மர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்)

மர்மதேசம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும். இதனை இயக்குனர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்திரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் 1995 லிருந்து 1998 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. பின்பு ராஜ் தொலைக்காட்சி 1998லிருந்து 2001 வரை ஒளிபரப்பியது. தற்போது இத்தொடரை வசந்த் தொலைக்காட்சி 3 ஆகஸ்ட் 2015 லிருந்து ஒளிப்பரப்பு செய்துகொண்டுள்ளது.[1][2]

மர்மதேசம்
தயாரிப்பு மின்பின்பங்கள்
இயக்கம் நாகா
(ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கும்)
சி. ஜெ. பாஸ்கர்
(சொர்ண ரேகை, இயந்திர பறவை)
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 453
தயாரிப்பு
தயாரிப்பு கைலாசம் பாலசந்தர்
ஓட்டம்  30 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை ராஜ் தொலைக்காட்சி
மறுஒளிபரப்பு சன் தொலைக்காட்சி
வசந்த் தொலைக்காட்சி
பட வடிவம் 576i (SDTV)
முதல் ஒளிபரப்பு 1997
இறுதி ஒளிபரப்பு 2001
புற இணைப்புகள்
வலைத்தளம்

கதை

மீயியற்கை நிகழ்வுகளால் நடப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, அதன் மர்மத்தினை உடைத்து சொல்லுகின்ற வகையில் திரைகதை அமைக்கப்பட்டிருந்து.

  • ரகசியம் - இத்தொடரில் நவபாசான லிங்கத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது..
  • விடாது கருப்பு - கருப்புசாமி எனும் நாட்டார் தெய்வத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
  • சொர்ண ரேகை - கைரேகை சாத்திரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
  • இயந்திர பறவை - வர்மக்கலைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
  • எதுவும் நடக்கும் - கற்பக விருட்சம் எனும் தேவலோகத்து மரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.

நடிகர்கள்

ரகசியம்

  • ஆர். என். கிருஷ்ண பிரசாத் - குருஜி (எ) ஜி. கோவிந்தராஜன்
  • ஆர். என். சுதர்சனம் - ஜி. ரெங்கராஜன்
  • பூவிலங்கு மோகன் - சிபி சிஐடி ஆபிசர் ரகுபதி
  • பிருத்விராஜ் - பிரசாத்
  • டெல்லி கணேஷ் - டாக்டர் கே. ஆர் (பிரசாத்தின் தந்தை)
  • வாசுகி - லலிதா (கோயில் குருக்களின் மகளும், பிரசாத்தற்கு நிச்சயக்கப்பட்டவளும்)
  • ராம்ஜி - மணி சுந்தரம் (கோயில் குருக்களின் மகன்)
  • சாருஹாசன் - ஊமைச்சாமி - பேசாத சித்தர்
  • கவிதாலையா கிருஷ்ணன் - வைத்தியர் ராமச்சந்திரன்
  • சதாசிவம் - சித்தர்பட்டி கோயில் பூசாரி
  • மோகன் ராமன் - டாக்டர் விஷ்வராம்
  • நிம்மி - தேவி
  • இந்திரா சௌந்தரராஜன் - எழுத்தாளர் சிறீகாந்த்
  • டிகேஎஸ் சந்திரன் - செட்டியார்
  • நளினிகாந்த் - அண்ணாமலை
  • மோகனப்பிரியா - அம்சவல்லி
  • சுபலேகா சுதாகர் - அக்னிராசு
  • அஜய் ரத்தினம் - சிபி-சிஐடி அலுவலர்
  • இடிச்சப்புளி செல்வராசு - பெருமாள் செட்டி
  • மயில்சாமி - சந்தான கிருஷ்ணன் (கே. ஆர் மருத்துவமனையில் வேலை செய்பவர்)
  • ராமசந்திரன் - காண்ஸ்டெபில் மாணிக்கம்

விடாது கருப்பு

  • சேத்தன் - ராஜேந்திரன்
  • தேவதர்சினி - ரீனா
  • மாஸ்டர் லோகேஷ் - சிறுவயது ராஜேந்திரன்
  • சி. டி. ராஜகாந்தம் - பேச்சி
  • மீனாக்குமாரி - ரத்னா (ராஜேந்திரன் சகோதரி)
  • மோகன் ராமன் - டாக்டர் நந்தா
  • சதாசிவம் - ஆனைமுடி நாயக்கர், பேச்சியின் மூத்த மகன்
  • ராமச்சந்திரன் - பேச்சியின் இளைய மகன்
  • பூவிலங்கு மோகன் - ஆசிரியர் வரதராஜன்
  • சிவக்கவிதா - ஆனைமுடி நாச்சியாரின் சகோதரி
  • பொன்வண்ணன் - பரமன் (ஆனைமுடி நாச்சியார் கொழுந்தன்)
  • வித்யாசாரதி - அரவிந்த்
  • சுரேஷ்வர் - சண்முகம்
  • அஜய் ரத்தினம் - நாட்டர் தெய்வம் கருப்புசாமி (சில பகுதிகளிலும் தலைப்பு பாடலிலும்)

சொர்ண ரேகை

இயந்திர பறவை

  • பூவிலங்கு மோகன் - காவல்துறை அதிகாரி அன்வர்
  • பிரியா மகாலட்சுமி-டாக்டர் வித்யா
  • வித்தியாசாரதி - கேமிராமேன் பாலு (டிவி9 சேனலினில் பணிபுரிபவர்)
  • வேணு அரவிந்த் - எம்.பி. பொன்னம்பலம்
  • சேத்தன் - காசிநாதன் (ஆசானின் வளர்ப்பு மகன்)
  • சுபலேகா சுதாகர் - குமாரசாமி (டிவி9 சேனல் உரிமையாளர்)

எதுவும் நடக்கும்

  • சுரேஷ்வர் - நாடி முத்து
  • மோகன் வித்யா - நடராஜ் (எ) நட்டி
  • பூவிலங்கு மோகன் - மூப்பர்
  • தேவதர்சினி - வர்சா (சத்தங்களை பதிவுசெய்பவர்)
  • பொன்வண்ணன் - சதாசிவம் (வன அதிகாரி)
  • வித்யாசாரதி - சித்தார்த் (வனஉயிர்களை படமாக்கும் நடராஜனின் மாணவர்)
  • ராமச்சந்தின் - இருசன்
  • சமுத்திரக்கனி - மலைவாழ் மனிதன் (முதல் எபிசோடில்)
  • டி. கே. எஸ். சந்திரன் - வானத்துமனிதர்களில் ஒருவர்
  • சதாசிவம் - வானத்துமனிதர்களில் ஒருவர்

ஆதாரங்கள்

  1. "Marmadesam retelecast on Vasanth TV".
  2. "Marmadesam serial on Vasanth TV".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.