லபுவான்

லபுவான் (Labuan, /ləˈbən/ (ஜாவி: لابوان), அதிகாரபூர்வமாக லபுவான் கூட்டாட்சிப் பகுதி (Federal Territory of Labuan) என்பது மலேசியாவின் ஒரு கூட்டாட்சி மண்டலம் ஆகும். இது கிழக்கு மலேசியாவில் சபா மாநிலத்தில் அமைந்துள்ள லபுவான் தீவையும் ஆறு சிறிய தீவுகளையும் கொண்டது. இதன் தலைநகரம் விக்டோரியா ஆகும். 1990 முதல் விக்டோரியா நகரம் பன்னாட்டு நிதி மற்றும் வணிக சேவைகளை வழங்கும் கடல் வணிக மையமாகவும், ஆழ்கடல் எண்ணெய் மற்றும் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளுக்கான மையமாகவும் அறியப்படுகிறது. அத்துடன் சுற்றுலா மையமாகவும் விளங்குகின்றது. லபுவான் என்ற பெயர் மலாய் மொழியில் துறைமுகத்தைக் குறிக்கும் "லபுகான்" என்னும் சொல்லில் இருந்து பிறந்தது.[5]

லபுவான்
Labuan
கூட்டாட்சிப் பகுதி
லபுவான் கூட்டாட்சிப் பகுதி
Federal Territory of Labuan
Wilayah Persekutuan Labuan
ولايه ڤرسكوتوان لابوان
纳闽联邦直辖区
விக்டோரியா நகரில் அமைந்துள்ள லபுவான் பொருளாதாரப் பூங்கா

கொடி

சின்னம்
குறிக்கோளுரை: Maju dan Sejahtera
(வளர்ந்த மற்றும் வளமான)

      லபுவான்       மலேசியாவில்
ஆள்கூறுகள்: 5°19′13.16″N 115°12′40.42″E
நாடு மலேசியா
தலைநகர்விக்டோரியா[1]
அரசு
  நிருவாகம்லபுவான் கூட்டமைப்பு
பரப்பளவு[2][3]
  மொத்தம்92
மக்கள்தொகை (2019)[4]
  மொத்தம்99
  அடர்த்தி1
நேர வலயம்மநே (ஒசநே+8)
  கோடை (பசேநே)இல்லை (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு087
வாகனப் பதிவுL
SL
இணையதளம்pl.gov.my

வரலாறு

புருணையில் 1846 டிசம்பர் 18 இல் லபுவான் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது
சப்பானிய கடற்படை லபுவானில் 1942 சனவரி 14 இல் தரையிறங்கியது
புருணை சுல்தானகம் 15-ம் நூற்றாண்டு–1846[6][7]

ஐக்கிய இராச்சியம் 1846–1848[6][8]
லபுவான் அரச குடியேற்றம் 1848–1941[6]
  பிரித்தானிய வடக்கு போர்னியோ 1890–1904
  ஐக்கிய இராச்சியம் 1904–1906
  நீரிணைக் குடியேற்றங்கள் 1907–1941[9]
சப்பானிய இராச்சியம் 1942–1945
பிரித்தானிய வடக்கு போர்னியோ குடியேற்றம் 1946–1963[9]

 மலேசியா 1963–இன்று[10]

15-ஆம் நூற்றாண்டு முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு லபுவான் உட்பட போர்னியோவின் வடக்கு, மேற்குக் கரைகள் புருணை சுல்தானகத்தின் பகுதிகளாக இருந்தன.[6][7] 18-ஆம் நூற்றாண்டில், லபுவான் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1846 டிசம்பர் 18 இல் ஜேம்சு புரூக் புருணை சுல்தான் ஒமார் அலி சபியுதீனுடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி, இத்தீவை பிரித்தானியாவுக்காக வாங்கினார்.[6][8] பிரித்தானியக் கடற்படை அதிகாரி ரொட்னி மண்டி என்பவர் புருணை சென்று இம்முடிவுகளை மேற்பார்வை செய்தார். 1846 டிசம்பர் 24 அன்று இத்தீவு பிரித்தானிய அரச குடியேற்ற நாடானது.[11] கடற்கொள்ளையர்களுக்கு எதிரான போரில் பிரித்தானியா செய்த உதவிகளுக்காக இத்தீவு பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு சில ஆதாரங்கள், அரச கடற்படையினால் புருணை சுல்தான் பயமுறுத்தப்பட்டதாகவும் , அதற்கு அடிபணிந்தே இத்தீவை பிரித்தானியாவுக்கு வழங்க சுல்தான் இணங்கினார் எனவும் கூறுகின்றன.[8][12][13]

இரண்டாம் உலகப் போரின் போது, லபுவான் 1942 சனவரி 3 முதல் சூன் 1945 வரை சப்பானின் பிடியில் இருந்தது. சப்பானியக் கடற்படை வடக்கு போர்னியோ முழுவதையும் கைப்பற்றியிருந்தது.[14] இத்தீவு சப்பானியப் படைகளுக்கு நிருவாக மையமாக சேவையாற்றியது.[15] சப்பானிய அரசு இத்தீவுக்கு "மைடா தீவு" எனப் பெயரிட்டிருந்தது. வடக்கு போர்னியோவில் வானூர்தி விபத்தில் கொல்லப்பட்ட சப்பானிய இராணுவத் தளபதி மைடா-0சீமாவின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.[6][15] கூட்டுப்படையினரின் தாக்குதல் இப்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கிய வேளையில், சப்பான் இங்கு பெரும் கடற்படைத்தளம் ஒன்றை நிறுவியது.[11]

புவியியல்

லபுவான் தீவின் வரைபடம்

லபுவானின் முக்கிய தீவான லபுவான் தீவின் பரப்பளவு 91.64 சதுரகிமீ ஆகும். இதனை விட ஆறு சிறிய தீவுகள் உள்ளன. இத்தீவுகள் போர்னியோவில் இருந்து 8 கிமீ தூரத்தில் மலேசிய மாநிலமான சபாவின் அருகேயும், புரூணைக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. லபுவான் தீவு பெரும்பாலும் தட்டையானதாகும். இதன் உயரமான இடம் புக்கித் கூபொங் கடல் மட்டத்தில் இருந்து 148 கீ உயரம் ஆகும். 70% இற்கும் அதிகமான பகுதிகள் மரங்களால் மூடப்பட்டுள்ளது. முக்கிய நகரமான விக்டோரியா புரூணைக் குடாவை நோக்கி அமைந்துள்ளது.

தீவுகள்

  • லபுவான் தீவு
  • டாத் தீவு
  • பப்பான் தீவு
  • புருங் தீவு
  • குரமான் தீவு
  • பெரும் ரசுக்கான் தீவு
  • சிறிய ரசுக்கான் தீவு

மக்கள் பரம்பல்

மக்கள் தொகையும் சமயமும்

லபுவானில் சமயம் – 2010 கணக்கெடுப்பு[16]
சமயம் வீதம்
இசுலாம்
 
76.0%
கிறித்தவம்
 
12.4%
பௌத்தம்
 
9.0%
அறியப்படாதவை
 
2.0%
இந்து சமயம்
 
0.4%
வேறு சமயங்கள்
 
0.1%
சமயமின்மை
 
0.1%

2010 கணக்கெடுப்பின் படி, லபுவானின் மக்கள்தொகை 86,908 ஆகும்.[17] 2015 இல், மக்கள்தொகை 96,800 ஆக இருந்தது.[18]

2010 கனக்கெடுப்பின்படி, 76.0% முஸ்லிம்கள், 12.4% கிறித்தவர்கள், 9.0% பௌத்தர்கள், 0.4% இந்துக்கள், 2.1% ஏனைய மதத்தினர் ஆவர்.

லபுவான் இனங்கள் (2010)[17]
இனக்குழுக்கள் இனம் மொத்தம்
பூமிபுத்திரா புரூணை மலாய், கெடயான் 30,001
கடசான்-துசுன் 7,380
பஜாவு 6,300
முருத் 701
லுன் பவாங்/லுந்தாயா, ஏனைய பூமிபுத்திரர்
(பெரும்பாலும் சரவாக்கின் தயாக்குகள்)
18,212
பூமிபுத்திரர் அல்லாதோர் மலேசிய சீனர் 10,014
மலேசிய இந்தியர் 641
ஏனையோர் 1,515
குடியுரிமை அற்றோர் 12,144
மொத்தம் 86,908

அரசு

லபுவான் மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். இத்தீவுகள் நடுவண் அரசினால் கூட்டாட்சிப் பகுதிகளின் அமைச்சினால் நிருவகிக்கப்படுகின்றன. லபுவான் கூட்டமைப்பு இத்தீவின் உள்ளூராட்சி அரசாகும். இதன் தலைவர் தீவின் அபிவிருத்தி மற்றும் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருப்பார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை, மற்றும் கீழவைக்கு லபுவானின் பிரதிநிதிகள் ஒவ்வொருவர் உள்ளனர்.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், லபுவான் (லபுவான் வானூர்தி நிலையம்) 1961–1990
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.0
(93.2)
35.3
(95.5)
36.4
(97.5)
36.6
(97.9)
35.7
(96.3)
34.9
(94.8)
34.4
(93.9)
35.0
(95)
34.2
(93.6)
34.3
(93.7)
34.7
(94.5)
34.4
(93.9)
36.6
(97.9)
உயர் சராசரி °C (°F) 29.7
(85.5)
30.2
(86.4)
31.5
(88.7)
32.2
(90)
31.7
(89.1)
31.5
(88.7)
31.0
(87.8)
31.3
(88.3)
31.0
(87.8)
30.8
(87.4)
30.7
(87.3)
30.4
(86.7)
31.0
(87.8)
தினசரி சராசரி °C (°F) 26.8
(80.2)
26.9
(80.4)
27.5
(81.5)
28.2
(82.8)
28.0
(82.4)
27.8
(82)
27.4
(81.3)
27.6
(81.7)
27.4
(81.3)
27.3
(81.1)
27.2
(81)
27.2
(81)
27.4
(81.3)
தாழ் சராசரி °C (°F) 24.5
(76.1)
24.3
(75.7)
24.8
(76.6)
25.2
(77.4)
25.0
(77)
24.9
(76.8)
24.4
(75.9)
24.7
(76.5)
24.5
(76.1)
24.4
(75.9)
24.4
(75.9)
24.6
(76.3)
24.6
(76.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) 21.3
(70.3)
21.1
(70)
20.8
(69.4)
21.7
(71.1)
20.4
(68.7)
20.0
(68)
19.3
(66.7)
21.2
(70.2)
21.0
(69.8)
21.5
(70.7)
21.9
(71.4)
21.8
(71.2)
19.3
(66.7)
பொழிவு mm (inches) 233.1
(9.177)
122.9
(4.839)
109.9
(4.327)
195.7
(7.705)
297.8
(11.724)
287.6
(11.323)
284.8
(11.213)
283.5
(11.161)
351.3
(13.831)
390.8
(15.386)
377.9
(14.878)
309.5
(12.185)
3,264.8
(128.535)
% ஈரப்பதம் 73 74 71 70 71 69 69 70 70 72 73 73 71
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 14 10 10 14 17 16 16 16 18 20 20 17 188
சூரியஒளி நேரம் 202.6 199.8 248.2 250.3 243.1 214.9 220.5 222.3 195.6 206.0 209.7 214.4 2,627.4
Source #1: NOAA,[19] Deutscher Wetterdienst (humidity, 1939–1966)[20]
Source #2: Meteo Climat (record highs and lows)[21]

குறிப்பிடத்தக்க ஆளுமைகள்

மேற்கோள்கள்

  1. Geographical Dictionary of the World. Concept Publishing Company. பக். 1926–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7268-012-1. https://books.google.com/books?id=cVQDZFM1T2IC&pg=PA1926.
  2. "Preliminary Count Report 2010". Department of Statistics, Malaysia. மூல முகவரியிலிருந்து 8 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 January 2011.
  3. https://www.dosm.gov.my/v1/index.php?r=column/cone&menu_id=NmZ4RUtKY3ZPblVWZ0VqeXk5SEg1dz09
  4. "Demographic Statistics Second Quarter 2019 Malaysia". Department of Statistics, Malaysia. பார்த்த நாள் 16 August 2019.
  5. Bradbury & Evans (1856). "Crawfurd, John, A descriptive dictionary of the Indian islands & adjacent countries" 203. London: Columbia University Libraries. பார்த்த நாள் 29 April 2014.
  6. Stephen R. Evans; Abdul Rahman Zainal; Rod Wong Khet Ngee (1996). The History of Labuan Island (Victoria Island). Calendar Print Pte Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981-00-7764-5. Archived from the original on 1 July 2013. https://web.archive.org/web/20130701160652/http://library.perdana.org.my/Digital_Content/NLM/Batch3/B03_PDF_DVD001/15%20sep/M959.521EVAHistoryOfLabuanVictoriaIsland.pdf.
  7. R. W. McColl (1 January 2005). Encyclopedia of World Geography. Infobase Publishing. பக். 123–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-7229-3. https://books.google.com/books?id=DJgnebGbAB8C&pg=PA123.
  8. Rozan Yunos (7 September 2008). "Loss of Labuan, a former Brunei island". The Brunei Times. மூல முகவரியிலிருந்து 28 April 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 April 2014.
  9. United States. Hydrographic Office (1917). Asiatic Pilot: The coasts of Sumatra and the adjacent straits and islands. Hydrographic office under the authority of the secretary of the navy. https://books.google.com/books?id=VNQNAQAAMAAJ.
  10. "Laws of Malaysia A585 Constitution (Amendment) (No.2) Act 1984". Government of Malaysia. Department of Veterinary Services. மூல முகவரியிலிருந்து 29 April 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 April 2014.
  11. Graham Saunders (5 November 2013). A History of Brunei. Routledge. பக். 78 & 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-87394-2. https://books.google.com/books?id=DUv8AQAAQBAJ&pg=PA78.
  12. B.A. Hussainmiya (2006). Brunei Revival of 1906 (A Popular History) – The Surrender of Labuan and The First Brunei-British Treaty. பண்டர் செரி பெகாவான்: Universiti Brunei Darussalam. பக். 12/34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99917-32-15-2. Archived from the original on 12 September 2014. https://web.archive.org/web/20140912112209/http://www.ubd.edu.bn/academic/faculty/FASS/staff/docs/BAH/revival.pdf. பார்த்த நாள்: 29 April 2014.
  13. W. H. Treacher, C.M.G. M.A. Oxon (1891). "British Borneo: Sketches of Brunai, Sarawak, Labuan and North Borneo". University of California Libraries 12 / Chapter VI. Pages 84–92. Trinity Theological College. மூல முகவரியிலிருந்து 11 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 April 2014.
  14. T. A. Edwin Gibson; G. Kingsley Ward (1989). Courage remembered: the story behind the construction and maintenance of the Commonwealth's military cemeteries and memorials of the wars of 1914–1918 and 1939–1945. McClelland & Stewart. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7710-8786-8. https://books.google.com/books?id=dm7xAAAAMAAJ.
  15. Keat Gin Ooi (October 2004). Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-770-2. https://books.google.com/books?id=smKyAAAAIAAJ.
  16. "2010 Population and Housing Census of Malaysia (Labuan)" (Malay, English). Department of Statistics, Malaysia. மூல முகவரியிலிருந்து 11 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 June 2012.
  17. "Demographic Indicator Malaysia 2013" (Malay, English). Department of Statistics, Malaysia. மூல முகவரியிலிருந்து 2 February 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 January 2014.
  18. "Population by States and Ethnic Group". Department of Information, Ministry of Communications and Multimedia, Malaysia (2015). மூல முகவரியிலிருந்து 12 February 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 February 2015.
  19. "Labuan Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்த்த நாள் 24 March 2015.
  20. "Klimatafel von Labuan / Insel Borneo (Kalimantan) / Malaysia" (German). Baseline climate means (1961–1990) from stations all over the world. Deutscher Wetterdienst. பார்த்த நாள் 17 October 2016.
  21. "Station Labuan" (French). Meteo Climat. பார்த்த நாள் 14 October 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.