சனவரி 28
சனவரி 28 (January 28) கிரிகோரியன் ஆண்டின் 28 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 (நெட்டாண்டுகளில் 338) நாட்கள் உள்ளன.
<< | சனவரி 2019 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXIX | ||||||
நிகழ்வுகள்
- 814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.
- 1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- 1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.
- 1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
- 1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.
- 1918 – பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
- 1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.
- 1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.
- 1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.
- 1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.
- 1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா அமெரிக்க வான்படையின் டி-39 சாப்ரெலைனர் சோவியத் மிக்-19 போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
- 1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
- 2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
பிறப்புகள்
- 1600 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)
- 1611 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1687)
- 1786 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (இ. 1854)
- 1853 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1895)
- 1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1928)
- 1899 – கரியப்பா, இந்தியத் தரைப்படையின் படைத்தலைவர் (இ. 1993)
- 1912 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (இ. 1956)
- 1925 – இராஜா இராமண்ணா, இந்திய இயற்பியலாளர், அரசியல்வாதி (இ. 2004)
- 1931 – பேபி சரோஜா, 1930களின் குழந்தை நடிகை (இ. 2019)
- 1938 – தோமசு லின்டால், நோபல் பரிசு பெற்ற சுவீடன்-ஆங்கிலேய உயிரியலாளர்
- 1940 – கார்லொசு சிலிம், மெக்சிக்கோ தொழிலதிபர்
- 1945 – ஜான் பெர்க்கின்ஸ், அமெரிக்க எழுத்தாளர்
- 1955 – நிக்கொலா சார்கோசி, பிரான்சின் 23வது அரசுத்தலைவர்
- 1976 – மாளவிகா அவினாஷ், தென்னிந்திய நடிகை
- 1981 – எலியா வுட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1986 – சுருதி ஹாசன், தென்னிந்திய நடிகை, பாடகி
- 1992 – மியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 814 – சார்லமேன், உரோமைப் பேரரசர் (பி. 742)
- 1547 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)
- 1687 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (பி. 1611)
- 1851 – இரண்டாம் பாஜி ராவ், மராத்தியப் பேரரசர் (பி. 1775)
- 1939 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1865)
- 1996 – தேவ காந்த பருவா, இந்திய அரசியல்வாதி (பி. 1914)
- 2002 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடன் எழுத்தாளர் (பி. 1907)
- 2008 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- 2018 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (பி. 1943)
சிறப்பு நாள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.