சீனிவாசன் (நடிகர்)

பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனராவார். 2013 சனவரி 13 இல் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார்.[2] இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

சீனிவாசன்
பிறப்பு மதுரை, தமிழ்நாடு, இந்தியா

[1]

தொழில் நடிகர், அக்குபஞ்சர் மருத்துவர்
நடிப்புக் காலம் 2010-தற்போது

கைது

2012 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார். இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.[3]

2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.[4]

2018 டிசம்பர் 7 இல் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.[5]

2018 டிசம்பர் 13 இல் பவர் ஸ்டாரை கடத்தியது யார் என தெரிந்தது! - திடுக்கிட வைக்கும் பின்னணி![6]

திரைப்பட விபரம்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்
2010உனக்காக ஒரு கவிதை
2010மண்டபம்
2010நீதானா அவன்
2011லத்திக்கா
2011ஆனந்த தொல்லை
2012நானே வருவேன்
2013கண்ணா லட்டு தின்ன ஆசையா
2013[7]
2013யா யா[8]
2013அழகன் அழகி
2013சும்மா நச்சின்னு இருக்கு[9]
2014கோலி சோடாகௌரவத் தோற்றம்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.