மூவார்

மூவார் (மலாய்: Muar, சீனம்: 麻坡), மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மூவார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் பண்டார் மகாராணி என்று அழைக்கப் படுகிறது. இது ஓர் அரச நகரமாகும். ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாநகரத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது.

மூவார்

கொடி
நாடு மலேசியா
மாநிலம்ஜொகூர்
நகராண்மைக் கழகம்1885
அரசு
  மாவட்ட தலைவர்
யாங் டி பெர்துவா
துவான் ஹாஜி ராம்லி பின் ஹாஜி ரஹ்மான் [1]
பரப்பளவு
  மொத்தம்[
ஏற்றம்36.88
மக்கள்தொகை (2010)
  மொத்தம்2,47,957
  அடர்த்தி180
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
தொலைபேசி எண்கள்06-95xxxxx - 06-98xxxxx
மலேசிய வாகனங்கள் பதிவு குறியீடுJxx
இணையதளம்www.mpmuar.gov.my
www.johordt.gov.my/pdmuar

ஜொகூர் மாநிலத்தில் வட மேற்கே அமைந்து இருக்கும் இந்த நகரத்தின் மாவட்டமும் மூவார் என்றே அழைக்கப் படுகிறது. முன்பு இந்த நகரம் தங்காக் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மூவார் என்பது தனி நகரமாகவும், ஒரு தனி மாவட்டமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.[2]

வரலாறு

மலேசிய நகரங்களில் மூவார் நகரம் மிகவும் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு பல வரலாற்று பதிவுகளும், தொல்பொருள் பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. மலாக்கா சுல்தானகம் தொடங்குவதற்கு முன்பாகவே மூவாரின் வரலாறு தொடங்கி விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1361-இல், மஜாபாகித் இந்துப் பேரரசின் ஒரு பகுதியாக மூவார் இருந்து உள்ளது.

மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேசுவரா. இவர் சுமத்திரா, துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டதும், மலாக்காவிற்குச் சென்ற போது, இந்த மூவார் பகுதியில் கோத்தா பூரோக் எனும் இடத்தில் சில காலம் தங்கி இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

1511-இல், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும், மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த முகமுட் ஷா, இந்த மூவாரில் தான் தஞ்சம் அடைந்தார். மூவாரில் இருந்தவாறு முகமுட் ஷா, போர்த்துகீசியர்களை எதிர்த்துப் போராடி வந்தார். [3]

மலாக்காவை ஆட்சி செய்த ஏழாவது அரசர், சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷாவின் (1477–1488) கல்லறையும் சேதம் அடைந்த நிலையில் இன்னும் மூவாரில் தான் இருக்கிறது. அந்தக் கல்லறையை போர்த்துகீசியர்கள் சிதைத்து விட்டனர். மலேசிய வரலாற்றுப் பதிவுகளில் மூவார் எனும் நகரம் பல இடங்களில் காணப்படுகிறது.

மூவார் போர்

மூவாரை போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்த போது, டச்சுக்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போர்த்தலேசா டி மூவார் எனும் கோட்டையை இங்கு கட்டினார்கள். இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பானியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இங்கு ஒரு பெரிய போர் நடந்தது. அதை மூவார் போர் என்று அழைக்கிறார்கள்.[4]

1942 ஜனவரி 14-இல் இருந்து 22 வரை, மூவாருக்கு அருகாமையில் இருந்த கெமிஞ்சே, மூவார் ஆறு, பக்கிரி மலை போன்ற இடங்களில் மூவார் போர் பலமான சண்டை நடைபெற்றது. மலாயா மீது ஜப்பானியர்கள் தொடுத்த தாக்குதல்களில் இதுவே ஆகக் கடைசியான போர். இந்தப் போரில், பிரித்தானியர்களுக்கு உதவியாக இருந்த 45-வது இந்தியக் காலாட்படை ஒட்டு மொத்தமாக அழிக்கப் பட்டது. [5][6]

புக்கிட் கெப்போங் சம்பவம்

மலாயா அவசரகாலத்தின் போது, மூவாருக்கு அருகாமையில் இருக்கும் புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தை மலாயா கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஆயுதபாணிகள் தாக்கினர். 1950 பிப்ரவரி 23-ஆம் தேதி நடந்த அந்தத் தாக்குதலில் 26 போலீஸ்காரர்களும், அவர்களின் குடும்பத்தாரும் உயிரிழந்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சி, முன்பு மலாயா தேசிய விடுதலை முன்னணி Malayan National Liberation Army (MNLA) என்று அழைக்கப்பட்டது.[7]

மூவார் மாவட்டம்

மூவார் மாவட்டத்தின் பரப்பளவு 2346.12 சதுர கிலோமீட்டர்கள். மூவார் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்து இருக்கிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 150 கி,மீ. தென் கிழக்கிலும், சிங்கப்பூரில் இருந்து 179 கி.மீ. வட மேற்கிலும், மலாக்கா நகரில் இருந்து 45 கி.மீ. தெற்கிலும் இருக்கிறது. மூவார் மாவட்டம், சிங்கப்பூரைப் போல இரண்டரை மடங்கு பெரிய நிலப்பகுதியைக் கொண்டது.

மூவார் மாவட்டம் முன்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மூவார் அல்லது பண்டார் மகாராணி என்பது ஒரு பிரிவு. லேடாங் எனும் தங்காக் என்பது மற்றொரு பிரிவு. தங்காக் ஒரு துணை மாவட்டமாக நிலை உயர்த்தப் பட்டதும், மூவார் ஒரு தனி நகராண்மைக் கழகமானது. இரண்டும் இப்போது தனித்தனியாகச் செயல் படுகின்றன.

மூவார் புறநகர்

மூவார் புறநகரில் உள்ள நகரங்களும் கிராமங்களும்:

  • பண்டார் மகாராணி
  • சுங்கை பாலாங்
  • ஸ்ரீ மெனாந்தி
  • பாரிட் ஜாவா
  • பாரிட் பாக்கார்
  • பாக்ரி
  • புக்கிட் நானிங் / ஆயர் ஈத்தாம்
  • சுங்கை தெராப்
  • ஜோராக் / பாகோ
  • லெங்கா
  • புக்கிட் கெப்போங்

லேடாங் புறநகர்

லேடாங் புறநகரில் உள்ள நகரங்களும் கிராமங்களும்:

  • கீசாங்
  • சுங்கை மத்தி
  • செரோம்
  • புக்கிட் காம்பிர்
  • கிரிசெக்
  • பஞ்சூர்
  • குண்டாங்
  • கம்போங் தெராத்தாய்
  • புக்கிட் செராம்பாங்

மூவார் நகரப்படத் தொகுப்பு

மேற்கோள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.