கிராமக் கணக்காளர்

கர்ணம் அல்லது கணக்குப் பிள்ளை (ஆங்கிலம்: Village accountant) என்பவர் இந்திய துணைக் கண்டத்தின் கிராமப்புறங்களில் காணப்படும் நிர்வாக அரசாங்க கிராமக் கணக்காளர் ஆவர்.

வரலாறு

பட்வார் (கிராமக் கணக்காளர்) முறை முதன்முதலில் இந்திய துணைக் கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறுகிய கால, சேர் சா சூரியின் ஆட்சியில் ஆகும். என்றாலும் அக்பர் பேரரசரால் இந்த அமைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சகாப்தம் இதில் மேலும் சிறிய திருத்தங்களைச் செய்தது. ஆனால் இந்த முறையைத் தொடர்ந்தது.

1814 ஆம் ஆண்டில், அனைத்து கிராமங்களும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முகவராக ஒரு கணக்காளரை (தலாத்தி) நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. [1] மகாராஷ்டிர குல்கர்னி நில உரிமையாளர் முறை 1918 இல் ஒழிக்கப்பட்டது. கிராமக் கணக்காளரின் புதிய அலுவலகத்திற்கு அனைத்து சாதியினரும் நியமிக்கப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில், இவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளாகவும் இருந்துள்ளனர். குல்கர்னி நில உரிமையாளர் முறையை ஒழித்தது ஒரு முற்போக்கான நடவடிக்கையாக கருதப்பட்டது. [2]

இந்த வார்த்தை சமஸ்கிருத மூல தால் என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு சபதத்தை நிறைவேற்றுவது, நிறுவுவது அல்லது சரிசெய்வது என்பதாகும். [3]

தலாத்தி (கிராமக் கணக்காளர்)

தலாத்தி என்பது இந்தியாவின் குஜராத்தி மற்றும் மராத்திய மொழிகளில் உள்ள ஒரு சொல்லாகும். இது இந்திய மாநிலங்களான குசராத்து, மகாராட்டிரம் மற்றும் கர்நாடகத்தின் கிராமப்புறங்களில் உள்ள கிராமக் கணக்காளரின் அலுவலகத்தைக் குறிக்கப் பயன்பட்டது. அலுவலகம் மற்றும் அதில் பணிபுரிபவர் இருவரும் தலாத்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இதை தங்கள் குடும்ப பெயராக இதை ஏற்றுக் கொண்டனர். ஒரு தலாத்தியின் கடமைகளில் கிராமத்தின் பயிர் மற்றும் நில பதிவுகளை பராமரித்தல் (உரிமைகளின் பதிவு), வரி வருவாய் வசூல், நீர்ப்பாசன நிலுவை வசூல் ஆகியவை அடங்கும். குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குல்கர்னியின் நில உரிமையாளர் பதவியை தலாத்தியின் பதவி மாற்றியது. ஒரு தலாத்தியின் கடமைகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் வேறு பெயர்களில் கூறப்படுகின்றன, எடுத்துக்காட்டாக தலாத்தி தெலங்காணாவில் பட்வாரி என்று அழைக்கப்படுகிறது. முதலில் நிலம் வைத்திருக்கும் ஒரு எழுத்தர் ஒருவர் தற்போது தலாத்தி என்ற பெயரில் அரசாங்கத்தால் நியமிக்கப்படு ஊதியம் பெறும் அதிகாரியாகிறார். கிராமத்திற்கு வெளியில் இருந்து வந்த பட்டீல் என்ற ஊர்த்தலையாரி (குஜராத் மாநிலத்தில் படேல் ) தலாத்திக்கு வருவாய் வசூலிப்பதில் உதவுகிறார். தலாத்தியால் பராமரிக்கப்படும் பதிவுகள் களத்தில் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஏனெனில் குடும்பத்தின் வயது வந்த ஆண் உறுப்பினரின் பெயரை நில உடைமைக்கு பயன்படுத்துவதற்கான பழங்குடி வழக்கத்தை தலாத்திடி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நிர்வாகத்தின் மத்தியில், தலாத்திக்கு கிராம மக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. [4] தலாத்தி பொதுவாக ஒரு சாஸா என்று அழைக்கப்படும் கிராமங்களின் குழுவிற்குப் பொறுப்பானவர் ஆவார். இவர்கள் பொதுவாக சாஸாவுக்குள் வசிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்கள் வெளியே வசிக்கவேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறவேண்டும். இருப்பினும் பெரும்பான்மையான தலாத்திகள் இந்த விதியை மீறுவதாக கண்டறியப்பட்டது. [5] தலாத்திகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிராமண சாதியைச் சேர்ந்தவரக இருந்தனர். [6] இவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதால் கிராமங்களில் அனைவருக்கும் பொதுவாக பார்க்கப்படுகிறார். [7]

தலாத்தியின் கடமைகள்

1814 ஆம் ஆண்டில், தலாத்தியின் கடமைகளில் கிராம பதிவுகளை பாதுகாத்தல், அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்தல் மற்றும் கிராமத்தலைவர் மற்றும் கிராம உயரடுக்கினர் உள்ளிட்ட தனிநபர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தல் ஆகியவை அடங்கும். [1]

1882 ஆம் ஆண்டில், பம்பாய் மாகாணத்தின் கெசட்டியர் தலாதியின் கடமையை சுமார் 8 லிருந்து 10 கிராமங்கள் வரை ஒரு கிராம கணக்காளரின் கடமையாக பொறுப்பாக்கியுள்ளது. இதற்கான தலாத்தியின் ஊதிய அளவு ஆண்டுக்கு £ 12 - £ 18 (ரூ. 120 - ரூ. 180). தலாத்தி இந்த கிராமங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமத்திற்குச் சென்று மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தலாத்தி பின்னர் இந்த தேவைகளை துணைப்பிரிவு அலுவலகத்தில் உள்ள துணை பிரிவு மேலாளரிடம் தெரிவிக்கவேண்டும். கூடுதலாக, தலாத்தி ஒவ்வொரு நில உரிமையாளருக்கும் நில உரிமையாளர்களின் நிலுவைத் தொகையைக் காட்டும் கணக்கை வழங்க வேண்டும். [8] ஆகஸ்ட் 1891 இல் ஒரு தலாத்தி பெறும் ஊதியத்தின் மூலம் அவர் ஏழையாக இருந்தார் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. [9]

1884 ஆம் ஆண்டில், எல்பின்ஸ்டோன் கூறுகையில், அரசாங்கத்தின் திட்டங்களை மேம்படுத்துவதில் தலாத்திகளின் கடமைகள் மிகச் சிறந்தவை. ஆனால் அவர்கள் படேலின் அதிகாரத்தை குறைக்கும் ஒரு போக்கு உள்ளது. தலாத்திகள் படேலின் கடமைகளில் தலையிடாமல் இருக்க அவர்களின் அதிகாரத்தை இயல்பான எல்லைக்குள் கொண்டு வர கவனமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. தலாத்திகளின் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதும் மக்களின் புகார்களைப் பெற்று வருவதும் நியமனம் கிராமத் தலைவர்களால் எதிர்மறையாகக் கருதப்பட்டது. கிராமத்தில் அல்லது மாவட்டத்தில் பரம்பரை கணக்காளர் இல்லாதபோது குல்கர்னி அல்லது கிராமத்தலைவரால் தலாத்திகள் நியமிக்கப்பட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தரவுகளை சேகரிப்பதும் தலாத்தியும் கடமைகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மிருகசீரிட நட்சத்திரத்திற்குப் பிறகு நிகழும் வருடாந்திர நடவடிக்கையாகும்.

தலாத்தியின் சகாக்கள் வங்காளத்தில் பட்வாரி, ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் கர்ணம், மற்றும் தமிழ்நாட்டில் கணக்குப் பிள்ளை என அழைக்கப்படுகிறார்கள். [10] [11]

தமிழ்நாட்டில் ஒழிப்பு

இந்த கிராம கர்ணம் முறையானது தமிழ்நாட்டில் ஒரு பரம்பரை வேலையாக இருந்தது. சில கிராமங்களில் இந்த கர்ணம் வேலை செய்பவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகர்கள் இருந்தன. இதனால் 1980 ஆம் ஆண்டு இந்த கிராம கர்ணம் பதவியை இரவோடு இரவாக தமிழ்நாடு அரசு ஒழித்து. அவர்களின் பொறுப்புகளை கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை உருவாக்கி அவர்களிடம் ஒப்படைத்தது.[12]

குறிப்புகள்

  1. Chaturvedi, Vinayak (2007). Peasant pasts: history and memory in western India. University of California Press. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-25078-9.
  2. Naqvi, K. A. (1978). The Indian economic and social history review. HighWire Press. பக். 15.
  3. Monier-Williams, Sir Monier (1963). A Sanskrit-English dictionary. Motilal Banarasidas. பக். 440. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-3105-5.
  4. Gazetteer of the Bombay Presidency: Thana.
  5. Evaluation of Land Reforms: General report.
  6. The socio-economic structure of the Indian village: surveys of villages in Gujarat and West Bengal. Institute of Asian Economic Affairs.
  7. Writings of Mountstuart Elphinstone.
  8. Gazetteer of the Bombay Presidency: Thana. 1882. பக். 573.
  9. Shelly, C. E. (1892). Transactions of the Seventh International Congress of Hygiene and Demography. பக். 116.
  10. Shukla, J. D (1976). State and district administration in India. பக். xii, 63.
  11. Baden-Powell, Baden Henry (1896). The Indian village community: examined with reference to the physical, ethnographic, and historical condition of the provinces; chiefly on the basis of the revenue-settlement records and district manuals. பக். 598, 735–736.
  12. வருவாய் வாரியம் மீண்டும் வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு, 2019, மே, 7, தினமலர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.