திமிஷ்கு

தமசுகசு அல்லது திமிஷ்கு (ஆங்கிலம்:Damascus, அரபு மொழி: دمشق Dimashq) என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் (ஆங்கிலம்:ash-Sham, அரபு மொழி: الشام ash-Shām) என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்மின் (ஆங்கிலம்:City Of Jasmineஅரபு மொழி: مدينة الياسمين Madīnat al-Yāsmīn) என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.[3] தமசுகசு, லெவண்ட்டின் பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.[2]

தமஸ்கு
ஆங்கிலம்:Damascus, دمشق
அடைபெயர்(கள்): சிட்டி ஆப் ஜாஸ்மின்
நாடு சிரியா
பிரதேசம்தமசுகசு, தலைநகரம்
அரசு
  ஆளுநர்பிஷர் அல் சப்பான் (Bishr Al Sabban)
பரப்பளவு[1]
  நகரம்105
  நகர்ப்புறம்77
ஏற்றம்680
மக்கள்தொகை (2009 est.)[2]
  நகரம்1
இனங்கள்Damascene
நேர வலயம்EET (ஒசநே+2)
  கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+3)
தொலைபேசி குறியீடுநாட்டுக் குறியீடு: 963,
நகரக்குறியீடு: 11
இணையதளம்www.damascus.gov.sy
அலுவல் பெயர்தமசுகசுவின் பழங்கால நகரம்
வகைகலாச்சார
வரன்முறைi, ii, iii, iv, vi
தெரியப்பட்டது1979 (3rd session)
உசாவு எண்20
மாநிலக் கட்சிசிரியா
பிரதேசம்அராப் மாநிலம்

2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் தமசுகசு அமைந்துள்ளது.[4] மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நடுநிலக்கடலுக்கு 80 கிலோமீட்டர்கள் (50 mi) கிழக்குக் கரையாக, 680 மீட்டர்கள் (2,230 ft) கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு பீடபூமியில் இது அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையில் ஓடுகிறது.

கி.மு இரண்டாவது மில்லேனியத்தில் இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அப்போது 661 தொடக்கம் 750வரை உமையா கலீபகத்தின் தலைநகரமாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. அப்பாசியக் கலீபகத்தின் வெற்றியின் பின்னர் இசுலாம் பக்தாத்திற்கு நகர்ந்தது.

நிலவியல்

செய்மதி படத்தில் வசந்த கால தமாசுகசு

தமாசுகசு கடல் மட்டத்திற்கு மேலே ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது, மத்தியதரைக்கடலில் இருந்து சுமார் 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள நிலப்பரப்பில், அண்டி- லெபனான் மலைகள் அடிவாரத்தில், பராடா ஆறு இந்நகரில் ஒடுகிறது. மேலும் இந்நகரமானது வர்த்தக பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது: எகிப்தை ஆசிய மைனருடன் இணைக்கும் வடக்கு-தெற்கு பாதை, மற்றும் லெபனானை ஐபிரெட்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குடன் இணைக்கும் கிழக்கு-மேற்கு குறுக்கு-பாலைவழி வழி ஆகியவற்றின் பாதையில் அமைந்துள்ளது. லெபனான் மலைகள் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையில் எல்லையாக இருக்கிறது. இதன் முகடு 10,000 அடிக்கு மேல் உள்ளது. இதனால் மத்தியதரை கடலில் இருந்து வரும் மழை மேகங்களை இம்மலை தடுத்து விடுவதால், இது ஒரு மழை மறைவுப் பிரதேசமாக ஆகி  தமாசுகசு பிராந்தியம் சில நேரங்களில் வறட்சிக்கு உட்படுகிறது. எனினும், பண்டைய காலங்களில் இந்த சிக்கல் பாரடா ஆற்றினால் குறைக்கப்பட்டது, இது மலையில் ஏற்படும் பனிப்பொழிவால் உறைந்த பனிப்பகுதிகளிலிருந்து தோன்றுகிறது. தமாசுகசை சூழந்துள்ள கௌடா பாலைவனச் சோலையின் உதவியோடு, நீர்ப்பாசன பண்ணைகளால், பலவகையான காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவை பண்டைய காலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. தமாசுகசின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் ஒரு ஏரிக்குள் இருந்து பராடா ஆறு வெளியேறுவதாக பழங்கால ரோம சிரியா வரைபடம் குறிப்பிடுகிறது. இன்று அது பஹிரா அத்தாபா என அழைக்கப்படுகிறது.

நவீன நகரம் 105 km2 (41 sq mi) பரப்பளவில் உள்ளது, இதில் 77 km2 (30 sq mi) நகர்ப்புறமாகவும், மீதம்   ஜபல் கசான்னுன் மலைப்பகுதி ஆகும். [5]

தமாசுகசு பழைய நகரமானது, நகரின் சுவர்களால் மூடப்பட்டிருக்கிறது, இது பாரடா ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது, இது கிட்டத்தட்ட வறண்ட நிலமாக (3 செமீ (1 அங்குலம்) இடது) உள்ளது. தென்கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் புறநகர்பகுதிகள், இதன் வரலாற்றில் இடைக்காலம்வரை நீண்டுள்ளது: தென்மேற்கில் மிடன், சரஜா மற்றும் இமாரா வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ளன. இந்த சுற்றுப்பகுதிகளானது நகரத்திலிருந்து வெளியேறும் சாலைகளில், மதத் தலைவர்களின் சமாதிகளுக்கு அருகில் உருவாயின. 19 ஆம் நூற்றாண்டில், ஜபல் கசான்சோ மலைச் சரிவுகளால் உருவான கிராமங்கள், நகரத்தால் உள்வாங்கப்பட்டது. கிறிஸ்துவ ஆட்சியின் கீழ் விழுந்த ஒட்டோமான் பேரரசின் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து வந்த குர்தீசு படைவீரர்கள் மற்றும் முஸ்லீம் அகதிகள் இந்த புதிய அண்டைப் பிரதேசங்களில் குடியேறினார்கள். இவ்வாறு குடியேறிய இவர்கள் அல்-அகிராட் (குர்துகள்) மற்றும் அல்-முஜஜிரின் (குடியேறியவர்கள்) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பழைய நகரின் வடக்கே 2-3 கிமீ (1-2 மைல்) தொலைவில் உள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, நவீன நிர்வாகமாக மற்றும் வணிக மையமானது பழைய நகரத்தின் மேற்கு நோக்கி வசந்தகாலமாக பாரடாவை சுற்றி, அல்-மர்ஜே அல்லது புல்வெளி என அழைக்கப்படும் பகுதியில் மையமாக கொண்டு தோன்றியது. அல்-மர்ஹே விரைவில் நவீன தமஸ்கஸின் மத்திய சதுக்கத்தில் இருந்த நகரத்தின் பெயராக மாறியது. நீதிமன்றம், அஞ்சல் அலுவலகம், தொடர்வண்டி நிலையம் ஆகியவை சற்று தெற்கே உயர்ந்த நிலப்பகுதியில் உருவாயின. ஒரு ஐரோப்பிய குடியிருப்பானது விரைவில் அல்-மர்ஹே மற்றும் அல்-சலிஹியாவிற்கும் இடையிலான பாதையில் கட்டப்பட்டது.   புதிய நகரத்தின் வர்த்தக மற்றும் நிர்வாக மையம் படிப்படியாக இந்த பகுதிக்கு வடக்கே மாற்றப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டில், புதிய புறநகர் பகுதிகள் பாரடாவின் வடக்கே வளர்ந்தன.   1956-1957 ஆண்டுகளில் தமாசுகசின் அண்டைப் பகுதியான யூர்மொக்கினானது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளில் இரண்டாவது பிரதேசமாக மாறியது. [6] நகர திட்டமிடலாளர்கள் கூடுமானவரை கௌடாவைப் பாதுகாக்க விரும்பினர், மேலும் 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் சில வடக்கில் உள்ள பகுதிகளுமாகும்,  இவை வடக்கில் மேற்கு திசமியில் உள்ள பாரடா பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கில் பெர்ஸில் உள்ள மலைகளின் சரிவுகளில் மேற்கு மெஜெஹ் பகுதியின் அண்மையில் உள்ள பகுதிகளாகும். பெரும்பாலும் உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட வறிய மக்களின் பகுதிகளானது, பெரும்பாலும் முதன்மை நகரத்தின் தெற்கே உருவாக்கப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் ((الغوطة al-ġūṭä) புராட ஆற்றினால் உருவான ஒரு பாலைவனச் சோலைகள் தமாசுகசை சூழந்துள்ளது. இப்பாலைவனச் சோலைகளை தமாசுகசு தன் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. பஜார் பள்ளத்தாக்குக்கு மேற்கில் உள்ள பிஜே ஸ்பிரிங்கை, நகரத்தின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வீடுகள் மற்றும் தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக புரோடா ஆற்றின் நீரோட்டமானது பெரிதும் குறைந்துவிட்டது, அது கிட்டத்தட்ட உலர்ந்ததுவிட்டது என்றும் கூறலாம். குறைந்த அளவே உள்ள நீர்நிலைகளும் நகரத்தின் சாலைத் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டும், தொழில்துறை கழிவுகள் போன்றவற்றால் நீரோட்டம் மாசுபட்டுள்ளன.

காலநிலை

தட்பவெப்பநிலை வரைபடம்
தமசுகசு
பெமாமேஜூஜூ்செடி
 
 
27.9
 
13
0
 
 
22.7
 
15
2
 
 
16.9
 
19
4
 
 
7.9
 
25
7
 
 
3.3
 
30
11
 
 
0.4
 
34
14
 
 
0
 
37
17
 
 
0
 
36
17
 
 
0.2
 
33
13
 
 
7.1
 
28
9
 
 
21.4
 
20
4
 
 
25.8
 
14
1
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Meteorological Organization[7]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
1.1
 
55
33
 
 
0.9
 
59
35
 
 
0.7
 
66
38
 
 
0.3
 
76
45
 
 
0.1
 
85
51
 
 
0
 
94
58
 
 
0
 
98
62
 
 
0
 
97
62
 
 
0
 
92
55
 
 
0.3
 
82
48
 
 
0.8
 
69
39
 
 
1
 
58
34
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

இதன் காலநிலை கோப்பென்-கெய்கர் வகைப்பாட்டின் படி அண்டி-லெபனான் மலையின் மழை நிழல் விளைவு காரணமாகவும், கடல் நீரோட்டங்கள் நிலவுவதனாலும் குளிர் நிலப்புல்வெளிக் காலநிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[8][9] தமசுகசு கோடைகாலத்தில் குறைந்த ஈரலிப்புடன் சூடாகவும், வறண்டும் காணப்படும். இது குளிர்காலத்தில் குளிராக காணப்படும். சிலவேளைகளில் ஓரளவு மழையும் பெய்யும்; இடைக்கிடை பனிப்பொழிவும் ஏற்படும். இதன் அக்டோபர் தொடக்கம் மே வரையிலான வருடாந்த மழைவீழ்ச்சி 130 mm (5 in) ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், தமசுகசு
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 21
(70)
30
(86)
28
(82)
35
(95)
38
(100)
39
(102)
42
(108)
45
(113)
39
(102)
34
(93)
30
(86)
21
(70)
45
(113)
உயர் சராசரி °C (°F) 12.6
(54.7)
14.8
(58.6)
18.9
(66)
24.5
(76.1)
29.7
(85.5)
34.2
(93.6)
36.5
(97.7)
36.2
(97.2)
33.4
(92.1)
28
(82)
20.3
(68.5)
14.2
(57.6)
25.28
(77.5)
தினசரி சராசரி °C (°F) 5.9
(42.6)
7.8
(46)
11
(52)
15.5
(59.9)
20.2
(68.4)
24.4
(75.9)
26.3
(79.3)
26
(79)
23.2
(73.8)
18.1
(64.6)
11.8
(53.2)
7.2
(45)
16.45
(61.61)
தாழ் சராசரி °C (°F) 0.4
(32.7)
1.3
(34.3)
3.7
(38.7)
7
(45)
10.5
(50.9)
14.2
(57.6)
16.9
(62.4)
16.5
(61.7)
13
(55)
8.9
(48)
4
(39)
1.3
(34.3)
10.5
(50.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) −6
(21)
−5
(23)
−2
(28)
−1
(30)
7
(45)
9
(48)
13
(55)
13
(55)
10
(50)
6
(43)
−2
(28)
−5
(23)
-6
(21)
பொழிவு mm (inches) 27.9
(1.098)
22.7
(0.894)
16.9
(0.665)
7.9
(0.311)
3.3
(0.13)
0.4
(0.016)
0
(0)
0
(0)
0.2
(0.008)
7.1
(0.28)
21.4
(0.843)
25.8
(1.016)
133.6
(5.26)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 7 7 5 3 1 0 0 0 0 2 4 6 35
சராசரி பனிபொழி நாட்கள் 1 1 0 0 0 0 0 0 0 0 0 0 2
சூரியஒளி நேரம் 164.3 182 226.3 249 322.4 357 365.8 353.4 306 266.6 207 164.3 3,164.1
Source #1: BBC Weather[10]
Source #2: World Meteorological Organization[7] Hong Kong Observatory (sunshine: 1961–1990)[11]
Source #3:
Meoweather (snowy days)[12]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Albaath.news statement by the governor of Damascus, Syria (அரபு மொழி), April 2010
  2. Central Bureau of Statistics in Syria: Chapter 2: Population & Demographic Indicators Table 3: Estimates of Population actually living in Syria in 31 December 2011 by Mohafazat and six (in thousands)
  3. வார்ப்புரு:Cite concrete
  4. Central Bureau of Statistics Syria Syria census 2004
  5. "DMA-UPD Discussion Paper Series No.2". Damascus Metropolitan Area Urban Planning and Development (October 2009). மூல முகவரியிலிருந்து 2012-10-28 அன்று பரணிடப்பட்டது.
  6. The palestinian refugees in Syria. Their past, present and future. Dr. Hamad Said al-Mawed, 1999
  7. "World Weather Information Service – Damascus". World Meteorological Organization. பார்த்த நாள் 1 August 2013.
  8. M. Kottek; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15: 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif. பார்த்த நாள்: 1 August 2013.
  9. Tyson, Patrick J. (2010). "SUNSHINE GUIDE TO THE DAMASCUS AREA, SYRIA". www.climates.com. பார்த்த நாள் 26 November 2010.
  10. "Average Conditions Damascus, Syria". BBC Weather (July 2011). மூல முகவரியிலிருந்து 2006-02-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 November 2010.
  11. "Climatological Information for Damascus, Syria". Hong Kong Observatory.
  12. "Weather history for Damascus, Dimashq, Syrian Arab Republic". பார்த்த நாள் 7 January 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.