பெப்ரவரி 29

பெப்ரவரி 29 (February 29 அல்லது leap day, லீப் நாள்) கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. பெப்ரவரி 29 வரும் ஒரு ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. இந்த நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான பெரும்பாலான ஆண்டுகளில் மட்டுமே (எடுத்துக்காட்டு: 2000, 2004, 2008 என்பன) வருகிறது. எனினும், நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளான 1900, 2100 போன்றவை நெட்டாண்டுகளல்ல.

<< பெப்ரவரி 2019 >>
ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
2425262728
MMXIX

நெட்டாண்டுகள்

அநேகமான இன்றைய நாட்காட்டிகள் 365 நாட்களைக் கொண்டிருந்தாலும், பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிவருவதற்கு (சூரிய ஆண்டு) கிட்டத்தட்ட 365 நாட்களும் 6 மணித்தியாலங்களும் எடுக்கின்றது. மேலதிகமான இந்த 24 மணித்தியாலங்கள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டு, மேலதிக ஒரு முழுமையான நாள் சூரியனின் தோற்றநிலைக்கு ஏதுவாக நாட்காட்டிகளில் சேர்க்கப்படுகிறது.

எனினும், சூரிய ஆண்டு உண்மையில் 365 நாட்கள் 6 மணித்தியாலங்களை விட சிறிது குறைவாகும். குறிப்பாக, அல்போன்சிய அட்டவணையின் படி, பூமி சூரியனை முழுமையாகச் சுற்றி வர 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 16 செக்கன்கள் (365.2425 நாட்கள்) எடுக்கிறது. இதனால், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு மேலதிக நாளை சேர்ப்பதால் நாட்காட்டியில் 43 நிமிடங்கள் 12 செக்கன்கள் மேலதிகமாக சேர்க்கப்படுகின்றன. இது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்களாகும். இந்தக் குறைபாட்டை சமப்படுத்த, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் மூன்று லீப் நாட்கள் கைவிடப்பட வேண்டும். பொது விதிக்கு விதிவிலக்காக கிரெகொரியின் நாட்காட்டி குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் படி, 100 ஆல் வகுக்கப்படும் ஒரு ஆண்டு நெட்டாண்டாக இராது. ஆனால் அந்த ஆண்டு 400 ஆல் வகுக்கப்பட்டால் அந்த ஆண்டு நெட்டாண்டாக இருக்கும். அதாவது, 1600, 2000, 2400, 2800 ஆகியவை நெட்டாண்டுகளாக இருக்கும். அதே வேளையில் நானூறால் வகுக்கப்படாத ஆனால் நூறால் வகுக்கப்படும் 1700, 1800, 1900, 2100, 2200, 2300 போன்றவை நெட்டாண்டுகளாக இராது.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

அரிதான லீப் நாள் மைல்கற்கள்

உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார்.

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.