வீரப்பன்

வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் [2][3] ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.

கூசு முனிசாமி வீரப்பக்கவுண்டர்
வீரப்பன்
பிறப்புசனவரி 18, 1952(1952-01-18)
கோபிநத்தம், கருநாடகம், இந்தியா
இறப்பு18 அக்டோபர் 2004(2004-10-18) (அகவை 52)[1]
பாப்பாரப்பட்டி, தருமபுரி, தமிழ்நாடு
கல்லறைமூலக்காடு, சேலம், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்வீரப்பன்
பணிஆட்கடத்தல்
யானை வேட்டை
சந்தனமரம் கடத்தல்
பெற்றோர்கூசு. முனிசாமி கவுண்டர்
புலித்தாயம்மாள்
வாழ்க்கைத்
துணை
வீ. முத்துலட்சுமி
பிள்ளைகள்வீ. யுவராணி
வீ.பிரபா

மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன.

இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர்), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.

US$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US$22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.[4] வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா அல்லது கொன்று விட்டு சுட்டார்களா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மோரில் விஷம் கலந்து வீரப்பனை குடிக்க வைத்து விட்டுத்தான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.

இவர் கொல்லப்படும் வரை இவரை பிடித்து கொடுப்பவர்க்கு 5 கோடி (US$820,000) சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.[5]

ஆரம்ப வாழ்கை

வீரப்பன் 18 சனவரி, 1952 ஆம் ஆண்டு தமிழ் வன்னியர் சமுதாயத்தில்,[6][7] கருநாடக மாநில எல்லைப்பகுதியான கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.[8][9][10]

குடும்பம்

வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.[11]

குற்றவாளி வாழ்க்கை

தன் கூட்டாளிகளோடு வீரப்பன்

சந்தனமர கடத்தல் செய்த தனது உறவினர் செவி கவுண்டரிடம் உதவியாளராக சேர்ந்து தனது குற்றவாளி வாழ்க்கையை தொடங்கினார் வீரப்பன்.[12] 1972 ஆம் ஆன்று முதன்முறையாக வீரப்பன் கைது செய்யப்பட்டார்.[1]

சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களே வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர்.[13]

1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது.[14] 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். அதற்கு அடுத்த வருடம் ஆகத்து மாதம் உயர் காவல்துறை அதிகாரி ஹரிகிரிஷ்ணா உட்பட பல காவல்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார்.

வீரப்பன் பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. ஒருமுறை, காவல்துறையினரின் வாகனத்தில் பயணித்த தனது கிராமவாசியை கொன்றானர். யாரையேனும் காவல்த்துறை உளவாளி என சந்தேகித்தால் கொன்று விடுவது வீரப்பனுடைய வழக்கம். அரசியல் களேபரங்கள் காரணமாக, வீரப்பன்னால் மாநிலம் விட்டு மாநிலம் தாண்ட முடிந்தது.[15]

  • நக்கீரன் ஆசிரியர் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் வ. கவுதமன் அவர்களால் இயக்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
  • காவல்துறையின் சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் கி. விஜயகுமார் சனவரி, 2017 ஆம் ஆண்டு வீரப்பன்: சேஷிங் தி பிரிகண்ட் எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.[16]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Oliver, Mark (19 October 2004). "Death of a 'demon'". The Guardian. http://www.guardian.co.uk/world/2004/oct/19/india.markoliver.
  2. https://timesofindia.indiatimes.com/india/Farmers-turned-Veerappans-killer-aides/articleshow/18493017.cms
  3. https://timesofindia.indiatimes.com/india/Unravelling-an-Enigma/articleshow/892009.cms
  4. http://www.hindu.com/2004/10/19/stories/2004101916450100.htm
  5. http://edition.cnn.com/2004/WORLD/asiapcf/10/18/india.bandit/index.html
  6. "வீரப்பனுக்கு வீர வணக்க சுவரொட்டிகள்". இந்து தமிழ் (19 அக்டோபர், 2014)
  7. "வீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால்". பிபிசி தமிழ் (18 ஜனவரி 2018)
  8. http://www.theguardian.com/world/2004/oct/19/india.markoliver
  9. http://www.ipcs.org/article/india/profiling-a-poacher-the-rise-and-fall-of-veerappan-1547.html
  10. http://www.britannica.com/EBchecked/topic/1912483/Veerappan
  11. http://www.veethi.com/india-people/veerappan-profile-507-40.htm
  12. Harding, Luke (5 August 2000). "In the lair of India's asthmatic bandit king". London: Guardian. http://www.guardian.co.uk/world/2000/aug/05/india.kashmir. பார்த்த நாள்: 27 August 2012.
  13. timesofindia, com. (19 October 2004). "How Veerappan was shot dead". The Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2004-10-19/india/27165183_1_tamil-nadu-wily-brigand-special-task-forces. பார்த்த நாள்: 27 August 2012.
  14. "Veerappan : End of three decades of terror". Coimbatore: The Times of India. 19 October 2004. http://articles.timesofindia.indiatimes.com/2004-10-19/india/27164569_1_veerappan-gang-gopinatham-stf. பார்த்த நாள்: 12 September 2012.
  15. Estevez, Benita. Smugglers. R.W.Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781909284081. http://books.google.com/?id=ZLqYgJHuuHMC&pg=PT75&dq=veerappan+politicians. பார்த்த நாள்: 22 February 2013.
  16. [ http://www.dinakaran.com/News_detail.asp?Nid=275235 முன்னாள் போலீஸ் அதிகாரி எழுதிய வீரப்பன் வேட்டை புத்தகம் வெளியீடு]

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.