தமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அல்லது தமிழ் நாடகங்கள் இது இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகளவு தயாரிக்கப்பட்டு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுககளில் வாழும் தமிழ் மக்களால் பார்க்கப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆகும். குடும்பம், நகைச்சுவை, திகில், காதல், வரலாறு, பக்தி போன்ற பல வித்தியாசமான கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவருகின்றது.
முதல் தமிழ் தொலைக்காட்சி தொடர் 1980ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வாரநாட்களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 2000ஆம் ஆண்டில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை அல்லது திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகுதி 30 இருந்து 1500 பகுதிகளாக ஒளிபரப்பப்படுகின்றது. தற்பொழுது சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, சன் லைப் தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி, சக்தி தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி போன்ற பல தொலைக்காட்சிகள் தமிழில் இயக்குகின்றது.
தற்காலத்தில் உலகம் முழுவது தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டு பகல் நேரத்தொடர்கள் (11:00-15:00), மாலை நேரத்தொடர்கள் (18:00-19:59) மற்றும் இரவுத்நேர தொடர்கள் (பிரைம் டைம்) (20:00-23:00)[1] என பிரிக்க பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. தற்காலத்தில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன.
தோற்றம்
தமிழ் தொடர்கள் முதலில் மேடை நாடகங்களை எடுத்து 1980-1990 வரை காலங்களில் தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் வாரநாட்களில் ஒளிபரப்பு செய்து வந்தது. 1989ஆம் ஆண்டு பாலச்சந்திரன் அவர்கள் இயக்கிய மின் பிம்பங்கள் மற்றும் கை அளவு மனசு (1995) தொடர்கள் தொடர்வடிவம் பெற்று ஒளிபரப்பாகி வெற்றியும் கண்டது.
1993ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியின் வருகைக்கு பிறகு நாகாவின் மர்மதேசம் (1995-1998), பாலச்சந்திரனின் காதல் பகடை (1996-1998)[2], பிரேமி (1999)[3], ஜன்னல் (1998-1999), பாலு மகேந்திராவின் கதை நேரம் போன்ற தொடர்கள் 40 முதல் 200 பகுதிகளாக ஒளிபரப்பானது. 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் உருவானது, வார நாட்களில் ஒளிபரப்பான தொடர்கள் கிழமை நாட்களில் ஒளிபரப்பாக தொடங்கிய காலம். ராதிகாவின் சித்தி, குட்டி பத்மினியின் கிருஷ்ணதாசி போன்ற தொடர்கள் இந்தியா, இலங்கை, போன்ற நாடுகளில் மிகவும் பரிசியமான தொடர்கள் ஆகும்.
நாடுவாரியான தொலைக்காட்சியும் மற்றும் தொடர்ககளும்
சிங்கப்பூர் & மலேசியா தொடர்கள்
சிங்கப்பூர் தமிழ்த் தொடர்கள் தமிழ்நாட்டு தொடரை விட முற்றிலும் வேறுபட்டது. 2008ஆம் ஆண்டு வசந்தம் தொலைக்காட்சி வருகைக்கு பிறகு பல தொடர்கள் ஒளிபரப்பாகி 'ஆசிய தொலைக்காட்சி விருது'களும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் தமிழ்த் தொடர்கள் கொரியா, சீனா தொடர்கள் வடிமாசத்தில் எடுக்கப்படுகிறது. கிழமையில் 4 நாட்கள் ஒளிபரப்புகிறது, தொடர்களின் பகுதிகள் 30 முதல் 60 வரை, 1 முதல் 5 பருவங்கள் எடுக்கப்படுகிறது. இவர்களின் தொடர் நவீன காலத்திற்கு ஏட்ப பிரமாண்டமாக இருக்கும். இவர்களின் கதை அம்சங்கள் இளைஞர்களை கவரும் வகையில் காதல், திகில், மர்மம், அதிரடி, பாடல் காட்சிகள் என பல சிறப்பு அம்சங்களுடன் எடுக்குக்கப்படுகிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சிகளில் தமிழ்நாட்டு தொடர்கள் ஒளிபரப்பும் வழக்கம் உண்டு.
- பிரபலமான தொடர்கள்: வேட்டை, நிஜங்கள், அண்ணாமலை, ரகசியம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
- சிங்கப்பூர் தொலைக்காட்சி அலைவரிசைகள்: வசந்தம் தொலைக்காட்சி, வி தமிழ்.
- சிங்கப்பூர் தொலைக்காட்சி அலைவரிசைகள்: அஸ்ட்ரோ வானவில், ஆஸ்ட்ரோ விண்மீன்.
தமிழ்நாட்டுத் தொடர்கள்
அதிகமக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி தொடர்களில் சன் தொலைக்காட்சிக்கு முதல் இடம். அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி, புதுயுகம் தொலைக்காட்சி தொடர்கள் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்ப கதைகள்தான். ஆரம்பகாலத்தில் வாரநாட்களில் தொடர்களை ஒளிபரப்பாகி வந்ததது, 2000ஆம் ஆண்டு கால பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகியது, 2015ஆம் ஆண்டுக்கு பிறகு சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் போன்ற அலைவரிசைகள் திங்கள் முதல் சனிக்கிழமை தொடர்கள் ஒளிபரப்பாக்கி வருகின்றது.
- பிரபலமான தொடர்கள்: சித்தி, மெட்டி ஒலி, கோலங்கள், அலைகள், திருமதி செல்வம், சரவணன் மீனாட்சி, காதலிக்க நேரமில்லை, தென்றல், செல்வி, அரசி, தங்கம், பொம்மலாட்டம், கல்கி, சிம்ரன் திரை போன்ற பல தொடர்கள்.
இலங்கைத் தொடர்கள்
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி, நேத்திரா டிவி, வசந்தம் தொலைக்காட்சி போன்ற பல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தாலும் அதிகளவான மக்கள் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி தொடர்களையே அதிகமாக பார்க்கின்றனர், தமிழ் நாட்டு தொடர்கள் தமிழர்கள் மற்றும் இன்றி சிங்களவர்களாலும் பார்க்கப்படுகின்றது. இலங்கையில் தமிழ் தொடர்கள் தயாரிப்பது மிகவும் அரிது, இன்றளவும் தமிழ்நாட்டு தொலைக்காட்சி தொடர்களை வாங்கி இலங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்து வரும் வழக்கம் உண்டு. 2014ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் சின்னத்திரை என்ற தலைப்பில் மாதம் ஒரு தொடர் என்ற விகிதத்தில் ஒளிபரப்பு செய்து வந்தது. இலங்கை தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்களை தயாரிப்பதைவிட பல தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றது.
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தீபம் தொலைக்காட்சியில் இலங்கை தமிழர்களால் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட நெடும்தொடர் சித்திரா, இந்த தொடர் ஐரோப்பா நாடுகளில் உள்ள தமிழர்களால் அதிகளவாக பார்க்கப்பட்டது. இந்த தொடர் இலங்கை தொலைக்காட்சியான நேத்திரா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் என்ற தொலைக்காட்சி வருகைக்கு பிறகு ராதிகாவின் ராடான் மீடியா நிறுவனத்துடன் இணைத்து தயாரித்த தொடர் யாழினி, இந்த தொடர் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் முதல் நெடும் தொடர் ஆகும். இந்த தொடர் இலங்கை தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சிலும் ஒளிபரப்பானது. இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நெடும் தொடர் மர்மக்குழல். இந்த தொடர் முற்றிலும் இலங்கை கலைஞர்கள் நடித்த தொடர்.
கதை
ஆரம்ப காலத்தில் (1990-2000) தமிழ் தொடர்களின் கதைகள் குடும்பம், நகைச்சுவை, மர்மம் போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்பட்டது. மற்றும் இந்திரா சௌந்தரராஜானின் நாவல்களை தொடர்களாகவும் எடுக்கும் வழக்கம் இருந்தது. அவ்வாறு எடுக்கப்பட்ட தொடர்கள் (இயந்திர மனிதன், மர்மதேசம், கிருஷ்ணதாசி, விடாது கருப்பு, சிவமயம்) போன்ற பல அடங்கும். நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் ரமணி விஸ் ரமணி, இந்த தொடரை இயக்குனர் இமயம் பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
தற்காலத்தில் தமிழ் தொடர்களின் கதைகள் சந்தர்ப்பத்திற்கு ஏட்ப மாற்றப்படும் வழக்கம் உண்டு. ஒரு தொடர் உருவாகும் பொது முழு கதையையும் எழுதிய பிறகு எடுப்பதில்லை, காரணம் இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குகாக கதைகள் மாற்றப்படும்.
குடும்பக்கதைகள்
தமிழ்த் தொடர்கள் பெரும்பாலும் கூட்டு குடும்ப கதை, கணவன் மனைவி அல்லது மாமியார் மருமகள் கதையை மையமாக வைத்துதான் எடுக்கப்படுகின்றது.
- பிரபலமான குடும்பக்கதைத் தொடர்கள்: சித்தி, மெட்டி ஒலி, திருமதி செல்வம், உறவுகள், தெய்வம் தந்த வீடு, தாயுமானவன்.
காதல்கதைகள்
காதல் தொடர்கள் பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பப்படுகின்றது, தற்பொழுது ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், வசந்தம் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றது.
- பிரபலமான குடும்பக்கதைத் தொடர்கள்: இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை, சரவணன் மீனாட்சி, ரெட்டைவால் குருவி, செம்பருத்தி.
மர்மக்கதைகள்
தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேட்பை பெற்ற கதைகளில் மர்மத் தொடர்களும் அடங்கும். 1995ஆம் காலகட்டத்தில் ஒளிபரப்பான நாகாவின் மர்மதேசம், விடாது கருப்பு போன்ற தொடர்கள் இன்றளவும் மக்களால் அறியப்படுகிறது. இந்த தொடர்கள் தற்பொழுது சிடி வடிவில் விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவைக்கதைகள்
பெரும்பாலும் நகைச்சுவைத் தொடர்கள் வாரநாட்களில்தான் ஒளிபரப்பாகி வந்தந்து. முதல் முதலில் 2010ஆம் ஆண்டு காலத்தில் கிழமை நாட்களில் தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேட்பும் பெற்றது.
பக்திக்கதைகள்
பக்தி தொடருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் உண்டு. பெருமாளுமான பக்தி தொடர்கள் அம்மன், முருகன் அல்லது நாகம் பற்றியே கதை அமைந்து இருக்கும். சரிகம நிறுவனம் தயாரித்த வேலன், ராஜ ராஜேஸ்வரி மற்றும் திரிசூலம், வேப்பிலைகாரி போன்ற தொடர்கள் 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் மிகவும் பிரபலம்.
பழிவாங்கும் தொடர்கள் (Revenge series)
எல்லா அலைவரிசையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பெரும்பாலும் பழி வாங்கும் கதை அம்சங்களில் தான் ஒளிபரப்பாகிறது. இந்த தொடர்கள் திகில் கதை அம்சத்தில் அல்லது குடும்பக்கதை அம்சத்திலும் இருக்கலாம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆதிரா, கங்கா, நந்தினி ஒளிபரப்பாகும் அழகு, நாயகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல தொடர்கள் இதற்குல் அடங்கும்.
வரலாற்றுக்கதைகள்
தமிழ் தொலைக்காட்சியில் வரலாற்று தொடர்கள் தயாரித்து ஒளிபரப்பு செய்வது மிகவும் குறைவு, மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வாய்த்த எடுத்த சந்தனக்காடு, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமானுஜர், வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அண்ணாமலை போன்ற சில தொடர்களை குறிப்பிடலாம்.
தொன்மவியல் கதைகள்
தொன்மவியல் கதைகள் என்பது நாம் அறிந்த கதைகளை பற்றி அல்லது முன்பு நடத்த விடயங்களை பற்றி எடுக்க பட்ட தொடர்கள். உதாரணம்: கடவுள் களின் வாழ்க்கை வரலாறு பற்றிய கதை. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒளிபரப்பான மகாபாரதம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்க்கடவுள் முருகன் போன்றவை அடங்கும்.
இளமைக்கால கதைகள்
இது இளைஞர்களின் கதைகளை கொண்ட வகை, பள்ளி பருவம், கல்லூரிப்பருவம், இளமை பருவம் போன்ற தருணங்களில் அவர்களின் வாழ்கை தருணத்தை கூறும் தொடர்களை இளமைக்காலத் தொடர்கள் என்று அழைக்கப்படும், இதை ஆங்கிலத்தில் டீன் செரிஸ் (Teen Series) என்று சொல்ல்வார்கள். இப்படி பட்ட தொடர்கள் முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தான் 2005ஆம் ஆண்டில் கானா காணும் காலங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பானது., இந்த தொடருக்கு பிறகு கானா காணும் காலங்கள் பருவம் 2, கானா காணும் காலங்கள்-ஒரு கல்லூரியின் கதை, கானா காணும் காலங்கள்-கல்லூரி சாலை, மற்றும் கள்ளி காட்டு பள்ளிக்கூடம் போன்ற பல டீன் தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த தொடர்களை இளைஞர்கள் மட்டும் இன்றி பெரியவர்கள் மத்தியிலும் பிரபலமானது. சிங்கப்பூர் நாட்டு வசந்தம் தொலைக்காட்சியில் வெற்றி, குருபார்வை போன்ற தொடர்கள் பருவ எண்ணிக்கையின் அடிப்படையில் ஒளிபரப்பாகும்.
திகில் கதைகள்
திகில் கதை என்பது பேய்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர். எம்மை அறியாமலே எமக்குள் ஒரு பயத்தை வரவைக்கும் தொடர்களை திகில் தொடர் எனலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காத்து கருப்பு, சுழியம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆதிரா, பைரவி, வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இருள் போன்ற தொடர்கள் இதற்குள் அடங்கும்.
கற்பனைக்கதைகள்
நம்ப முடியாத விடயங்களை வியப்பூட்டும் வகை யில் எடுக்கப்படும் தொடர்கள் கற்பனை தொடர்கள் எனலாம்.
- பிரபலமான கற்பனைக்கதை தொடர்கள்: மமை டியர் பூதம், ஜீ பூம்பா, நந்தினி, சந்திரகுமாரி.
சமூகக்கதைகள்
சமூகத்தில் நடக்கும் ஜாதி, நிறம், ஏழை பணக்காரன் போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள் சமூகத் தொடர்கள் ஆகும். தற்பொழுது கலர்ஸ் தமிழ்லில் ஒளிபரப்பாகும் பேரழகி, சிவகாமி போன்ற தொடர்கள் இதற்குல் அடங்கும்.
தயாரிப்பு
கவிதாலயா, ஏவிஎம், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ், விகடன் டெலிவிஸ்டாஸ், சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், சத்ய ஜோதி படங்கள், விஷன் டைம்ஸ், அவ்னி டெலி மீடியா, பாலாஜி டெலிபிலிம்ஸ், சரிகம, சன் குழுமம் போன்ற நிறுவனங்கள் பல தொடர்களை தயாரித்து வழங்குகின்றது. ஒரு மொழியில் தயாரித்த தொடர்களை வேறு மொழியில் அதே நிறுவனம் தயாரித்து வழங்கும் வழக்கம் தமிழ் தயாரிப்பு நிறுவங்களிடம் உண்டு.
நீண்ட காலமாக ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்
நீல நிறத்தில் இருக்கும் தொடர்கள் தற்போது வரைக்கும் ஒளிபரப்பாகும் தொடர்கள். |
தலைப்பு | முதல் ஒளிபரப்பு | கடைசியாக ஒளிபரப்பப்பட்டது | அத்யாயங்கள் | அலைவரிசைகள் |
---|---|---|---|---|
வள்ளி | திசம்பர் 17, 2012 | 14 அக்டோபர் 2019 | 1,961 | சன் தொலைக்காட்சி |
சரவணன் மீனாட்சி | நவம்பர் 7, 2011 | 17 ஆகத்து 2018 | 1,765 | விஜய் தொலைக்காட்சி |
வாணி ராணி | சனவரி 21, 2013 | 8 திசம்பர் 2018 | 1,743 | சன் தொலைக்காட்சி |
கல்யாணப்பரிசு | பெப்ரவரி 10, 2014 | ஒளிபரப்பில் | 1,683+ | சன் தொலைக்காட்சி |
கோலங்கள் | மே 29, 2003 | 4 திசம்பர் 2009 | 1,533 | சன் தொலைக்காட்சி |
கஸ்தூரி | ஆகத்து 21, 2006 | 31 ஆகத்து 2012 | 1,532 | சன் தொலைக்காட்சி |
தெய்வமகள் | மார்ச்சு 25, 2013 | 17 பெப்ரவரி 2018 | 1,466 | சன் தொலைக்காட்சி |
சந்திரலேகா | அக்டோபர் 6, 2014 | ஒளிபரப்பில் | 1,458+ | சன் தொலைக்காட்சி |
அவர்கள் | சனவரி 7, 2002 | 2 நவம்பர் 2007 | 1,372 | சன் தொலைக்காட்சி |
திருமதி செல்வம் | நவம்பர் 5, 2007 | 22 மார்ச்சு 2013 | 1,360 | சன் தொலைக்காட்சி |
நாதஸ்வரம் | ஏப்ரல் 19, 2010 | 9 மே 2015 | 1356 | சன் தொலைக்காட்சி |
தற்காப்பு கலை தீர்த்த | சனவரி 14, 2002 | 5 அக்டோபர் 2007 | 1,352 | சன் தொலைக்காட்சி |
தென்றல் | திசம்பர் 7, 2009 | 17 சனவரி 2015 | 1,340 | சன் தொலைக்காட்சி |
சாதனை படைத்த தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
- மாயாவி
- இந்த தொடர் முதல் இந்தியா மற்றும் ஆசிய முப்பரிமாண (3D) தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் 2006ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடர் இந்தி, தெலுங்கு மொழி, மலையாளம், மராத்திய மொழி, குஜராத்தி, கொரிய மொழி, மாண்டரின் மொழி, மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உலக நாடுகளில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.[4]
- நாதஸ்வரம்
- சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற தொடரின் ஆயிரமாவது அத்தியாயத்தை மார்ச் 5, 2015ஆம் ஆண்டு காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் இருந்து இடைவேளை இன்றி, தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தக் காட்சியை சரத் கே. சந்தர் ஒளிப்பதிவு செய்தார். உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரே ஷாட்டில், 23 நிமிடங்கள் 25 வினாடிகளில் ஒளிபரப்பான தொடர் ஆகும்.[5][6][7][8]
- மர்மதேசம்
- 1997ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடர் தமிழர்கள் மத்தியில் பிரபலமான தொடர் ஆகும். இந்த தொடர் குறுந்தட்டு வடிவிலும் நல்ல வியாபாரம் செயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- சித்தி
- கல்யாண வீடு
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "சன் தொலைக்காட்சி நேர அட்டவணை" (in en). timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/tv/channel/sun-tv/params/tvchannel/channelid-10000000000570000.
- Rangarajan, Malathi (31 December 2001). "The drive to be different". The Hindu. Archived from the original on 8 November 2012. http://www.hindu.com/thehindu/mp/2001/12/31/stories/2001123100050200.htm. பார்த்த நாள்: 30 September 2013.
- "Premi is one of the classic series of K.Balachandher" (in en). www.nettv4u.com. https://www.nettv4u.com/about/Tamil/tv-serials/premi.
- "India's first 3D TV serial, 'Mayavi' debuts on Jaya TV". exchange4media.com. பார்த்த நாள் 7 October 2006.
- Naig, Udhav (22 March 2014). "Sounds of celebration". The Hindu. பார்த்த நாள் 6 April 2015.
- "சன் டிவி தொடர் உலக சாதனை".
- "சன் டிவி தொடர் உலக சாதனை".
- "Gopi wins Guinness award for best villain" (Tamil).