உறொசோ
உறொசோ (Roseau, குவெயோல்: வோசோ) என்பது தொமினிக்கா நாட்டின் தலைநகரம் ஆகும். இங்கு 16,582 பேர் வசிக்கும் இந்த நகரம் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகின்றது. புனித சியார்ச்சு தேவாலய ஆட்புலத்தினுள்ளாகவே அமைந்துள்ள இச்சிறு குடியிருப்பு கரிபியக் கடல், உரோசோ ஆறு மற்றும் மோர்னெ புரூசால் சூழப்பட்டுள்ளது. தொன்மையான கலிநாகோ இந்தியக் குடியிருப்பு, சையிரி, இருந்தவிடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே தொமினிக்காத் தீவில் அமைந்துள்ள மிகத் தொன்மையான, முதன்மையான ஊரக கட்டமைப்பாகவும் இது விளங்குகின்றது.
உறொசோ | |
---|---|
மாநகரம் | |
![]() உல்லாசப் பயணக் கப்பலொன்றிலிருந்து பெறப்பட்ட உறொசோவின் அழகிய தோற்றம். | |
அடைபெயர்(கள்): நகரம் | |
நாடு | தொமினிக்கா |
பங்குத்தளம் | புனித யோர்ச்சு |
அரசு | |
• வகை | உள்ளூராட்சி - உறொசோ நகர சபை 1890களில் நிறுவப்பட்டது |
• புனித நகர பிதா | செசில் யோசேப்பு |
• பா.உ. - உறொசோ மத்தி | கௌரவ நொறிஸ் பிறெவோத்து |
ஏற்றம் | 141 |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 16,582 |
நேர வலயம் | கி.க.நே. |
தொலைபேசி குறியீடு | +1 767 |
இது தொமினிக்காவின் மேற்கு லீவர்டு கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு குடியேற்றக் காலத்து பிரான்சிய கட்டிடக்கலையையும் தற்காலக் கட்டிடப்பாணியையும் ஒருங்கே காணலாம்.
உரோசோ தொமினிக்காவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான முதன்மையான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இங்கிருந்து வாழைப்பழங்கள், மேற்கிந்திய இலங்கப்பட்டை எண்ணெய், காய்கனிகள், கிரேப் பழம், ஆரஞ்சுகள், கொக்கோ கொட்டைகள் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர் பொருள்நிலையில் சேவைத் துறையும் கணிசமான பங்காற்றி வருகின்றது.
இங்குள்ள உரோசோ உரோமானியக் கத்தோலிக்க மறை மாவட்டம் முதன்மையானதாகும்.
காலநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், Roseau | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33 (91) |
34 (93) |
36 (97) |
36 (97) |
36 (97) |
36 (97) |
35 (95) |
35 (95) |
35 (95) |
37 (99) |
35 (95) |
34 (93) |
37 (99) |
உயர் சராசரி °C (°F) | 28.0 (82.4) |
28.0 (82.4) |
28.4 (83.1) |
29.1 (84.4) |
29.6 (85.3) |
30.1 (86.2) |
30.2 (86.4) |
30.5 (86.9) |
30.4 (86.7) |
29.0 (84.2) |
29.6 (85.3) |
28.6 (83.5) |
29.3 (84.7) |
தினசரி சராசரி °C (°F) | 24.9 (76.8) |
24.8 (76.6) |
25.1 (77.2) |
25.8 (78.4) |
26.6 (79.9) |
27.3 (81.1) |
27.4 (81.3) |
27.4 (81.3) |
27.1 (80.8) |
26.1 (79) |
26.2 (79.2) |
25.4 (77.7) |
26.2 (79.2) |
தாழ் சராசரி °C (°F) | 22.8 (73) |
22.8 (73) |
23.8 (74.8) |
23.5 (74.3) |
24.7 (76.5) |
24.5 (76.1) |
26.6 (79.9) |
26.3 (79.3) |
25.8 (78.4) |
24.2 (75.6) |
23.8 (74.8) |
22.2 (72) |
24.25 (75.65) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 16 (61) |
17 (63) |
17 (63) |
18 (64) |
19 (66) |
20 (68) |
21 (70) |
21 (70) |
20 (68) |
18 (64) |
18 (64) |
17 (63) |
16 (61) |
பொழிவு mm (inches) | 159 (6.26) |
107 (4.21) |
135 (5.31) |
122 (4.8) |
220 (8.66) |
162 (6.38) |
181 (7.13) |
243 (9.57) |
298 (11.73) |
334 (13.15) |
374 (14.72) |
240 (9.45) |
2,575 (101.38) |
% ஈரப்பதம் | 71 | 68 | 65 | 64 | 64 | 67 | 72 | 73 | 71 | 73 | 74 | 72 | 70 |
சூரியஒளி நேரம் | 198.9 | 200.6 | 227.3 | 244.9 | 243.2 | 227.7 | 231.2 | 240.4 | 212.2 | 219.5 | 194.0 | 189.5 | 2,629.4 |
Source #1: NOAA[1] | |||||||||||||
Source #2: BBC Weather [2] |
- "Climate Normals for Melville Hall Airport 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்த்த நாள் February 28, 2013.
- "Average Conditions Roseau, Dominica". BBC Weather. பார்த்த நாள் February 28, 2013.