திங்கள் (கிழமை)

திங்கட்கிழமை (Monday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி சந்திரனுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.

  • Monday என்னும் சொல் Moon என்னும் சந்திரனைக் குறிக்கும். Mani அல்லது Mona (சந்திரன்) என்ற கடவுளின் பெயரில் இருந்து இது பிறந்தது. ரஷ்ய மொழியில் понедельник (பனிஜெல்னிக்), அதாவது ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் எனப் பொருள்படும்.
  • சீன மொழியில் இந்நாள் xingqi yi (星期一) என அழைக்கப்படும். இதன் பொருள் வாரத்தின் முதல் நாள் என்பதாகும்.
  • 'திங்கள்' என்னும் சொல் மாதம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் கையாளப்படுகிறது.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

}

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.