நஜீப் ரசாக்

முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக் (Mohd Najib bin Tun Haji Abdul Razak; பிறப்பு: ஜூலை 23, 1953) மலேசியாவின் அரசியல்வாதியும் மலேசியாவின் ஆறாவது பிரதமரும் ஆவார். 2004, ஜனவரி 7 ஆம் நாளில் இருந்து மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த இவர் 2009,

நஜீப் ரசாக்
Najib Razak

நா.உ.
نجيب رازق
6-வது மலேசியப் பிரதமர்
பதவியில்
3 ஏப்ரல் 2009  10 மே 2018
அரசர் மிசான் சைனல் அபிதீன்
அப்துல் ஆலிம்
ஐந்தாம் முகம்மது
துணை முகியுதீன் யாசின்
அகமது சாயிது அமீது
முன்னவர் அப்துல்லா அகுமது பதவீ
பின்வந்தவர் மகாதீர் பின் முகமது
அம்னோ தலைவர்
பதவியில்
26 மார்ச் 2009  12 மே 2018
துணை முகியுதீன் யாசின்
அகமது சாயிது அமீது
முன்னவர் அப்துல்லா அகுமது பதவீ
பின்வந்தவர் அகமது சாயிது அமீது (பதில்)
நிதி அமைச்சர்
பதவியில்
23 செப்டம்பர் 2008  10 மே 2018
பிரதமர் அப்துல்லா அகுமது பதவீ
இவரே
முன்னவர் அப்துல்லா அகுமது பதவீ
பின்வந்தவர் லிம் குவான் எங்
9-வது மலேசிய துணைப் பிரதமர்
பதவியில்
7 சனவரி 2004  3 ஏப்ரல் 2009
பிரதமர் அப்துல்லா அகுமது பதவீ
முன்னவர் அப்துல்லா அகுமது பதவீ
பின்வந்தவர் முகியுதீன் யாசின்
12-வது பகாங் அரசுத்தலைவர்
பதவியில்
4 மே 1982  14 ஆகத்து 1986
முன்னவர் அப்துல் ரசீத் அப்துல் ரகுமான்
பின்வந்தவர் காலில் யாக்கோபு
மலேசிய பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகத் தலைவர்
பதவியில்
1998–1999
வேந்தர் அகமது சா
முன்னவர் அன்வர் இப்ராகீம்
பின்வந்தவர் சானுசி யூனித்
பெக்கான் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 அக்டோபர் 1986
முன்னவர் முகமது அமீன் தாவூத்
பதவியில்
21 பெப்ரவரி 1976  29 மார்ச் 1982
முன்னவர் அப்துல் ரசாக் உசேன்
பின்வந்தவர் முகமது அமீன் தாவூது
பகாங் மாநில சட்டமன்ற உறுப்பினர், பந்தார் பெக்கான் தொகுதி
பதவியில்
22 ஏப்ரல் 1982  3 ஆகத்து 1986
முன்னவர் சாம்சியா அப்துல் அமீது
பின்வந்தவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு முகமது நஜீப் பின் அப்துல் ரசாக்
23 சூலை 1953 (1953-07-23)
கோலா லிப்பிஸ், மலாயா
அரசியல் கட்சி அம்னோ - தேசிய முன்னணி (1976–)
வாழ்க்கை துணைவர்(கள்) சாயினா எசுக்காந்தர் (1976–1987)
ரோசுமா மன்சோர் (1987–இன்று)
பிள்ளைகள் 5
இருப்பிடம் கோலாலம்பூர்
படித்த கல்வி நிறுவனங்கள் நொட்டிங்காம் பல்கலைக்கழகம்
கையொப்பம்
இணையம் www.najibrazak.com/en/

ஏப்ரல் 3 ஆம் நாளில் இருந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நஜிப் துன் ரசாக் மலேசியாவின் 2ஆவது பிரதமர் அப்துல் ரசாக்கின் மகனாவார். மலேசியாவில் மிகவும் இளம் வயதில் எம்.பி ஆன முதல் நபர் என்ற பெருமையும் நஜீப்க்கு உண்டு. தந்தையின் மறைவைத் தொடர்ந்து 22ஆம் வயதில் பெகான் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

9 மே 2018 வரை இவர் மலேசியாவின் 6ஆவது பிரதமராகப் பொறுப்பு வகித்தார். 9 மே 2018இல் நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அதி பெரும்பான்மையைத் தக்கவைக்க தவறியதால் பக்கத்தான் கூட்டணியிடம் ஆட்சி மாற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மகாதீர் பின் முகமது 7ஆவது மலேசிய பிரதமராக 10 மே 2018இல் பதவியேற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் 23 ஜூலை 1953-யில் புக்கிட் பியூஸ்-யில் அமைந்துள்ள பகாங் மாநில செயலாளர் இல்லத்தில் பிறந்தார்.[2] மலேசியா இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக்கின் மூத்த மகனாவார். இவருக்கு மலேசியாவின் மூன்றாவது பிரதமரான ஹூசின்ஒண்ணுடனும் ரத்த தொடர்புள்ளது. இவரது கடைசி தம்பியானவர் மலேசிவின் இரண்டாவது பெரிய வங்கியான பூமிபுத்ரா-கமெர்ஸ் ஹோல்ட்டிங் பெர்ஹாட்-யின் நிருவாக்கியவார். இவர் தனது ஆரம்பகால கல்வியை சென்ட் ஜான்ஸ் இன்ஸ்டிடூஷன் கோலாலம்பூரில் பயின்றார். பின்னர் இங்கிலாந்திலுள்ள மல்வேர்ன் காலேஜ்-யில் கல்வியை தொடர்ந்தார். 1974-ஆம் ஆண்டு, நொட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இவர் தொழில்நுப்ப பொருளாதார துறையில் இளங்கலை பட்டம்பெற்றார். நாட்டிற்கு திரும்பியபின் இவர் மலேசிய மதியவங்கியலிலும் பின்னர் அரசாங்க நிறுவனமான பெட்ரோனாஸ்-லும் (Petronas) பணியாற்றினார்.

அரசியல் கொள்கைகள்

இவரது தலைமைத்துவத்தின் கீழ் மலேசியாவில் சில முக்கிய அரசியல் கொள்கைகள் மாற்றம் கண்டன. அவற்றுள் முக்கியமானவை GST என அழைக்கப்படும் பொருள் சேவை வரி 1 ஏப்ரல் 2015 ல் துவங்கப்பட்டது. BR1M என அழைக்கப்பட மக்கள் உதவித்தொகை திட்டத்தையும் இவர் தொடங்கிவைத்தார்.[3][4]

ஒரே மலேசியா (1Malaysia ) எனப்படும் தேசியனிலை கொள்கையை இவர் 16 செப்டம்பர் 2008 ல் அறிமுகப்படுத்தினார்.[5] மலேசியர்களிடையே ஒற்றுமை, நல்லொழுக்கம்,சிறந்த அடைவுநிலை போன்ற நற்பண்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த ஒரேமலேசியா கொள்கை வரையப்பட்ட்து. TN50 தூரநோக்கு கொள்கையையும் இவர் 2017ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்பொழுது அறிமுகப்படுத்தினார். இது முந்தைய தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்ட wawasan 2020 கொள்கையை வேரறுக்கும் வகையில் அமைந்ததாகப் பலர் குற்றம்சாட்டினார்.[6]

சர்ச்சைகள்

1MDB எனப்படும் முதலீட்டு நிறுவனத்தை 2009 ஆண்டு தொடங்கி வைத்தார். மலேசியர்கள் சராசரி வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இருப்பினும் 2016 வரை உலக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிதி மோசடிக்கு இந்த 1MDB வழிவிட்டது. 2009 துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகளில் இந்த 1MDB நிறுவனம் 42 பில்லியன் மலேசிய ரிங்கிட் கடன்சுமைக்கு ஆளானது.

2 ஜூலை 2015இல் The Wall Street Journal ரி.ம. 2.672 பில்லியன் 1MDB நிறுவன கணக்கில் இருந்து நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது.[7] இந்த செய்தியை வெளியிட்டதிற்காக The Wall Street Journal மீது வழக்கு தொடுக்கப்போவதாக நஜிப் அறிவித்தார். இருந்த பொழுதும் இதுவரை நஜிப் அப்படி எந்தஒரு வழக்கையும் பதிவுசெய்யவில்லை. ஆரம்பத்தில் தனது வங்கிக் கணக்கில் இந்தப் பணம் செலுத்தப்பட்டதை மறுத்தபொழுதும் பின்னர் இந்த பணம் தனக்கு அரபு அரசக் குடும்பத்தினரால் பரிசாகக் கொடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

வழக்கு விசாரணை

3 ஜூலை 2018 ல் இவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். எஸ். ஆர். சி. இன்டர்நேஷனல்  (SRC International ) என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து நாஜிபியின் சொந்த வங்கி கணக்கிற்கு ரி.ம. 42 மில்லியன்  (USD 10.6 மில்லியன்) தொகை மாற்றப்பட்ட விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.[8][9] அதன் மறுநாள் 4 ஜூலை 2018 ல் நஜிப் கோலாம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.தனது மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து விசாரணை கூறினார். பிறகு ரி.ம. 1 மில்லியன் உத்திரவாத தொகையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு 18 பிப்ரவரி 2019ல் விசாரணைக்கு வருகின்றது.[10]

19 செப்டம்பர் 2018ல் நஜிப் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விசாரணையில் இருந்தபொழுது மீண்டும் கைது செய்யப்பட்டார். 1MDB நிறுவன விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அவர் 2013 ஆவது ஆண்டு பெற்ற ரி.ம. 2.6 பில்லியன் நன்கொடை சம்பந்தப்பட்ட வழக்கிற்காகவும் கைது செய்யப்பட்டார். மறுநாள் செப்டம்பர் 20, 2018, கோலாம்பூர் உயர் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக 25 குற்றசாட்டுகள் தொடுக்கப்பட்டன. அவைகளை மறுத்து நஜிப் விசாரணை கோரினார். பின்னர் ரி.ம. 3.5 மில்லியன் உத்தரவாத தொகையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. http://thatstamil.oneindia.in/news/2009/04/03/world-najib-razak-sworn-in-malaysian-pm.html
  2. "https://www.sayangsabah.com/en/midwife-proud-to-have-cared-for-najib/". Sayang Sabah.
  3. ""1 Malaysia's People Aid (BR1M)"". Barisan Nasional.
  4. "Goods and Services Tax (Malaysia)" (in en), Wikipedia, 2018-08-28, https://en.wikipedia.org/w/index.php?title=Goods_and_Services_Tax_(Malaysia)&oldid=856878076, பார்த்த நாள்: 2018-08-28
  5. "1Malaysia". 1Malaysia.
  6. "Najib mahu legasi lama berlalu, perkenal visi baru TN50". Malaysiakini.
  7. "Investigators Believe Money Flowed to Malaysian Leader Najib’s Accounts Amid 1MDB Probe". Dow Jones & Company.
  8. "Former Malaysian PM Najib Razak arrested, to be charged on Wednesday over 1MDB scandal". Channel News Asia.
  9. "Najib arrested". The Star Online.
  10. "Malaysia's ex-PM Najib charged with corruption over 1MDB". BBC.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.