கொரியா
கொரியா என்பது கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும். இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி கொரிய மொழியாகும். 1948 இல் கொரியா பிரிந்து வட கொரியா, தென்கொரியா என்று ஆனது. கொரியக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் தென் கொரியா திறந்த பொருளாதரத்தைக் கொண்ட, ஜனநாயக முறையைக் கொண்ட வளர்ந்த நாடாகும். ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக கூட்டமைப்பு(WTO) G20 போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளில் உறுப்பினராக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளது. வட கொரியா அதிகாரபூர்வமாக ஜனநாயக மக்கட் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. மூடிய பொருளாதாரக் கொள்கையுடையது.
கொரியா |
||
---|---|---|
![]() Location of கொரியா |
||
தலைநகரம் | சியோல், பியொங்யாங் 37°32′N 126°59′E | |
பெரிய conurbation (population) | சியோல் | |
ஆட்சி மொழி(கள்) | கொரிய மொழி | |
பரப்பு | ||
• | மொத்தம் | 2,20,186 கிமீ2 (84th if ranked) 85,020 சதுர மைல் |
• | நீர் (%) | 2.8 |
மக்கள் தொகை | ||
• | 2007 கணக்கெடுப்பு | 72,326,462 (18th if ranked) |
• | அடர்த்தி | 328.48/km2 850.7/sq mi |
நாணயம் | Won (₩) (N/S) | |
நேர வலயம் | KST/PYT (ஒ.அ.நே+9/+8.5) |
அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் மொழியாராய்ச்சிச் சான்றுகளும் கொரிய மக்கள் தென் மத்திய சைபீரியாவிலிருந்து குடியேறிய ஆதிவாசிகளாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. கொரிய மொழி இரண்டாம் நூற்றண்டில் சீன எழுத்து முறையை ஏற்றுக் கொண்டது. கொரிய மக்கள் நாலாம் நூற்றாண்டில் பௌத்தத்தை தழுவினர். இவ்விரண்டு நிகழ்வுகளும் கொரிய வரலாற்றில் முக்கியப் பங்காற்றும் கொரிய முப்பேரரசில் செழுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.
யோசான் வம்சாவளியினர் கொரியாவின் வரலாற்றில் பெரும் பாங்காற்றினர். 1910 இல் ஜப்பானின் நாடு பிடிக்கும் கொள்கையினால் அடிமையானது. இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை ஜப்பானின் பிடியில் கொரியா இருந்தது. 1945 இல் 38 ஆம் கடகக் கோட்டுக்கு வடக்கே சோவியத் ஒன்றியமும், தெற்கே அமெரிக்காவும் ஜப்பானியப் படைப்பிரிவுகளின் சரணை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச் சிறிய நிகழ்வு கொரியாவின் பிரிவினையில் மிகப் பெரிய பங்காற்றியது. உருசியாவம் அமெரிக்காவும் கொரிய விடுதலையின் பின் அதை இரண்டாகப் பிரித்து அவர்களுக்கு எற்ற அரசுகளை பதவியில் ஏற்றி பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டன.