சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்

சேந்தமங்கலம் (ஆங்கிலம்:Sendamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் வட்டம் ஆகும்.

தத்தகிரி முருகன் கோயில்
சேந்தமங்கலம்
  நகரம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. மேக்ராஜ், இ. ஆ. ப.
மக்கள் தொகை 18,085 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பார்க்க வேண்டிய இடங்கள்

தத்தகிரி முருகன் கோயில் , சிவன் கோயில், சேந்தமங்கலம் , கொல்லிமலை,பெருமாள் கோயில்.நைனாமலை வரதராசப் பெருமாள் கோயில்

நைனாமலை

மக்கள் வகைப்பாடு

       இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,085 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவர். சேந்தமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 73%,  பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். சேந்தமங்கலம் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அரசியல்

     சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி), இராசிபுரம் மக்களவைத் தொகுதிக்கு (தனி) உட்பட்டது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெயர்: சாந்தி (தே.மு.தி.க கட்சி)[4] சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி) நாமக்கல் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியுமே மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதிகளாகும். மற்ற அனைத்து தனி தொகுதிகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்கானது.

புதிய வட்டமாக மாற்றம்

    புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேந்தமங்கலம் வட்டத்தில் சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய குறுவட்டங்களும், நாமக்கல் வட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, நல்லிபாளையம், கீரம்பூர், மோகனூர், வளையப்பட்டி ஆகிய குறுவட்டங்களும் அடங்கியிருக்கும். ரூ.2.66 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலக புதியக் கட்டடம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு, ரூ.38.13 லட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய குறுவட்ட அளவையர்களுக்கு குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சேந்தமங்கலம் - புதன்சந்தை சாலையில் பச்சுடையாம்பட்டி புதூர் கிராமம், சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் பின்புறமுள்ள சோளமுத்து ஆலை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வருவாய்த்துறையின் சேவைகளை பெற சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. http://www.assembly.tn.gov.in/election2006/pollupd/ac/states/s22/Partycomp95.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.