பிரான்சுக் கோட்டை

பிரான்சுக் கோட்டை (Fort-de-France, French pronunciation: [fɔʁ də fʁɑ̃s]) பிரான்சின் கரிபியன் கடல்கடந்த திணைக்களமான மர்தினிக்கின் தலைநகரம் ஆகும். இது கரிபியனில் உள்ள முதன்மையான நகரங்களில் ஒன்றாகும். இங்கிருந்து சர்க்கரை, ரம் (மதுபானம்), கலனிலடைத்த கனிகள், கொக்கோ ஏற்றுமதியாகின்றன.

பிரான்சுக் கோட்டை

லெசு இத்துவா ஐலெட்சிலிருந்து வரும் கப்பலிலிருந்து காட்சி
மர்தினிக்கில் நகராட்சியின் (கம்யூன்) அமைவிடம் (சிவப்பாக)
நிர்வாகம்
நாடுபிரான்சு
Overseas region and department மர்தினிக்கு
Arrondissement ஃபோர்ட்-டெ-பிரான்சு
Intercommunality மர்தினிக்கின் மையம்
(Centre de la Martinique)
புள்ளிவிபரம்
ஏற்றம் 0–1,070 m (0–3,510 ft)
நிலப்பகுதி1 44.21 km2 (17.07 sq mi)
மக்கட்தொகை2 85,667  (2012)
 - மக்களடர்த்தி 1,938/km2 (5,020/sq mi)
நேர வலயம் ஒ.ச.நே - 04:00
INSEE/Postal code 97209/ 97200 & 97234
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.
கடலிலிருந்து செயிண்ட் லூயி கோட்டையின் காட்சி
பழைய கோட்டைக்குப் பின்னால் கடற்படைக் கப்பல் வென்டோசு இருப்பதைக் காணலாம்.

புவியியல்

பிரான்சுக் கோட்டை அல்லது பிரான்சின் கோட்டை மர்தினிக்கின் மேற்கு கடலோரத்தில் பிரான்சுக் கோட்டை விரிகுடாவின் வடக்கு முகத்துவாரத்தில் மதாம் ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. மலைகளுக்கும் கடலுக்கும் இடையே உள்ள குறுகிய சமவெளியில் நகரம் அமைந்துள்ளது.இருப்பினும் தீவின் அனைத்துப் பகுதிகளுடனும் சாலைகளால் பிணையப்பட்டுள்ளது.

வரலாறு

1638இல் மர்தினிக்கின் முதல் ஆளுநர் சாக் டியெல் டு பார்க்கெ நகரை பகைவர்களிடமிருந்து காப்பாற்றும் வண்ணம் செயிண்ட் லூயி கோட்டையைக் கட்டினார். 1669இல் பதினான்காம் லூயி பாசு குறுமன்னரை ஆளுநராக நியமித்த பிறகு அழிப்பட்டிருந்த இந்தக் கோட்டை மீண்டும் கட்டப்பட்டது. இவரது கட்டளைப்படியும் பின்னர் வந்தவர்களாலும் இக்கோட்டை மார்ஷல் வாபன் வடித்த கட்டிட வடிவமைப்பின்படி கட்டப்பட்டன.

துவக்கத்தில் இது போர்ட்-ரோயல் என்றழைக்கப்பட்டது; மர்தினிக்கின் இந்த நிர்வாக தலைநகரத்தை விட தீவிலிருந்த பழமையான நகரமான செயிண்ட் பியரெ புகழ் பெற்றிருந்தது. அந்த நகரின் வணிக, பண்பாட்டுச் செயற்பாடுகளால் "கரிபியனின் பாரிசு" எனப்பட்டது.

போர்ட் ரோயல் என்ற பெயர் பிரெஞ்சுப் புரட்சியின்போது சிறிது காலத்திற்கு "போர்ட்-லா-ரிபப்ளிக்கு" (குடியரசுக் கோட்டை) என மாற்றப்பட்டது. 19ஆவது நூற்றாண்டிலிருந்து இது பிரான்சுக் கோட்டை எனப்படுகின்றது. பழைய பெயரான போர்ட் ரோயலின் எதிரொலியாக கிரியோல் மொழியில் "ஃபோயல்" எனப்பட்டு உள்ளூர்வாசிகள் "ஃபோயலிசு" எனப்படுகின்றனர்.

இந்த நகரம் பல பேரிடர்களை எதிர்கொண்டுள்ளது; 1839இல் நிலநடுக்கமொன்று பெரும் சேதம் விளைவித்தது, 1890இல் பெருந்தீயாலும் சேதமுற்றது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1902இல், பெலே மலையின் எரிமலை வெடிப்பால் பழைய நகரமான செயிண்ட் பியரெ முற்றிலும் அழிந்தபிறகு பொருளியல்நிலையில் இதன் முக்கியத்துவம் அதிகரித்தது.

1918 வரை பிரான்சுக் கோட்டை நகரத்தில் குடிநீர் பற்றாக்குறை இருந்தது; சுற்றியிருந்த சதுப்பு நிலங்களால் மஞ்சள் காய்ச்சல் பரவலாக இருந்தது. தற்போது இந்த சதுப்பு நிலங்கள் முற்றிலுமாக வடிக்கப்பட்டு அங்கு புறநகர்ப் பகுதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளம்

இங்கு பிரான்சியக் கடற்படைத் தளம் செயிண்ட் லூயி கோட்டை அமைந்துள்ளது.

காணத்தகு இடங்கள்

செயிண்ட் லூயி கோட்டையைத் தவிர இங்கு மூன்று கோட்டைகள் உள்ளன:

  • தெசெய் கோட்டை
  • டார்ட்டென்சன் கோட்டை
  • கெர்பால்ட் கோட்டை

பிற கவனிக்கத்தக்க இடங்கள் :

  • சாவன்னா பிளேசு (Place de la Savane)
  • சில்சேர் நூலகம்
  • பலாட்டாத் தோட்டம் (Jardin de Balata), என்ற தாவரவியல் பூங்கா
  • பலாட்டா புனித இதய தேவாலயம் (Sacré-Cœur de Balata Church), பாரிசில் உள்ள தேவாலயத்தின் உருவ நேர்ப்படி
  • பிரான்சுக் கோட்டை பேராலயம்:

மர்தினிக்கில் பிறந்து முதலாம் நெப்போலியனின் மனைவியான அரசி ஜோசபின் நினைவாக லா சாவான் தோட்டத்தில் சிலை எடுக்கப்பட்டுள்ளது. இத்தீவில் அடிமை முறை மீளமைக்கப்பட இவர் காரணமாக இருந்தார் எனக் குற்றம்சாட்டி 1990களில் சிலர் இவர் சிலையை சேதப்படுத்தினர்.

வானிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், பிரான்சுக் கோட்டை
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.0
(82.4)
28.2
(82.8)
28.9
(84)
29.7
(85.5)
30.2
(86.4)
30.2
(86.4)
29.9
(85.8)
30.5
(86.9)
30.7
(87.3)
30.3
(86.5)
29.8
(85.6)
28.7
(83.7)
29.6
(85.3)
தினசரி சராசரி °C (°F) 24.7
(76.5)
24.7
(76.5)
25.2
(77.4)
26.0
(78.8)
26.7
(80.1)
27.0
(80.6)
26.9
(80.4)
27.2
(81)
27.1
(80.8)
26.8
(80.2)
26.3
(79.3)
25.4
(77.7)
26.17
(79.1)
தாழ் சராசரி °C (°F) 21.5
(70.7)
21.3
(70.3)
21.5
(70.7)
22.3
(72.1)
23.3
(73.9)
23.9
(75)
24.0
(75.2)
24.0
(75.2)
23.6
(74.5)
23.3
(73.9)
22.8
(73)
22.1
(71.8)
22.8
(73)
பொழிவு mm (inches) 80
(3.15)
60
(2.36)
52
(2.05)
60
(2.36)
73
(2.87)
139
(5.47)
181
(7.13)
202
(7.95)
196
(7.72)
191
(7.52)
195
(7.68)
101
(3.98)
1,530
(60.24)
ஆதாரம்: Climate-Data.org[1]

போக்குவரத்து

பிரான்சுக் கோட்டையின் புறநகர்ப்பகுதியில் மர்தினிக்கு ஐமெ சீசர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இதனை A1 நெடுஞ்சாலை மூலம் அடையலாம்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.