போர்னியோ
போர்னியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவான இது உலகின் மூன்றாவது பெரிய தீவாக அறியப் படுகிறது.
![]() Topography of Borneo | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 1°00′N 114°00′E |
தீவுக்கூட்டம் | Greater Sunda Islands |
உயர்ந்த புள்ளி | கினபாலு மலை |
நிர்வாகம் | |
புரூணை | |
மாவட்டங்கள் | பெலாயிட் புரூணை-முவாரா டெம்புரோங் டூடொங் |
இந்தோனேசியா | |
மாகாணங்கள் | மேற்கு கலிமந்தான் மத்திய கலிமந்தான் தெற்கு கலிமந்தான் கலிமந்தான் |
மலேசியா | |
மாநிலங்கள் | சபா சரவாக் |
மக்கள் | |
மக்கள்தொகை | 16 மில்லியன் (2000) |
இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்று அழைக்கப் படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்னியோ என்பது சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் கொண்ட மலேசியப் பகுதியாகும். அமேசான் காடுகளின் ஒரு பகுதிக்கு புவிக்கோளத்தின் நேர்எதிரே உள்ள போர்னியோக் காடுகள் உலகின் பழமையான மழைக்காடுகளுள் ஒன்றாகும்.
புவியியல்
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தென் சீனக் கடல் உள்ளது. வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலிபிஸ் கடல், மக்கசார் நீரிணை உள்ளன. தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை உள்ளன. போர்னியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட தீவு ஆகும்.
கினபாலு மலை என்பதே இத்தீவின் உயரமான மலை. உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1000 கி.மீ நீளமுள்ள கப்புவாசு ஆறு இத்தீவின் இந்தோனேசியப் பகுதியில் உள்ளது. இதுவே இத்தீவின் மிக நீளமான ஆறு. இத்தீவில் குறிப்பிட்டத்தக்க குகை அமைப்புகளும் உள்ளன. உலகின் நீளமான நிலத்தடி ஆறுகளுள் ஒன்று இங்குள்ளது. மான் குகை என்றறியப்படும் குகையில் 30 இலட்சம் வவ்வால்கள் இருப்பதாகவும் கரப்பான் பூச்சிக் குகை என்னும் குகையில் பல இலட்சக் கணக்கான கரப்பான் பூச்சிகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
