சொகூர்

ஜொகூர், மலேசியத் தீபகற்கத்தின் தெற்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். மலேசியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகக் கருதப் படுகின்றது. ஜொகூர் மாநிலத்தின் தலைநகரமாகவும் அரச நகரமாகவும் ஜொகூர் பாரு விளங்குகின்றது. ஜொகூர் பாருவின் பழைய பெயர் தஞ்சோங் புத்ரி. ஜொகூர் மாநில பழைய தலைநகரத்தின் பெயர் ஜொகூர் லாமா.

ஜொகூர்
மாநிலம்
ஜொகூர் டாருல் தாக்’சிம்
Johor Darul Ta'zim
جوهر دارالتّعظيم

கொடி
குறிக்கோளுரை: Kepada Allah Berserah
இறைவனிடம் அடைக்கலம் பெறுவோம்
பண்: Lagu Bangsa Johor

      Johor in       மலேசியா
ஜொகூர் சுல்தானகம்14ஆம் நூற்றாண்டு
பிரித்தானிய கட்டுப்பாடு1914
மலாயாவில் ஜப்பானியர் ஆதிக்கம்31 ஜனவரி 1942
மலாயா கூட்டமைப்பில் இணைதல்1948
மலாயா சுதந்திரம்31 ஆகஸ்டு 1957
மலேசியா16 செப்டம்பர் 1963
தலைநகரம்ஜொகூர் பாரு
அரச நகரம்பாசிர் பெலாங்கி
அரசு
  ஜொகூர் சுல்தான்மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில்
  மந்திரி பெசார்அப்துல் கனி ஒஸ்மான் பாரிசான் நேசனல்
பரப்பளவு[1]
  மொத்தம்19,210
மக்கள்தொகை (2010)[2]
  மொத்தம்33,48,283
  அடர்த்தி174
மனித வள வளர்ச்சிப் பட்டியல்
  HDI (2010)0.733 (high) (மலேசிய மாநிலங்கள்)
அஞ்சல் குறியீடுகள்80xxx லிருந்து 86xxx வரை
தொலைபேசி அழைப்பு முன் எண்07
06 (மூவார்/லேடாங்)
வாகனப் பதிவுவாகனங்கள் பதிவுப் பட்டை முன்குறி J
இணையதளம்http://www.johor.gov.my

ஜொகூர் மாநிலத்தின் வடக்கே பகாங் மாநிலம் உள்ளது. வட மேற்கே மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்கள் உள்ளன. தெற்கே சிங்கப்பூர் குடியரசு உள்ளது. ஜொகூர் மாநிலம் ‘கண்ணியத்தின் இருப்பிடம்’ (Darul Ta'zim) எனும் நன்மதிப்பு அடைமொழியுடன் அழைக்கப் படுகின்றது. ‘டாருல் தாக்’சிம் என்பது ஓர் அரபுச் சொல் ஆகும்.

சொல் பிறப்பியல்

சுல்தான் இஸ்காந்தர் குடிநுழைவு தலைமையகம்.
ஜொகூரில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நீர்க்குழாய்கள்.

ஜொகூர் எனும் சொல் ‘ஜவுஹர்’ எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. ஜவுஹர் என்றால் மதிப்புமிக்க இரத்தினக்கல் என்று பொருள்படும்.[3] ஒரு காலகட்டத்தில் இங்கு இரத்தினக் கற்கள் நிறைய கிடைத்தன. அதனால், அங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள் அந்த இடத்திற்கு ஜொகூர் என்று பெயர் வைத்தனர்.

அதற்கு முன்னர் மூவார் ஆற்றில் இருந்து சிங்கப்பூர் தீவு வரையிலான நிலப்பகுதியை 'உஜோங் தானா' என்று அழைத்தனர். உஜோங் தானா என்றால் நிலத்தின் முனை என்று பொருள். ஜொகூருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. ஆசிய கண்ட நிலப்பகுதியின் தெற்கே மிகத் தொலைவில் அமைந்த முனை ஜொகூரில் தான் உள்ளது.[4]

வரலாறு

அலாவுதீன் ரியாட் ஷா

16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் ஷா. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் முகமட் ஷா என்பவரின் புதல்வர் ஆவார்.

மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் ஷா அங்கிருந்து ஜொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் ஜொகூர் சுல்தானகமும் ஒன்றாகும். பேராக் சுல்தானகம் மற்றொரு வாரிசு அரசாகும்.

முஷபர் ஷா

பேராக் சுல்தானகத்தைச் சுல்தான் முகமட் ஷாவின் மற்றொரு புதல்வரான முஷபர் ஷா உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் ஷா உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[5]

வட சுமத்திராவை ஆட்சி செய்த அச்சே அரசு, மலாக்காவை ஆட்சி செய்த போர்த்துகீசிய அரசு போன்ற அப்போதைய அரசுகளுடன் நீண்ட கால சண்டை சச்சரவுகளில் ஜொகூர் அரசு ஈடுபட வேண்டிய நிலைமையும் இருந்து வந்தது. இந்தக் காலகட்டங்களில் நட்பு மலாய் மாநிலங்களும், டச்சுக்காரர்களும் ஜொகூர் சுல்தானகத்துடன் தோழமை பாராட்டி வந்தனர்.

போர்த்துகீசியர்களுக்கு அச்சுறுத்தல்

அலாவுதீன் ரியாட் ஷா உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[6]

1641ஆம் ஆண்டு ஜொகூர் அரசின் உதவியுடன் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஜொகூர் அரசு மலர்ச்சி பெற்ற வணிகத் தளமாகப் புகழ் பெற்றது. இருப்பினும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட உள்நாட்டு விரிசல்களினால் ஜொகூர் அரசின் மேலாண்மை மங்கிப் போனது.[7]

டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிம்

18ஆம் நூற்றாண்டில், சுலாவாசியைச் சேர்ந்த பூகிஸ்காரர்களும், சுமத்திராவைச் சேர்ந்த மினாங்காபாவ்காரர்களும் ஜொகூர்-ரியாவ் பேரரசின் அரசியல் ஆற்றல்களைக் கட்டுப்படுத்தி வந்தனர். 1855-இல் சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கும் ஜொகூர் மாநிலத்தின் சுல்தான் அலிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ஜொகூர் அரசு, டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிமிடம் ஒப்படைக்கப் பட்டது.

டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிம், ஜொகூர் மாநிலத்தின் தென்பகுதியில் தஞ்சோங் புத்ரி எனும் ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார். இந்த நகரம் தான் இப்போதைய ஜொகூர் பாரு ஆகும். தெமாங்கோங் டத்தோ இப்ராஹிமிற்குப் பின்னர் அவருடைய புதல்வர் டத்தோ தேமாங்கோங் அபு பாக்கார் ஜொகூர் சுல்தானகத்தின் அரியணையில் அமர்ந்தார்.

நவீன ஜொகூரின் தந்தை

இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் அவருக்கு ஸ்ரீ மகாராஜா ஜொகூர் எனும் சிறப்புப் பெயரை வழங்கினார். சுல்தான் அபு பாக்கார் ஜொகூர் மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்தார். பிரித்தானிய பாணியிலான ஓர் அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்தினார். எதிர்கால சுல்தான்களுக்காக ஓர் அதிகாரத்துவ அரண்மனையையும் கட்டினார்.

ஜொகூர் மாநிலத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும் பெரும் சேவைகளைப் பாராட்டும் வகையில் அவர் ‘நவீன ஜொகூரின் தந்தை’ எனும் சிறப்பு அடைமொழியுடன் இப்போதும் அழைக்கப் படுகின்றார். சுல்தான் அபு பாக்காரின் சேவைகளை ஜொகூர் மக்கள் இன்றும் பாராட்டி வருகின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.