தீபாரீத்தீ

தீபாரீத்தீ (Tifariti, எழுத்துப்பெயர்ப்பு "தீபாரீத்தீ"; அரபு மொழி: تيفاريتي) மேற்கு சகாராவின் வடகிழக்கில் உள்ள பாலைவனச்சோலை நகரமாகும். இது மோரோக்கோவின் சுற்றின் கிழக்கே இசுமராவிரிருந்து 138 கிமீ தொலைவிலும் மூரித்தானியாவின் எல்லையிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பொலிசரியோவினால் விடுவிக்கப்பட்ட ஆள்புலம் என்றும் மொரோக்கோவால் இடைநிலை வலயம் என்றும் அறியப்படும் பகுதியில் உள்ளது. பீர் லெலூவிலிருந்து 2011இல் இடம் பெயர்ந்த சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் நடைமுறைப்படி தற்காலிக தலைநகரமாக உள்ளது. இது சகாராவிய குடியரசின் இரண்டாவது இராணுவப் பகுதியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.

தீபாரீத்தீ
تيفاريتي
தீபாரீத்தா
நகராட்சி
தீபாரீத்தீ, 2005
ஆட்புலம்மேற்கு சகாரா
உரிமை கோரல் மொரோக்கோ,
 சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
கட்டுப்பாட்டில் சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
அரசு
  வகைநகராட்சி[1]
  மேயர்மொகமது சலேம் தயா[2]
ஏற்றம்490
மக்கள்தொகை (2010)
  மொத்தம்3


2010 இல் தீபாரீத்தீயின் மக்கள்தொகை ஏறத்தாழ 3,000ஆக இருந்தது.[3]

தீபாரீத்தீயிலிருந்து 177 கி.மீ தொலைவிலுள்ள இசுமரா ஓர் புனிதத்தலமாகும்; இதனை மா எல் ஐனின் நிறுவினார்.[4] 320 கிமீ தொலைவிலுள்ள அல்சீரிய நகரமான டின்டூஃபில் சகாராவிய அகதிகள் முகாங்கள் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களுக்கும் இடையே டிபாரிட்டி அமைந்துள்ளது.

தீபாரீத்தீயிலுள்ள அரசுப் பகுதியில் சாகாராவிய குடியரசின் நாடாளுமன்றம், மருத்துவமனை, பள்ளிக்கூடம், பள்ளிவாசல் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளன.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.