின் சார்பு பகுதியாக கருதுகின்றது.[1]

கரைச்சுவரைக் காட்டும் படிமம். இச்சுவர் மேற்கு சகாராவில் போலிசரியோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் மொரோக்கோவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளையும் பிரிக்கின்றது. பெரிய மஞ்சள் பகுதி சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு

மேற்கோள்கள்

  1. UN General Assembly Resolution 34/37 and UN General Assembly Resolution 35/19
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.