அலெப்போ

அலெப்போ (Aleppo, அரபு மொழி: حلب / ஹலப்), சிரியாவின் வடமேற்குப் பகுதியில் திமிஷ்கிலிருந்து 310 கிலோமீட்டர்கள் (193 மைல்கள்) தொலைவிலுள்ள ஓர் பெரிய நகரமாகும்.[3] சிரியாவின் மிகுந்த மக்கள்தொகை உள்ள ஆளுநகரகமான (மாநிலம்) அலெப்போ ஆளுநகரத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2,132,100 (2004 கணக்கெடுப்பு) மக்கள்தொகை உள்ள இந்தநகரம் பெரிய சிரியா அல்லது சாம் என அழைக்கப்படும் இப்பகுதியிலேயே மிகப் பெரிய நகரமாகவும் உள்ளது.[4][5]பண்டைய அலெப்போ நகரம் பல நூற்றாண்டுகளாகவே பெரிய சிரியாவின் மிகப்பெரும் நகரமாகவும் உதுமானியப் பேரரசில் இசுதான்புல், கெய்ரோ அடுத்து மூன்றாவது பெரிய நகரமாகவும் இருந்து வந்துள்ளது.[6][7][8]

அலெப்போ
حلب
Ḥalab
அடைபெயர்(கள்): ஆஷ்-ஷாபா
நாடு சிரியா
ஆளுநரகம்அலெப்போ ஆளுநரகம்
மாவட்டம்மவுண்ட் சீமோன் (ஜபால் செமான்)
அரசு
  ஆளுநர்மொகமது வாகிது அக்காடு
  நகரமன்ற தலைவர்மொகமது அய்மன் அல்லாக்
பரப்பளவு
  நகரம்190
ஏற்றம்379
மக்கள்தொகை (2004 கணக்கெடுப்பு)
  நகரம்2
  அடர்த்தி11
  பெருநகர்2
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
  கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+3)
தொலைபேசி குறியீடுநாட்டுக் குறியீடு: 963
நகரக் குறியீடு: 21
இணையதளம்www.alp-city.org
மூலங்கள்: அலெப்போ நகரப் பகுதி[1] மூலங்கள்: நகர மக்கள்தொகை [2]

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.