1601
1601 (MDCI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். இவ்வாண்டு 17-ஆம் நூற்றாண்டின் முதலாம் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1601 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1601 MDCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1632 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2354 |
அர்மீனிய நாட்காட்டி | 1050 ԹՎ ՌԾ |
சீன நாட்காட்டி | 4297-4298 |
எபிரேய நாட்காட்டி | 5360-5361 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1656-1657 1523-1524 4702-4703 |
இரானிய நாட்காட்டி | 979-980 |
இசுலாமிய நாட்காட்டி | 1009 – 1010 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 6 (慶長6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1851 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 3934 |
நிகழ்வுகள்
- சனவரி 1 - 17-ஆம் நூற்றாண்டின் முதலாம் நாள்.
- பெப்ரவரி 8 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியின் நீண்ட கால நம்பிக்கைக்குரியவராக இருந்த எசெக்சின் இரண்டாம் இளவரசர் ராபர்ட் டெவெரோ மகாராணிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவரது கிளர்ச்சி விரைவில் அடக்கப்பட்டு அவருக்கு பெப்ரவரி 25 இல் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படது.
- இளவேனிற்காலம் - சேக்சுபியரின் ஆம்லெட் நாடகம் முதற்தடவையாக அரங்கேற்றப்பட்டது.[1][2]
- மலாக்காவில் டச்சுp படையினர் போர்த்துக்கீசியப் படைகளைத் தாக்கினர்.
- மிங் அரசமரபு காலத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரின் பேரரண் நகருள் முதற்தடவையாக இயேசு சபையின் மத்தேயோ ரீச்சி நுழைந்தார். முதன் முதலாக அங்கு சென்ற ஐரோப்பியரும் இவரே.
- உருசியாவின் சாராட்சியில் பெரும் பஞ்ச நிலைமை (1601-1603) ஏற்பட்டது. இதன் போது 2 மில்லியன் பேர் இறந்தனர்.
- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் நாயக்க மன்னராக முடிசூடினார்.
- பத்மநாபபுரம் அரண்மனை கட்டப்பட்டது.
பிறப்புகள்
- ஆகத்து 17 - பியரே டி பேர்மட், பிரெஞ்சு கணிதவியலாளர் (இ. 1665)
இறப்புகள்
- அக்டோபர் 24 - டைக்கோ பிராகி, டென்மார்க்கு வானியலாளர் (பி. 1546)
- மகான் ஸ்ரீவாதிராஜர், மத்வ குருமார் வரிசையில் இரண்டாவது குரு (பி. 1481)
மேற்கோள்கள்
- Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. பக். 166–168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7126-5616-2.
- Edwards, Phillip, தொகுப்பாசிரியர் (1985). Hamlet, Prince of Denmark. New Cambridge Shakespeare. Cambridge University Press. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-29366-9. "Any dating of Hamlet must be tentative." Scholars date its writing as between 1599 and 1601.
1601 நாட்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.