கொன்சாலோ கார்சியா
புனித கொன்சாலோ கார்சியா (1556 – 5 பெப்ரவரி 1597) இந்தியாவில் பிறந்த உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் ஆவார். மும்பையின் மேற்கில் அமைந்துள்ள வாசை என்னும் நகரில் பிறந்தவர்.[1] இவர் ஆரம்ப காலத்தில் பாஸ்ஸின் கோடை போர்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அங்கே மறைபணியாற்றினார். இவரின் விழா நாள் பெப்ரவரி 5[1]
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
இந்தியாவில் கிறித்தவம் |
---|
![]() |
பின்னணி |
Nasrani St. Thomas Christians Ancient Crosses of India(history) Synod of Diamper Coonan Cross Oath |
நபர்கள் |
தோமா (திருத்தூதர்) பிரான்சிஸ் சவேரியார் கொன்சாலோ கார்சியா அல்போன்சா முட்டத்துபடத்து Thomas of Cana Fr. Kuriakose Elias Chavara Fr. Varghese Palakkappillil Mar Augustine Kandathil Mar Sapor and Prodh Marthoma Metrans St. Baselios Eldho St. Gregorios of Parumala St. Geevarghese Alvares Mar JuliusMar Dionysius வில்லியம் கேரி தேவசகாயம் பிள்ளை அன்னை தெரேசா |
திருச்சபைகள் |
Andhra Evangelical Lutheran Chaldean Syrian Church of North India தென்னிந்தியத் திருச்சபை Jacobite Syrian கத்தோலிக்க திருச்சபை Malankara Malankara Orthodox Syrian Malabar Independent Syrian Mar Thoma Presbyterian St. Thomas Evangelical Syro-Malabar Catholic Syro-Malankara Catholic The Pentecostal Mission |
![]() |
கொன்சாலோ கார்சியா | |
---|---|
![]() | |
பிறப்பு | 1556 en:Vasai, மும்பை |
இறப்பு | 5 பெப்ரவரி 1597 நாகசாகி மலைகள், சப்பான் |
ஏற்கும் சபை/சமயம் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
புனிதர் பட்டம் | திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்-ஆல் ஜூன் 8, 1862 |
முக்கிய திருத்தலங்கள் | கொன்சாலோ கார்சியா கோவில், காஸ், வாசை |
திருவிழா | பெப்ரவரி 5 |
பாதுகாவல் | பாம்பே உயர் மறைமாவட்டம் |
துவக்க வாழ்க்கை

கொன்சாலோ கார்சியாவின் இயற்பெயர் குன்டி ஸ்லாவுஸ் கார்சியா[2]. இவர் ஒரு போர்த்துக்கீச தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் 1556 இல் பிறந்தார்.[1][2] ஜாப்பான் பிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்திஸ்டின் வலக்கரமாக இவர் இருந்தார்.[2]
இவர் வாசையில் பணியாற்றிய செபஸ்தியோ கான்கால்வ்ஸ் என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார்.[1] தனது 15-ஆம் அகவையில் குரு. செபஸ்தியோவுடன் சப்பான் சென்றார். சப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவது பல கிளைகள் கொண்டு பரவியது.[1]
இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் பிலிப்பீன்சு நாட்டில் உள்ள மணிலாவுக்குச் பொதுநிலை மறைபணியாளராய் சென்றார்.[1] அங்கே பிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்திஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார்.[1] தொழு நோய்யாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.[1]
இறப்பு
மே 26, 1592 பிலிப்பீன்சு நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக சப்பானுக்கு அனுப்பப்பட்டனர்.[1] நான்காண்டுகள் பணிபுரிந்தபின்னர், அப்போது சப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டனர். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.[1]
ஜனவரி 3, 1597, அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறித்தவ்ர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.
பெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரேடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும் வரை இறப்புகழ் பாடிக்கொண்டே இருந்தார்..[1]
புனிதர் பட்டமளிப்பு
1927 கார்சியாவும் அவருடன் இரத்தசாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பனால் அறிவிக்கப்பட்டனர்.[1] ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் இவர்களுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.[1]
இவர் ஒரு போத்துக்கீச தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப்புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூரவ பட்டியலில் போத்துக்கீச புனிதராவார். இதனால் புனித அல்ஃபோன்சா இந்தியாவின் முதல் புனிதர் ஆவார்.
மேற்கோள்கள்
- "St. Gonsalo Garcia". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- List of the 26 Martyrs at Twenty-Six Martyrs Museum
வெளி இணைப்புகள்
- Gonsalo Garcia at Patron Saints Index
- Twenty-Six Martyrs Museum Home Page
- St. Gonsalo (Gundisalvus, Gonzalo) Garcia, O. F. M.