மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்

மலேசிய மாநிலங்களை நெகிரி (மலாய்: Negeri) என்றும், கூட்டரசு நிலப்பகுதிகளை (மலாய்: Wilayah Persekutuan) என்றும் அழைக்கிறார்கள்.


மலேசியா


மலேசியாவில் பதின்மூன்று மாநிலங்கள், மூன்று கூட்டரசு நிலப்பகுதிகள் உள்ளன. இவற்றுள் தீபகற்ப மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரு கூட்டரசு நிலப்பகுதிகளும் உள்ளன. இவை மேற்கு மலேசியா மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

போர்னியோ தீவில் இருக்கும் சரவாக், சபா மாநிலங்கள், லாபுவான் கூட்டரசு நிலப்பகுதியை, கிழக்கு மலேசியா என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகளை நடுவண் அரசும், மாநில அரசும் பகிந்து கொள்கின்றன. கூட்டரசு நிலப்பகுதிகளை நடுவண் அரசு நேரடியாக நிர்வாகம் செய்கிறது.[1][2]

மலேசியாவின் 13 மாநிலங்கள் வரலாற்று மலாய்ப் பேரரசுகளைச் சார்ந்தவையாகும். இவற்றுள் 9 மாநிலங்கள், மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய ஆளுநர் எனும் சுல்தான் முதன்மைத் தலைவராக இருக்கிறார். நிர்வாகத் தலைவராக முதலமைச்சர் எனும் மந்திரி பெசார் இருக்கிறார்.

ஆளுகை

மலேசியாவின் அனைத்து 13 மாநிலங்களும் வரலாற்று மலாய்ப் பேரரசுகளைச் சார்ந்தவையாகும். இவற்றுள் 9 மாநிலங்கள், மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய ஆளுநர் எனும் சுல்தான் முதன்மைத் தலைவராக இருக்கிறார். நிர்வாகத் தலைவராக முதலமைச்சர் எனும் மந்திரி பெசார் (மலாய்: Menteri Besar) இருக்கிறார்.

ஜொகூர், கெடா, கிளாந்தான், பகாங், பேராக், சிலாங்கூர், திரங்கானு ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்பவர்களைச் சுல்தான்கள் என்று அழைக்கிறார்கள். தேர்வு மூலம் தெரிவு செய்யப்படும் நெகிரி செம்பிலான் ஆளுநர் யாம் துவான் பெசார் (மலாய்: Yamtuan Besar) என்று அழைக்கப்படுகிறார். பெர்லிஸ் ஆளுநர் ராஜா என்று அழைக்கப்படுகிறார்.

மாட்சிமை தங்கிய பேரரசர்

நடுவண் அரசின் மன்னரை மாட்சிமை தங்கிய பேரரசர் (மலாய்: Yang di-Pertuan Agong) அல்லது யாங் டி பெர்துவான் அகோங் என்று அழைக்கப்படுகிறார். தமிழில் மாமன்னர் என்று அழைக்க வேண்டும். மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள சுல்தான்கள், ராஜா அல்லது யாம் துவான் பெசார்களில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாமன்னராகத் தேர்வு செய்யப்படுகிறார்.[3] கெலந்தானின் ஐந்தாம் முகம்மது 13 டிசெம்பர் 2017 மலெசியவின் 15-வது மாமன்ராக அரியனை ஏரினார்.

தீபகற்ப மலேசியாவில் இருக்கும் பினாங்கு, மலாக்கா மாநிலங்களும், கிழக்கு மலேசியாவில் இருக்கும் சபா, சரவாக் மாநிலங்களும், பிரித்தானியர்களின் தனிப்பட்ட காலனிகளாக இருந்தவை. ஆகவே, அவற்றின் ஆட்சி செய்யும் தலைவரை கவர்னர் (மலாய்: Yang di-Pertua Negeri) என்று அழைக்கிறார்கள். அந்த மாநிலங்களின் முதலமைச்சர் கெத்துவா மந்திரி (மலாய்: Ketua Menteri) என்று அழைக்கப்படுகிறார்.


மாநிலக் கொடி மாநிலம் தலைநகரம் மக்கள் தொகை 2010[4] பரப்பளவு சதுர கி.மீ.[5] மக்கள் தொகை அடர்த்தி[5] வாகன அட்டை முன்எழுத்து தொலைபேசி எண்கள் முன்குறியீடு மாநிலப் பெயர் சுருக்கம் ஐ.எஸ்.ஓ.
ISO 3166-2
எப்.ஐ.பி.எஸ்.
FIPS 10-4
கோலாலம்பூர் நடுவண் கூட்டரசு கோலாலம்பூர் 1,627,172 243 6696 W / V 03 KUL MY-14
லாபுவான் நடுவண் கூட்டரசு விக்டோரியா லாபுவான் 85,272 91 937 L 087 LBN MY-15 MY15
புத்ராஜெயா நடுவண் கூட்டரசு புத்ராஜெயா 67,964 49 1387 Putrajaya / F 03 PJY MY-16
ஜொகூர் ஜொகூர் பாரு 3,233,434 19,210 168 J 07, 06 (மூவார் & தங்காக்) JHR MY-01 MY01
கடாரம் அலோர் ஸ்டார் 1,890,098 9,500 199 K 04 KDH MY-02 MY02
கிளாந்தான் கோத்தா பாரு 1,459,994 15,099 97 D 09 KTN MY-03 MY03
மலாக்கா மலாக்கா 788,706 1,664 474 M 06 MLK MY-04 MY04
நெகிரி செம்பிலான் சிரம்பான் 997,071 6,686 149 N 06 NSN MY-05 MY05
பகாங் குவாந்தான் 1,443,365 36,137 40 C 09, 03 (கெந்திங் மலை), 05 (கேமரன் மலை) PHG MY-06 MY06
பேராக் ஈப்போ 2,258,428 21,035 107 A 05 PRK MY-08 MY07
பெர்லிஸ் கங்கார் 227,025 821 277 R 04 PLS MY-09 MY08
பினாங்கு ஜோர்ஜ் டவுன் 1,520,143 1,048 1451 P 04 PNG MY-07 MY09
சபா கோத்தா கினபாலு 3,120,040 73,631 42 S 087-089 SBH MY-12 MY16
சரவாக் கூச்சிங் 2,420,009 124,450 19 Q 081-086 SRW MY-13 MY11
சிலாங்கூர் ஷா ஆலாம் 5,411,324 8,104 668 B 03 SGR MY-10 MY12
திரங்கானு கோலா திரங்கானு 1,015,776 13,035 78 T 09 TRG MY-11 MY13


வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Federal Territories and State Governments.
  2. Wu, Min Aun & Hickling, R. H. (2003). Hickling's Malaysian Public Law, pp. 6465. Petaling Jaya: Pearson Malaysia. ISBN 983-74-2518-0.
  3. British settlements and crown colonies of Penang and Malacca (both peninsular) and Sabah and Sarawak.
  4. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 2013-03-21.
  5. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 2013-03-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.